பேரறிவாளன் விடுதலையை கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் அறப் போராட்டம் நடத்தியது. தமிழகம் முழுவதும் 700 க்கு அதிகமான இடங்களில்இந்த போராட்டம் நடந்தது
ஆனால் திமுக விடுதலையை கொண்டாடியது. அலைபேசியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளிடம்பேசினார்அப்போது அற்புதம்மாள் உன்னை பார்க்க நேர வரோம் பா என்று ஸ்டாலினிடம் சொல்ல, வாங்க வாங்க என்று சொல்லியது உடன் உரையாடல் முடிந்தது.
கோவை மற்றும் உதகையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விமானம் மூலம் செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினை விமான நிலையத்தில் அற்புதம்மாள் பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்தார்கள்.பேரறிவாளனை ஸ்டாலின் கட்டித் தழுவினார். ஒரு கொலைக் குற்றவாளியை முதல்வர் கட்டித் தழுவுவது சரியா என்று சமூக வலைதளங்களில் இந்த நிமிடம்வரை சர்ச்சை நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் அதே கேள்வியைத்தான் கேட்டு வருகிறது. ஆனால் கழகத்தின் பத்திரிகை முரசொலி பெரிய தீர்ப்பைப் பெற்று தந்த பேரறிவாளன் என்று தலையங்கம் எழுதி இந்த விடுதலையை கொண்டாடுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தியை கொலை செய்த தமிழர்கள் அவர்கள் 25 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள். அதற்காக அவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.இருபது ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை செய்யப்படாமல் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள்அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை.அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் மட்டும்தான் தமிழர்களா தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்.
சோனியா ராகுல் காந்தி பிரியங்கா காந்தி மன்னித்தாலும் ராஜீவ் கொலையாளிகளின் தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்கிறார் புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு ராஜீவ் காந்தியை கொலை செய்த குற்றவாளியைஅவரது விடுதலையைக் கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிதொடர்வதை என் மனம் ஏற்கவில்லை.எனவே மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரிக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.
ஸ்டாலின் பேரறிவாளன் சந்திப்பு காங்கிரஸ் தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி பேரறிவாளன் நாட்டின் தியாகி அல்ல அவர் ஒரு பயங்கரவாதி என்றார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பேரறிவாளன் விடுதலையை குறிப்பிட்டு நாட்டுக்கு இன்று மிக சோகமான தினம்ஒவ்வொரு குடிமகனுக்கும் வருத்தமும் கோபமும் நிறைந்த நாள் என்று குறிப்பிட்டார்
கொலைகாரர்களுக்கு தமிழர் என்ற அடையாளத்தை கொடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சொல்வது அபத்தமானது என தன் எதிர்ப்பை காங்கிரஸ் பதிவுசெய்து போராட்டம் நடத்துகிறது என்கிறார் கே எஸ் அழகிரி.
பழைய நிகழ்வுகளை கவனிக்கும்போது விடுதலைப்புலிகளுக்கும் திமுகவுக்கும் ராசியே இல்லை என்பதுதான் உண்மை.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார். அவர் கருணாநிதியை ஏற்றுக்க கொள்ளவில்லை. இலங்கையிலிருந்து அமைதிப்படை சென்னை திரும்பியபோது நான் அவர்களை வரவேற்க மாட்டேன் என்று அப்போது கருணாநிதி சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டின் பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும் இந்திய ராணுவத்தை அவர் அவமானப்படுத்தி விட்டார் என்ற ஒரு சர்ச்சை எழுந்தது. பத்மநாபா படுகொலையை காரணம் காட்டிதான் கருணாநிதி ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.ராஜீவ்காந்தி படுகொலைக்கு திமுக காரணம் என்று பிரச்சாரம் செய்ததால் தான் அந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இந்த வரலாற்றை எல்லாம் யாராவது எடுத்துச் சொல்லி ஸ்டாலினை எச்சரிக்கையுடன் இருக்க சொல்வது நல்லது
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஏழு பேரும் குற்றவாளிகள் தான் பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட வேண்டியது அல்ல முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதத்தை பார்த்தால் ஏதோ நிரபராதியை விடுதலை செய்தது போன்று கொண்டாடுகிறார். முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் போது அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நேர்மையாக சட்டத்தை நிலைநாட்டக் கூடிய முதல்வராக இருப்பாரா என்ற சந்தேகம் இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்
முதல்வர் ஸ்டாலின்இது திமுக அரசுக்கு கிடைத்த வெற்றி நளினி உட்பட சிறையிலுள்ள 6 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
சீமான் ஒரு படி மேலே போய் ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா என்று தன் பங்குக்கு திருவாய் மலர்ந்திருக்கிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை ???
டெய்ல் பீஸ்:
பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் விடுதலையான விவகாரத்தில் அவர் தரப்பில் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு தரப்பில் தேசிய தலைவர் இறந்து உள்ளதால் உச்சநீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை இவருக்கு மட்டும் எப்படி பயன்படுத்தினார்கள் என்று டெல்லியில் உள்ள சட்டவல்லுனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பேரறிவாளனை தவிர இவருடன் ராஜீவ் கொலையில் தீர்ப்புடைய மற்ற ஆறு பேருக்கும் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் மூலம் இனி விடுதலை பெற முடியாது என்று தற்போது வெளியான பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது உச்சநீதிமன்றத்திற்கு ஆர்டிகல் 142 படி தனி அதிகாரம் இருந்து பேரறிவாளன் complete Justice முலம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும் வரும் காலத்தில் இந்த வழக்கின் மீது சொல்லப்பட்ட தீர்ப்பின் மீதும் மேல்முறையீடு செய்தால் இந்தத் தீர்ப்பும் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று டெல்லி சட்டவல்லுனர்கள் இடையே பேச்சாக உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன் விடுதலையான தீர்ப்பினை இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் முன் வழிகாட்டி தீர்ப்பாக எந்த வழக்கிலும் பயன்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லியுள்ளது.
பேரறிவாளனுக்கு விடுதலையான தீர்ப்பில் பேரறிவாளன் குற்றத்தில் ஈடுபடவில்லை, அவர் நிரபராதி என்று எந்த இடத்திலும் உச்சநீதிமன்றம் குறிப்பிடாதது தான் இந்த தீர்ப்பின் ஹைலைட். உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பேரறிவாளன் தரப்பினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும் , பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பு இந்த விடுதலையை பார்த்து கொந்தளித்து போயுள்ளனர் என்பது தான் நிஜம்.
Leave a comment
Upload