(இராணி எலிசபெத்)
இங்கிலாந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் (96) அரண்மனையில் வசிக்காமல், சமீபகாலமாக உடல்நலக்குறைவு காரணமாக, ஸ்காட்லாந்தில் உள்ள பண்ணையில் வசித்தார். அவரை தொடர்ந்து மருத்துவ குழு கண்காணித்து வந்த நிலையில், கடந்த 8-ம் தேதி இரவு இரண்டாம் எலிசபெத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தவண்ணம் இருக்கின்றனர்.
(இங்கிலாந்து மக்கள் துக்கத்தில்)
எலிசபெத் மகாராணியின் மறைவைத் தொடர்ந்து, புதிய மன்னராக எலிசபெத் மகாராணியின் மூத்த மகனும் இளவரசருமான 3-ம் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியுள்ளார். இனி, அவர் சார்லஸ் மன்னர் என அழைக்கப்படுவார். தனது தாயின் மறைவு குறித்து மன்னர் சார்லஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘எனது அன்புக்குரிய தாய் ராணி எலிசபெத்தின் மரணம், எனக்கும் குடும்பத்தாருக்கும் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்கு பின் நடைபெறும் . கடந்த செவ்வாய்க்கிழமை இங்கிலாந்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட லிஸ் டிரஸ்ஸுடன் மகாராணி எலிசபெத் புன்னகையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். எனினும், மூத்த அமைச்சர்கள் பங்கேற்ற பிரைவி கவுன்சிலின் மெய்நிகர் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
(சார்லஸுடன்)
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் கடந்த 1926-ம் ஆண்டு, ஏப்ரல் 21-ம் தேதி எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி பிறந்தார். 1952-ம் ஆண்டு, மன்னர் 6-ம் ஜார்ஜ் மறைந்தபின், அப்பதவிக்கு எலிசபெத் வந்தார். அதன்பிறகு கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து உள்பட ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை அலங்கரித்து வந்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டை நீண்ட காலம் ஆண்ட இரண்டாவது மகாராணி அவர்.
(பேரக் குழந்தைகளுடன்)
தனது 21-வது வயதில் கிரீஸ் இளவரசர் பிலிப்பை மகாராணி எலிசபெத் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் வாழ்க்கை 70 ஆண்டுகளாக நீடித்தது. 2021-ம் ஆண்டு இளவரசர் பிலிப் மரணமடைந்தார்.
மகாராணி எலிசபெத்துக்கு 3 மகன்கள், ஒரு மகள், 8 பேரக்குழந்தைகள் உள்ளனர். பால்மோரல் அரண்மனையில் மகாராணி எலிசபெத்தின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரது திருவுருவச் சிலைக்கு கீழே மலர்கொத்துகள் வைத்து, அந்நாட்டு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
(பிரதமர் மோடியை சந்தித்த போது)
(இராணி எலிசபெத் - லிஸ்)
இங்கிலாந்து அரச குடும்ப வாரிசுகளுக்கு இடையே ஏற்கெனவே சண்டைகளும் சர்ச்சைகளும் நிலவி வந்தது நமக்கு புதிதல்ல. தற்போது அரசராக பதவியேற்றுள்ள சார்லஸ்-முன்னாள் மனைவி மறைந்த டயானாவுக்கு பிறந்த ஹாரி, முன்னாள் அமெரிக்க நடிகையான மேகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு தான் அரச குடும்பத்திலிருந்து விலகுவதாக ஹாரி அறிவித்தார்.
தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஹாரி-மேகன் தம்பதி, தங்களது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறியதில் மகாராணி எலிசபெத்தின் பங்கு இருப்பதாக இன்று வரை மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.
(மன்னரானார் சார்லஸ்)
அரண்மனை விஷயமென்றால் எப்போதும் ரகசியம் தானே......
ஆனால் இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் இராணி எலிசபெத் மறைவு ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் ஒரு வயதில் மூத்த உறுப்பினர் இறந்ததைப் போன்றே துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மகாராணி எலிசபெத்தின் வாழ்க்கைப் பயணம் இங்கே. மெனக்கெட்டு யாரோ சமூக வலை தளங்களில் பதிவிட்டிருக்கின்றனர். அவருக்கு எம் நன்றி.
Leave a comment
Upload