தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
ஊட்டி - " கிறிஸ்துமஸ் சிறப்பு கொண்டாட்ட மார்க்கெட் " - ஸ்வேதா அப்புதாஸ் .

கிறிஸ்துமஸ் சீசன் டிசம்பர் மாதத்தில் களைகட்டிவிடும் .
ஊட்டியில் வருடந்தோறும் ஏதாவது புதிய கொண்டாட்டங்கள் அரங்கேறுவது வழக்கம் .
இந்த வருடம் ' லிட்டில் எர்த் ' நிறுவனம் ஒரு வித்தியாசமான Christmas fair நடத்தி அசத்தினார்கள் .

20221120183246810.jpg
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் உள்ள லிட்டில் எர்த் ஸ்கொயர் ஞாயிற்று கிழமை காலை களை கட்டி இருந்தது .
நிறைய மாடர்ன் திறந்த வெளி கடைகள்.
என்னதான் நடக்கிறது என்று பார்க்க உள்ளே நுழைந்தோம் .


கிறிஸ்துமஸ் ஜோடனை பொருள்கள் , மார்டன் ஸ்க்ரீன்ஸ் , ஊறுகாய் முதல் பஞ்சு மிட்டாய் வரை அனைத்தும் விற்பனைக்கு குவிந்து இருந்தது .
வெகுவாக எல்லோரையும் கவர்ந்து இழுத்து ' Ginger bread house ' ஒரு குட்டி வீடு உண்மையான Ginger bread கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது .

20221120184234851.jpg
நாம் உள்ளே சென்று இதை தயாரித்த அரூப் சந்தித்து பேசினோம் ,
ஐரோப்பாவில் கிறிஸ்துமஸ் சீசனில் தயாரிப்பது வழக்கம் .
இங்கு இது தான் முதல் முறை உருவாக்கியுள்ளோம் .
இந்த வீடு முழுவதும் ஜிஞ்சர் பிரட் டைல்ஸ் ஒட்டப்பட்டிருக்கிறது .மொத்தம் 15 கிலோ மாவில் இன்ஜி மிக்ஸ் செய்து இரண்டாயிரம் டைல்ஸ் தயாரித்து ரெடி செய்துள்ளோம் .

இதனுள் பிளம் கேக் , ஜிஞ்சர் பிரட் , என்று நிறைய இருக்கிறது .இந்த மாதம் முழுவதும் இது இங்கு இருக்கும் நீலகிரியில் இது தான் முதல் முறை " என்று கூறினார் .
கோவையில் இருந்து இந்த கிறிஸ்துமஸ் fair ல் கலந்துகொள்ள தான் தயாரித்த வைன் பாட்டில்களுடன் அமர்ந்திருந்த ரங்கராஜனிடம் பேசினோம் ,

20221120190510603.jpg

" கிறிஸ்துமஸ் சீசனில் வைன் மிக முக்கியம் , பிளம் கேக் மற்றும் வைன் சுவையாக இருக்கும் .வைன் உடலுக்கு மிகவும் நல்லது .

ஹனி வைன் மற்றும் ரெட் வைன் சூப்பர் . கொரோனா லாக் டவுன் காலத்தில் தான் வைன் தயாரிக்க துவங்கி இப்பொழுது எங்க தயாரிப்பு சிறப்பாக இருக்கிறது " என்கிறார் சுவையாக .
ஊறுகாய் பிஸ்னெசில் படு பிசியாக இருந்தார் கிரானி.. கோனி " பிரியாணி , பிரைவேட் ரைஸ் , சிக்கென் என்று எது கிறிஸ்துமஸ் அன்று சாப்பிட்டாலும் சைடில் என்னை மறக்க கூடாது என்று சிரித்து விட்டு என் ஊறுகாயை தான் சொல்றேன்,

2022112019064794.jpg

என்னிடம் லெமன் , நார்த்தங்கா , மாங்காய் , பீப் , மீன் ஊறுகாய் இருக்கிறது டேஸ்ட் இட் அண்ட் கெட் இட் " என்று கூறி நம் நாவை ஊறவைத்து விட்டார் கோனி .
இந்த கிறிஸ்துமஸ் fair யை பிளான் செய்த் பிரதீஷ் கூறும்போது , "இது ஒரு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய சேல்ஸ் திரில்லிங் இங்கு லோக்கல் தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் ,

