பொது
யார் அந்த நாகசாமி? - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20190209022031158.png

முன்னையெல்லாம் யாராவது அவங்கள பெருமையை பேசிக்கனும்னா, "என்ன பத்தி ஊருல கேட்டுப்பாரு, தெருவுல வந்து கேட்டுப்பாரு அதுவும் இல்லலன்னா என் வீட்டுல கேட்டுப்பாரு"ன்னு சொல்லுவாங்க. இப்பொழுதெல்லாம் அது தேவை இல்லை. ஒருத்தர பத்தி தெரியணும்னா கூகிள் பண்ணா போதும். சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒருவரை பதவி நீக்கம் செய்யச் சொன்னார் தெரியுமா? அவரை பற்றி தெரிந்து கொள்ள, கூகிள் செய்தால் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது அவரின் அறிமுகம்.

திரு. நாகசாமி அவர்கள் மிகச் சிறந்த தமிழ் ஆர்வலர். நீங்கள் நினைப்பது போன்று அரசியல் கட்சிக்காக வேஷம் போடும் தமிழ்ப் போராளி இல்லை. தமிழுக்காகவும், தமிழ் நாட்டுக்காகவும், இந்திய நாட்டுக்காகவும் தன் உழைப்பை, தன் அறிவை அர்ப்பணித்தவர்.

நம் மக்களுக்குதான் நேர்மையாகவும் நியாயமாகவும் இருந்தால் பிடிக்காதே... அதான் அவரை நீக்கச் சொல்லி விளம்பரம் தேடி கொள்கிறது. அவர் ஒரு மிக சிறந்த ஆராய்ச்சியாளர். சம்ஸ்க்ருதம், தமிழ், ஆங்கிலம் என பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.

தொல்பொருள் ஆராய்ச்சியில் பல சாதனைகள் புரிந்தவர். இவ்வளவு ஏன் சமீபத்தில் சிவராத்திரி அன்று சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நடந்தது, அது உலக சாதனையும் புரிந்தது. அந்த நாட்டியாஞ்சலி உருவாக காரணாமாக இருந்தவர் இவர்.

கலைமாமணி விருதும், பத்ம பூஷன் விருதும் பெற்றவர். திருக்குறளை நன்கு ஆராய்ந்து தன் கருத்தை தெளிவாக பதித்தவர். திருக்குறள் வேதத்திலிருந்து வந்தது என்று தன் கருத்தை ஆழமாகப் பதிந்தார்.

இப்பேற்பட்டவரை தான் நீக்க வேண்டும் என்று திராவிட காட்சிகள் போர்க்கொடி தூக்குகின்றன.

சொல்லப் போனால் இவருக்கு மிகப் பெரிய கௌரவத்தை கொடுத்து, தமிழகத்தின் அற்புத சொத்தாக நாம் கொண்டாட வேண்டும் .

அவரை பற்றிய விக்கி பக்கத்தை பார்க்கவும். https://en.wikipedia.org/wiki/R._Nagaswamy

மேலும் அவர் விகடகவிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியை காணுங்கள்...