தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
" கிறிஸ்துமஸ் விழா தயாரிப்பு " - ஸ்வேதா அப்புதாஸ்

கிறிஸ்துமஸ் 20221123001015990.jpgபண்டிகை என்று சொல்வதை விட இது ஏசு பிறந்த நாள் விழா என்று தான் அழைக்கிறார்கள் .

நவம்பர் மாத கடைசி ஞாயிற்று கிழமை தான் கிறிஸ்து பிறப்பு விழாவின் முதல் ஞாயிற்று கிழமை திருப்பலி கொண்டாட படுகிறது .

அன்று கடந்து வந்த வருடத்திற்காக நன்றி தெரிவிக்கும் நாள் Thanks giving service என்று எல்லா ஆலயங்களில் நடைபெறும் .

20221123001629158.jpg

கிறிஸ்து பிறப்பு நாளை வரவேற்க நான்கு வாரங்கள் தயாரிப்பில் அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு கேண்டில் ஏற்றி திருப்பலி மற்றும் வழிபாடு நடக்கும் .

நான்கு வாரங்கள் நான்கு கேண்டில் ஏற்றப்படும் முதல் வாரம் ஞாயிற்று கிழமை உதா கலர் கேண்டில் ஏற்றப்படும் அது நம்பிக்கை குறிக்கும் .

இரண்டாவது வாரமும் அதே உதா கேண்டில் அமைதியை குறிக்கும் .

மூன்றாவது வாரம் பிங்க் அல்லது ரோஸ் கலர் கேண்டில் ஏற்றப்படும் அது மகிழ்ச்சியை குறிக்கும் .

நான்காவது வாரம் கேண்டில் வெள்ளை அது அன்பை குறிக்கும் .

இந்த நான்கு வாரங்களும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அரங்கேறும் .

கிறிஸ்துமஸ் தயாரிப்பில் கரோல் பாடல்கள் தான் முதலிடம் .அதிலும் பாரம்பரிய பாடல்களான O'Come all ye faithfull "

Joy to the world , Hark the hearald angel sing. O, little town of Bethlehem , sailent night என்ற பாடல்கள் மிகவும் பிரபலம் உலகம் முழுவதும் உள்ள ஆலய பாடல்குழுவினர் இந்த பாடல்களை பாட மறப்பதில்லை .

ஊட்டியின் முதல் தேவாலயமான செயின்ட் .ஸ்டீபன் சர்ச்சில் ஆயிரம் கேண்டில்கள் ஏற்றப்பட்டு கேண்டில் லைட் பாடல் வழிபாடு நடக்கும் .

20221123003400367.jpg

இந்த வழிபாட்டுக்கு என்று மூன்று மாதம் சிறந்த பயிர்ச்சி நடக்கும் அதை வழிநடத்தும் ராணி ஜெயசீலனை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20221123003813470.jpg

" கிறிஸ்துமஸ் கொண்டாட்டமே கரோல் பாடல்கள் பாடுவது தான் .எங்க ஊட்டி செயின்ட் .ஸ்டீபன் சர்ச் நீலகிரியின் முதல் ஆலயம் வருடந்தோறும் பாரம்பரிய கேண்டில் .

லைட் சர்வீஸ் தான் கிறிஸ்துமஸ் மூடை கொண்டுவரும் .ஆகஸ்ட் மாதமே எங்க பாடகர் குழு பயிற்ச்சியை துவங்கிவிட்டோம் .எங்க குழுவில் முப்பது பாடகர்கள் மற்றும் நான்கு வையலினிஸ்ட் ஆர்கனிஸ்ட் உள்ளனர் .இதில் கோவை குன்னூரில் இருந்து சிங்கர்ஸ் வந்து கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது .

இதில் தவறாமல் மாலை நேரங்களில் அனைவரும் வந்து

பயிற்ச்சி எடுத்து கொண்டதால் தான் நிகழ்வு மிக சிறப்பாக அமைந்தது .அதில் சில சிறுவர்களும் கலந்து கொண்டது அருமை .

இதற்கு முழு ஒத்துழைப்பு உதவி செய்தது பாஸ்டர் .அருண் திலகம் .

20221123010420789.jpg

அனைத்து கரோல் பாடல்களும் இறைவனை புகழ்ந்து பாட எந்த சிரமும் தெரியாமல் சிறப்பாக அமைந்தது .

கிறிஸ்துமஸ் விழாவில் மிக முக்கியமாக இடம்பெறுவது 'சாண்டா கிளாஸ் ' கிறிஸ்துமஸ் தாத்தா கேரக்டர் .

20221123005528470.jpg

செயின்ட் .நிக்கோலஸ் தான் ஒரு கோமாளி தாத்தா வேடம் அணிந்து அனாதை ஆசிரம குழந்தைகளுக்கு வீடுகளின் சிம்னி வழியாக இறங்கி ஆச்சிரிய கிப்ட்டுகளை வழங்கி கிறிஸ்துமஸ் மூடை ஏற்படுத்தியுள்ளார் .அந்த கேரக்டெர் தான் இப்பொழுதும் எங்கு பார்த்தாலும் நகர் வலம் வரும் சாண்டாக்ளாஸ் .

20221123005751174.jpg

அனைத்து ஆலயங்களிலும் மறைக்கல்வி குழந்தைகளை மரியா சூசை ஏசு குழந்தை இடையர்கள் வானதூதர்கள் வேடம் அணிந்து நாடகம் அரங்கேறுவது சிறப்பான ஒன்று .

கிரிப் அது தான் மாட்டு தொழுவம் ஜோடனை அதற்காக சோலை வனத்தினுள் சென்று பாசை , செடிகள் கொடிகள் எடுத்து வந்து ஜோடனை செய்து மெருகேற்றுவது தனி சிறப்பு .

20221123010044447.jpg

இந்த மாட்டு தொழுவம் வீடுகளில் , ஆலயங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் களை கட்டியுள்ளது .

செயின்ட் பிரான்சிஸ் அசிசி 1223 ஆம் வருடம் தான் முதல் மாட்டு தொழுவத்தை வடிவமைத்தார் .அதன் பின் கிரிப் உலகம் முழுவதும் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது .