மக்கள் பார்வையில் கம்பர்
கோசல நாட்டின் செல்வச்செழிப்பை
விளக்கும் பாலகாண்டத்தின்
நாட்டுப் படலப் பாடல்
வரம்பு எலாம் முத்தம் தத்தும்
மடை எலாம் பணிலம் மா நீர்க்
குரம்பு எலாம் செம்பொன் மேதிக்
குழி எலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பு எலாம் பவளம் சாலிப்
பரப்பு எலாம் அன்னம் பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன் சந்தக்
கா எலாம் களி வண்டு ஈட்டம்
வயல் வரப்பகளிலெல்லாம் முத்துக்கள்
தண்ணீர் பாயும் மடைகளில் சங்குகள்
நீர்ப் பெருக்குடைய கரைகளில்
செம்பொன்
எருமைக் கால் பதிந்த பள்ளங்களில்
செங்கழு நீர் மலர்கள்
பரம்படித்த இடங்களில் பவளங்கள்
நெற்பயிர் நிறைந்த பரப்புகளில்
அன்னங்கள்
சாகுபடி செய்யப்படாத நிலங்களில்
செந்தேன்
அழகிய சோலைகளில் மதுவுண்டு
மகிழும் வண்டுகளின் கூட்டம்
என்பதே இப்பாடலின் பொருள்
கோசல நாட்டின் வளத்தை எளிமையாக
மக்களுக்குப் புரியும் படி
முத்துக்கள் பூத்த பரப்புகள்
சங்குகள் வார்த்த மடல்கள்
மலர்களாய் எருமையின் கால்தடம்
செந்தேன் பெருகிய தரிசுகள்
சோலைத்தேன் மயக்கத்தில்
வண்டுகள்
கொம்புத்தேன் சொற்சுவை பாடல்களில்
கம்பனின் கற்பனைக்குக் கரையில்லை
கம்பனின் தமிழுக்கு ஈடில்லை
மீண்டும் சந்திப்போம்....
Leave a comment
Upload