தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் டியர் மதன்

20220809162606466.jpg

1).வேண்டாத விஷயத்தை பார்க்க வேண்டாம் என்று கண்கள் இமைகளால் தாமே மூடிக்கொள்வது போல காதுகளுக்கு மூடி இருந்திருக்கலாமே என்று நினைத்ததுண்டா?

2022080916230119.jpg

24 மணி நேரமும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் காதுகளுக்கு மூடி இல்லை. மூடி இருந்தால் பலர் காலை 10 மணி வரை தூங்கிக் கொண்டிருந்திருப்பார்கள்!

2).நாசாவின் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த, 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்த பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில்(Milky Way) நட்சத்திரங்கள், துகள்கள் என சிதறி கிடந்த பிரபஞ்சத்தின் ஆரம்பகாலத்தை புகைப்படமாக பார்த்த போது உங்கள் மனதில் என்ன தோன்றியது?

20220809161001118.jpg

மனிதனால் கற்பனை செய்ய முடியாத பிரம்மாண்ட நிகழ்வு அது. கோடான கோடி நட்சத்திரங்களும் கிரகங்களும் உருவான சமயம் அது. அதில் ஒரு தக்கனூண்டு கிரகமான பூமி உருண்டு திரண்டு உயிர் பெற்று சூரியனை வலம் வந்தபோது அதில் மனிதன் என்பவன் எப்படி உற்பத்தியாகி இருப்பான் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது!

3).தமிழ்நாட்டில் பிறக்காமல், வேறு எந்த வேற்று மொழி மாநிலத்தில் பிறக்க உங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் உங்கள் சாய்ஸ் என்ன?

20220809162021556.jpg

கேரளா. நாம் பிறக்கிற ஊர் எதுவாக இருந்தாலும் அங்கு வேட்டி கட்டிக் கொள்ள வசதியாக இருக்க வேண்டும்!

4).மகாத்மா காந்தி ,சோனியா காந்தி, ராகுல் காந்தி இவர்களுக்குள் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா?

காந்தி என்ற பெயரைத் தவிர ஒரு ஒற்றுமையும் கிடையாது. இதுவே ஒரு சர்வாதிகார நாடாக இருந்திருந்தால் காந்தி என்கிற பெயரை வைத்துக்கொள்ள தடையே போட்டு இருப்பார்கள். இங்கே காந்தி கொள்கைகளுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள் கூட காந்தி என்று பெயர் வைத்துக்கொள்ள முடியும்!

5). உங்களுக்கு பிடித்த கவர்ச்சி நடிகை யார்?

20220809161348934.jpg

அதற்கான வயசு தாண்டிவிட்டது. ஒரு காலத்தில் என்னைக் கவர்ந்த நடிகை வஹீதா ரஹ்மானாக இருந்தார். அவர் கவர்ச்சி நடிகை இல்லை. அழகு, கவர்ச்சியானது மட்டும் இல்லை!

தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்

வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in