தினமும் ஓரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இருக்காது. ஆப்பிள் மத்திய ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது. தற்போது, உலகின் அனைத்து குளிர் பிரதேசங்களிலும் ஆப்பிள் பயிரிடப்படுகிறது.
ஆப்பிள் உலகின் முக்கிய வர்த்தக பழங்களில் ஒன்றாகும். ஆப்பிளில் சிவப்பு மற்றும் பச்சை என இருநிறங்கள் உண்டு. ஆப்பிள் பழத்தின் தோல் மிக மெல்லியதாக இருக்கும். ஆப்பிள் பழத்தின் சதை உறுதியாக அதிக சாறுடன் இருக்கும். ஆப்பிள் பழத்தின் உள்ளே சிறு விதைகள் காணப்படும்.
ஆப்பிள் மரம் அதிகபட்சமாக சுமார் 15 மீட்டர் வரை உயரம் வளர்ந்து பரந்த கிளைகள் கொண்ட இலையுதிர் மரமாகும். ஆப்பிள் மரத்தில் பூக்கும் பூக்கள், வெள்ளை நிறத்தில் ஐந்து இதழ்களை கொண்டது.
ஆப்பிள் மரம் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆசியா, ஐரோப்பா, அர்ஜெண்டினா போன்ற இடங்களில் மக்களின் முக்கிய உணவாக விரும்பி சாப்பிடுகிறது. அமெரிக்காவில் ஆப்பிள், ஐரோப்பியர்களின் வருகைக்கு பின் பிரபலமாகி அனைவரும் ஆப்பிளை சாப்பிட தொடங்கினர்.
உலகெங்கும் 7500 இரகங்கள் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. சில வகை ஆப்பிள்கள், உவர் தன்மை கொண்டது, இதிலிருந்து சிடர் என்ற பானம் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டினர் அதிகளவில் ருசித்து அருந்தும் பானமாக விற்பனையாகிறது. ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்படும் சிடர் பானம், நல்ல சுவை மணம் கொண்டது.
ஆப்பிள் மரமொன்றில் ஆண்டு ஓன்றிற்கு 200 கிலோ ஆப்பிள்கள் காய்க்கும். ஆப்பிளில் குட்டை வகை மரம் ஆண்டு ஓன்றிற்கு 100 கிலோ வரை காய்க்கும். ஆப்பிள் மரம் நோயெதிர்ப்பு உள்ளது என்றாலும் இதனை பயிரிடும் விவசாயிகள் சில பாக்டீரியா தாக்குதல் தடுப்பு மருந்துகளை ஆப்பிள் மரம் பூக்க தொடங்கும் போது ஸ்ப்ரே செய்கிறார்கள். இதனால் ஆப்பிள் நல்ல அறுவடை வரும் என்று விவசாயிகள் நம்புகின்றனர்.
ஆப்பிளில் உள்ள வேதிப்பொருட்கள் அல்சைம்மர்ஸ் (Alzheimer's), பார்கின்சன் (Parkinson's) போன்ற நோய்களிலிருந்து மனிதர்களின் மூளையைப் பாதுகாக்கிறது.
ஆப்பிளில் நிறைந்திருக்கும் ஃபீனால் (phenolics) வகைப் பொருட்கள் ஆக்சிஜனேற்றத் தடுப்புச்சக்தி கொண்டவை என்பதால், மனித மூளையில் ஏற்படும் நரம்புப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது என கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கிறது.
வெளிநாடுகளில் ஆப்பிள்கள் பல மத வழக்கங்களில், கலாச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டு, ஆப்பிள் காதல் அல்லது புணர்ச்சியின் சின்னமாக இருந்துள்ளது. பண்டைய கிரேக்க கலாச்சாரத்தில்.. ஒருவரின் படுக்கையில் ஆப்பிளை வீசுவது, அவரை உடலுறவுக்கு அழைப்பதைக் குறிக்கும் என வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.
சுவிஸ் நாட்டில் இருந்த வில்லியம் டெல் என்ற புகழ்பெற்ற வில்வித்தைக்காரர் தன் மகனின் தலையில் வைத்த ஆப்பிளை தன் அம்பால் சதுர்யமாக துளைத்து அந்நாட்டை ஆண்டு ஒரு கொடுங்கொலனிடமிருந்து தன் மக்களை காப்பாற்றிய பழங்கதை சொல்கிறது.
இன்றும், சில இடங்களில் ஒளித்து வைக்கப்படும் ஆப்பிள்களைக் கண்டுபிடிப்பது என்பது ஹாலோவீன் பண்டிகைக் கொண்டாட்டமாக அமெரிக்கர்கள் கொண்டாடுகிறார்கள்.
உலகம் முழவதும் உற்பத்தியாகும் 45 டன் ஆப்பிள்கள், உலக சந்தைகளில் 1000 கோடி அமெரிக்க டாலருக்கு மேல் விற்பனையாகிறது. ஆப்பிள் உற்பத்தியில் பாதியளவு சீனா விளைவித்து ஏற்றுமதி செய்கிறது. துருக்கி, தென்னாப்பிரிக்கா, சிலி, பிரான்ஸ் நாடுகளும் ஆப்பிள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. ஆப்பிள் பழத்தில் சுவையான ஓயினும் தயாரிக்கப்படுகிறது.
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, மனித உடலில் நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் தினமும் ஓரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், மனித குடலியக்கம் வலுப்பெற்று, மலச்சிக்கல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரமால் தடுக்கலாம்.
ஆப்பிள் இருக்கும் சில வேதிபொருட்கள் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் மற்றும் குடல் புற்றுநோய் அபாயத்தை முற்றிலும் தடுக்கும். ஆப்பிள் சாப்பிடுவதால் மனித பெருங்குடலில் வாழும் நல்ல பாக்டீரியாக்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது.
ஆப்பிளில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால், இதை உண்டால் ரத்த சோகையை குணப்படுத்துகிறது. ஆப்பிளில் இருக்கும் பாலிஃபீனால்கள் என்ற வேதி பொருள் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கும். ஆப்பிள் கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டி விடும் திறன் ஆப்பிளுக்கு உண்டு. ஆப்பிளின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டான், க்யூயர்சிடின் என்ற வேதிபொருள், இரத்த நாளங்களில் உள்ள அழற்சியைக் குறைக்கும் சக்தி கொண்டது.
ஆப்பிளை பழமாகவும் சாப்பிடலாம், ஆப்பிளை ஜுஸ் போட்டு அருந்தினால் மிகுந்த சுவையாக இருக்கும். சிறுவர்களுக்கு ஆப்பிள் ஜுஸ் என்றால் அப்படியே குடிப்பார்கள்.
தினம் ஓரு ஆப்பிள் பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்!
Leave a comment
Upload