யாழின் இசையை மிஞ்சும்
மழலைப் பிதற்றலும் துள்ளும்
நடையும் சொல்லும் அன்பின்
அழகு வடிவம் குழந்தையே!
வாடா மலரோ வண்ணமிகு
பறவையோ கன்னக் குழிகளில் மின்னும் சின்னச் சிரிப்புக்கு மன்னும் உலகும் ஈடில்லை!
குட்டிக் குறும்புகள் செய்யும் குழந்தைகள் தாம் நாட்டின் வருங்காலத் தூண்களெனும்
உண்மை உணர்ந்து உயர்த்துவோம்.
குழந்தைப் பாதுகாப்புக்கென
பெட்டகங்கள் ஏதும் இல்லை ஊரில்.
அவை விளையாடும் இடங்களும்
வீட்டின் முன் வாசலும் படிகளுமே!
குழந்தைப் பாதுகாப்புச் சட்டங்களும்
பராமரிப்பின்றி தூசொட்டிக் கிடக்க
கூக்குரல்கள் ஒன்றிரண்டு செவியிலாரை சென்றடைவதேது?
மாறாமல் தினமும் மழலையரைக்
கொண்டாடுவோம். மழலையர்
தினமொன்றும் கொண்டாடுவோம்.
மழலையருக்காய் மன்றாடுவோம்
மாற்றமுள்ள சமுதாயம் வேண்டி!..
Leave a comment
Upload