தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : வலையங்கம்

Comment : ஒரு அரை மணிநேரம் கூட குழந்தைகளுக்காக நேரம் செலவிட இயலாத பெற்றவர்களாக இருக்கிறாங்க....இந்த மாதிரியான விஷயங்கள் அந்த பெற்றோர்களை உசுப்பி விடுமா? பார்க்கவன் Reston, VA, USA

Heading : வலையங்கம்

Comment : உங்கள் மகன் அல்லது மகளுக்கு செய்யும் கடமையாக மட்டுமல்ல இதை ஒரு சமூக கடமையாக பெற்றோர்கள் பார்க்க வேண்டும்.அது உங்கள் பொறுப்பும்கூட. இதை எத்தனை பெற்றோர் நிறைவேற்றும் வகையில் உள்ளனர் என்பது கேள்விக்குறி!

பார்த்தசாரதி, ராதாகிருஷ்ணன், செய்யாறு

Heading : பட்டாம் பூச்சி 36 என்.குமார்

Comment : அடடே... தனது குழந்தைக்காக பட்டாம்பூச்சி தேடி ஓடியதை தேன் குழைத்த குரலில் என்.குமார் பேசிய விதம், எங்களுக்கு 'எஜமான்' ரஜினியைப் போல் தோன்றுகிறது. இவரை மாதிரியான ஆட்களை இசைஞானிக்கு ரொம்ப பிடிக்குமே!

அமிர்தவள்ளி, சடகோபன், திருவில்லிபுத்தூர்

Heading : விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட் = குஜராத் இமாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் ! பிஜேபி உஷார் !

Comment : அமித்ஷா தேர்தல் அரசியலில் சாணக்கியர் என்கிறீர். குஜராத் கோட்டை என பில்டப் கொடுக்கிறீர். அங்கேதானே கெஜ்ரிவால் 5 இடங்களை பிடித்துள்ளார். ஆனைக்கும் அடி சறுக்காதா? பிரதமர் மோடிதான் கேம் சேஞ்சர் என்பது மட்டுமே நிஜம்!

தவசீலன், காயத்ரி ஆனந்த், அலகாபாத்

Heading : வாழ்க்கைத்துணை நலமா - பா அய்யாசாமி

Comment : வாழ்க்கை சிறப்பது துணைநலத்தால்தான், ஆனால், அது இருபாலருக்கும் பொருந்தும். அப்படி இணைந்து வாழ்வதே இனிய இல்லறம் என்பதை தனது முத்திரை சிறுகதை மூலம் அய்யாசாமி அழகாக விவரித்துள்ளார்.

சியாமளா விஸ்வம், பெங்களூரு

Heading : வாழ்க்கை இதுதான்

Comment : அடுத்தவர் பார்வையும் உனதூ பார்வையும் ஒன்றாவதில்லை என்ற வாழ்க்கை தத்துவத்தை திருவள்ளுவரை போல் 'சுருக்' வரிகளில் விவரித்த விதம் மிக அருமை!

சுமங்கலி பாலகிருஷ்ணன், ஐதராபாத்

Heading : சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

Comment : சிலம்பம் கற்கும் நடிகை, விதி வேட வரலட்சுமி என அனைத்து தகவல்களும் நடிகைகளை சுற்றியே வலம் வருகிறது. ஏன், ஆண் நடிகர்களில் ஒருவர் கூட உங்க கண்ணில் தென்படவில்லை?!

கார்த்திக் ராமநாதன், கான்பூர்

Heading : புயலும், வாழ்வும்-தில்லைக்கரசிசம்பத்

Comment : சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தாக்கிய மாண்டஸ் உள்ளிட்ட பல்வேறு புயல்களால் ஏழை மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை, இயற்கையின் சமன்பாட்டை அழிக்காமல் மனிதன் வாழக் கற்றுக்கொண்டால், வருங்காலத்திலும் இயற்கையின் கருணை நிலைத்திருக்கும். இல்லையெனில் மனிதனின் கதி அதோ கதிதான் என்ற உண்மையை எடுத்துரைத்த தில்லைக்கரசிக்கு 'ஓ' போடுவோம்.

ராதா வெங்கட், மாயா குப்புசாமி, செகந்திராபாத்

Heading : முத்திரை சிறுகதை !! ஒரு காவலாளியும் களவாணியும் - சத்தியபாமா உப்பிலி.

Comment : சத்தியபாமா ஒப்பிலியின் ஒரு காவலாளியும் களவாணியும் - உண்மையிலேயே முத்திரை கதைதான் என்பதை நிருபித்துவிட்டது. ஆரம்பம் முதல் இறுதி வரை சஸ்பென்ஸ் த்ரில்லராக கதை நகர்கிறது. இம்மாதிரி முத்திரை கதைகளை ஒவ்வொன்றாக வெளியிடலாமே!

ஜமுனா பிரபாகரன் , ஊத்துக்கோட்டை

Heading : சொகுசு ரயில் ஸ்டாலின் - தென்காசிக்கு ஒரு ஜிலு ஜிலு பயணம் - மாலா ஶ்ரீ

Comment : என்னது... தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ₹2 லட்சம் வாடகையில் சொகுசு ரயில் பெட்டியில் தென்காசிக்கு குளுகுளு பயணமா?! இதை எங்க ஊரு முதல்வர் கேள்விப்பட்டா, அதிக வாடகை கட்டணத்தில் படகு பயணம் போக ஆசைப்படுவாரே?!

ரேணுகா மேனன் , கேரளா

Heading : எப்படிச் சொல்வது.?-மகா

Comment : மகாவின் அத்துப்படி கவிதை செம் கலக்கலா இருக்கு. ஒன்ஸ்மோர் இதேமாதிரி வேறு பல கவிதைகளை நிறைய போடுங்கப்பா!

ரேணுகா ஹரி, மும்பை

Heading : ஒரு திருமணம். ! ஒரு டிவீட் ! புது ரோடு பரிசு ! மாலா ஶ்ரீ

Comment : ஐ... இது நல்ல ஐடியாவா இருக்கே! ரோடு போட்டாங்களோ இல்லையோ, சிவம் யோகி ஆதித்யநாத் பேரை கேட்டதும் ச்சும்மா அதிருதுல்ல!

ரேவதி கிருஷ்ணா , மதுரை

Heading : ஒல்லி குஷ்பூவும் அராஜக சுப்புசாமியும்! புதுவை ரா. ரஜனி ஓவியம்: மணி ஸ்ரீகாந்தன், இலங்கை.

Comment : நடிகை குஷ்பு கதாபாத்திரத்தை வைத்து, சுப்புசாமி தாத்தா அண்ட் கோவை செமையாக கலாய்த்துவிட்டீர்கள்! போன வாரம் மநீம கமல், இந்த வாரம் நடிகை குஷ்பு, அடுத்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினியா அல்லது அமைச்சர் உதயநிதியா?!

நான்சி ரெஜினால்டு, புதுடெல்லி