நீங்களே சுற்றி வரும்போது கிறிஸ்துமஸ் மூட் வந்திருக்கும் .28 கலர்புல் ஸ்டால்ஸ் உள்ளது எல்லாமே செலக்டிவ் சூப்பர் பொருள்கள் நீங்கள் வாங்கும் பொருள் உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது " .
இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மார்கெட்டிங்கிற்கு கோவையில் இருந்து தன் சொந்த தயாரிப்புடன் சேல்ஸில் மூழ்கியிருந்தனர் 'லைவ்லி வூட்ஸ் ஆர்டிஸ்ட்ரி ' தம்பதியினர் கோகிலா ஜெகதீஷ் ,

20221120191113435.jpg

" இந்த கிறிஸ்துமஸ் fair ரொம்பவே வித்தியாசமானது எங்களின் வுட் வொர்க்கை பார்த்த அனைவரும் விலையை பற்றி கேட்காமல் கலையை ரசித்து வாங்கி சென்றார்கள் .கிறிஸ்துமஸ் ஒரு புனித கலையுணர்வை உடுருவிய விழா என்பதை இங்கு உணரமுடிந்தது ". என்று கூறினார்கள் .


ஷாலோம் வெல்பர் சொசைட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஷீலா தன் பெண்கள் குழுவுடன் தோடர் கலை பின்னல் ஆடைகளை

20221120191622662.jpg

இந்த கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் சேல்ஸில் வைத்து கலக்கிக்கொண்டிருந்தனர் , " எம்பிராய்டரி என்பது ஒரு சிறந்த கலை நுணுக்க வேலைப்பாடு அதிலும் தோடர்களின் கலை என்பது நீலகிரியின் அழியா பொக்கிஷம் அதை தான் எங்க குழு செய்து வருகிறோம் ,

இந்த கிறிஸ்துமஸ் சீசனில் இங்கு வந்து சேல்ஸ் செய்வது ஒரு கிபிட் தான்" என்கிறார்கள்.
லிட்டில் எர்த் உரிமையாளர் மீட்டா பிரபு , " இப்படிப்பட்ட கலர்புல் fair ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் சீசனில் நடப்பது ஒரு பாரம்பரிய ஒன்று . இதை பற்றி நான் ஏன் இங்கு நடத்த கூடாது என்று பிளான் செய்து கடந்த வாரம் இரண்டு நாள் நடத்த முடிவு செய்து எல்லாம் ரெடி அதற்குள் மாண்டஸ் புயல் பாதிப்பால் நடத்த முடியவில்லை . இந்த வாரம் நல்லா இருக்கு fair ம் சூப்பர் ..

20221120192303273.jpg

இங்கு முழுக்க முழுக்க நீலகிரி பொருள்கள் தான் உள்ளது .

அதை விட அனைவரையும் ஈர்த்துள்ளது ஜிஞ்சர் பிரட் அவுஸ்

20221123011434956.jpg

இது நம்ம ஊட்டியில் புதுசு என்ன சூப்பர் தானே அது நியூ இயர் வரை இருக்கும் ஓகே ஹாப்பி கிறிஸ்துமஸ் அன்ட் ஹாப்பி நியூ இயர் " என்று கூறி நகர்ந்தார் .


நீலகிரியின் வெஸ்டர்ன் இசை கலைஞரான ஐவான் இனோஸ் தன் இசையால் அனைவரையும் மயக்கி கொண்டிருந்தார் .

2022112019434492.jpg
வெலிங்டன் ராணுவ கல்லூரி அதிகாரி தன் செல்ல டாபர் மென்னுடன் இந்த கிறிஸ்துமஸ் fair யை ரசித்து கொண்டிருக்க அவரின் செல்லம் இசையை ரசித்து கொண்டிருந்தது ஹாய்யாக ..
மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஊட்டியில் சுற்றுலாக்களின் வருகையால் களை கட்டியுள்ளது .