தொடர்கள்
தொடர்கள்
வாழ்க்கைத்துணை நலமா -   பா அய்யாசாமி

20221109163509708.jpg
என்னங்க நீங்க உட்கார்ந்து பேப்பர் படிக்கிறதினாலே அந்த கொரோனா குறையப் போகுதா ? இல்லை, வீட்டுவேலையெல்லாம் தானாக நடந்திடுமா ? எப்பப் பாரு டிவியிலேயும் அதைப் பற்றியப் பேச்சுத்தான், பேப்பரைத்திறந்தாலும் அதேதான் என அலுத்துக் கொண்டாள் சாராதா,

இன்றைக்கு அதுதானே தீவிரமாக நடக்குது, அதனாலே அதில் ஒரு ஆர்வம் கவலை. உனக்கு என்ன ? ஒரு கவலையும்இல்லை, வீட்டு வேலைகளைத் தவிர என்று படபடவென்று பேசினான்.

அப்படி கவலை இருக்கிறவர்தான், பெட்ரோல் போட ஒரு தடவை , பேப்பர் வாங்க ஒரு தடவை என வெளியேபோவாங்களா ? என பதிலுக்கு சாடினாள். அரசே வீட்டில் அடங்கி இருங்கள் என்று சொல்லி இருக்குல்லே? வீட்டில்இருந்து கொஞ்சமாச்சம் ஒத்தாசையா இருந்தால் என்ன? எனக்கு இன்றைக்கு உடம்புக்கு முடியலை, அத்தைதான்சமைக்கப் போறாங்க, கொஞ்சம் அடுப்படியிலே கூடமாட இருந்து அவங்களுக்கு உதவி செய்யுங்கள், பேப்பரைஅப்புறம் படிக்கலாம் என்று சாராதா கூறிட, என்ன உடம்பிற்கு என அக்கறையாக மனைவியை விசாரித்தான் சங்கர்.

கீரைக் கட்டைப்பாருடா, கட்டு பத்து ரூபாய் விறறது, இப்போ, இருபது ரூபாய் கொரோனாவாம் என்றபடி வாங்கிவந்தார் தாத்தா.

வண்டி வாகனம் என்று எந்த வசதிகளும் இல்லை, தலையிலே சுமந்துகிட்டு வந்து விற்கிறாங்க இல்லை அதான்அதிகமாக இருக்கு. பராவாயில்லை இதுவாவது கிடைக்கிறதே என்றான் இந்த வருடம் தேர்வு எழுதாமலே தேர்ச்சிபெறப்போகும் எட்டாம் வகுப்பு படிக்கும் பெயரன் சாய்.

சமர்த்துடா என் செல்லம், நல்லா புரிதல்டா உனக்கு எனப் பாராட்டினாள் பாட்டி

பாட்டி வயது எழுபதை தாண்டியவர், சமையல் அளவுகள் அத்தனையும் அவருக்கு அத்துப்படி,ஆனால் கைகளைத்தூக்கியோ, அல்லது கிடுக்கியைப் பிடிக்கவோ முடியாது அப்படி ஒரு வலி கை விரல்களில் வந்து விடும்.


பாத்திரங்கள் கழுவும் இடத்தில் இருந்த பாத்திரங்களை கழுவ வந்த சங்கரைப் பார்த்து,

பாவம் நீ ஏண்டா இதெல்லாம் செய்கிறாய், இதெல்லாம் பெண்கள் வேலை போ போ நான் பார்த்துக்கொள்கிறேன் என்றவள் சமைக்கும்போது வா, கொஞ்சம் அடுப்பில் ஏற்றி, இறக்கிக்கொடு, உன் அப்பாவிற்கு அது கூட வாராது வெந்நீர்தான் போடத் தெரியும் என்று தாத்தாவை கிண்டலடித்தாள் பாட்டி.

இதெல்லாம் பெண்கள் வேலை என அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டு படுத்தபடி இருந்த சாரதா எழுந்து வந்துவிட்டாள்.

அத்தை, அது என்ன பெண்கள் வேலை? ஏன் ஆண்கள் செய்யக்கூடாதா? வீட்டு வேலைப் பொதுவானது கூட இருந்துஉதவி செய்தால் குறைந்து ஒன்றும் போயிடமாட்டார் உங்கள் பிள்ளை.

நான்தான் இருக்கேன்லே, அதான்மா சொன்னேன் என்றாள் அத்தை.

அப்படி வீட்டு வேலை ஒன்றுமே தெரியாத மாதிரி வளர்த்து இருக்கீங்க, உடம்பிற்கு முடியலை என்றால் நீங்கள்தானேகஷ்டப் படுவீர்கள், இதே அவருக்கு சமையல் தெரிந்து இருந்தாலோ, சிறுவயதினிலே வீட்டில் துடைத்துப் பெருக்கபழக்கப் படுத்தி இருந்தாலோ நன்றாக இருந்திருக்கும், என்றாள்.

அவன் படிப்பானா ? இல்லை இதெல்லாம் செய்வானா? அவனுக்கு அக்கா,தங்கை எல்லாம் இருந்தார்கள் அவர்கள்கவனித்துக் கொண்டார்கள்.

அவர்களும்தானே படித்தார்கள். ஆனால் வீட்டு வேலையில் மட்டும் ஆண்களுக்கு ஏன் விதிவிலக்கு?

அப்படியே சொகுசா வாழ்ந்திட்டான், அவன் அப்பா மாதிரி என்ற அத்தை தனது மாமயாரை மறைமுகமாகச் சாடினாள்.

இல்லை நீங்கள் அப்படி வளர்த்துட்டீங்க, அத்தை என்றாள்
இரண்டுமே ஒன்றுதான் என்றான் சாய்.

மாம் சாராதா நீ சொல்கிறது சரிதான், காலத்திற்கேற்ப எல்லாம் மாறும் போது இது மட்டும் மாறாம அப்படியேஇருக்கு, வேலைக்கு போகிற பெண்கள் வேண்டும் என்று கேட்கிற ஆண்கள் வீட்டு வேலைகளை பகிர்ந்துக்கொள்ளமுன் வருவதில்லை.

முதலில் ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும், மனைவி என்பவள் அடிமையோ, தாழ்வானவரோ,பலவீனமானவரோஇல்லை,
அவர்களும் இல்லறத்தில் ஓர் அங்கம் என்றும், பரஸ்பரம் அன்பு காதல் காமம் மட்டும் அல்ல இல்லற வாழ்க்கை, அவர்களுக்கான மரியாதையும் சேர்ந்தது என்ற புரிதல் வேண்டும் என்றாள் அத்தை.

சங்கர், அப்பாவைப் பார்த்தான், அப்பவோ அம்மாவைப் பார்த்து,
மரியாதை மனத்தில் உண்டு என்பது போல அப்பா தோள்களை தூக்கினார்.

நம்ம சாய் அப்படி இல்லை அத்தை, எல்லா வீட்டு வேலையும் அவனுக்குத் நான் சொல்லிக்கொடுத்துள்ளேன், இன்றைக்கு சமைக்கச் சொல்லி அளவு மட்டும் சொன்னால் போதும் அருமையாகச் செய்திடுவான்சமையலை என பெருமையாகச் சொன்னாள் சாரதா.

வாழ்க்கை சிறப்பது துணைநலத்தால்தான், ஆனால் அது இரு பாலருக்கும் பொருந்தும் அப்படி இணைந்து வாழ்வதே இனிய இல்லறம்.