அமெரிக்காவின் புதிய அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் அதிரடியாக தினந்தோறும் ஏதாவது உத்தரவுகளை போட்டுக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று சட்டவிரோதமாக அனுமதி இன்றி குடியேறியவர்களை அந்தந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது, இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று 8 லட்சம் முதல் 12 லட்சம் வரை அமெரிக்காவில் இருப்பதாக ஒரு தகவல் சொல்கிறது. முதல் கட்டமாக 104 பேர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்கள். இது தொடரும் என்கிறார்கள்.
இது சட்டப்படி எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நடவடிக்கைதான். இந்தியாவும் இந்த நடவடிக்கையை துரிதப் படுத்த வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை பர்மா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா போன்றவற்றின் எல்லைகள் அப்படி ஒன்றும் கெடுபிடி உள்ள பகுதி என்று சொல்ல முடியாது.
இந்த நாடுகளில் இருந்து ஊடுருவி அதிகாரிகளை சரி கட்டி போலியான முகவரி தந்து ஆதார் கார்டு எல்லாம் வாங்கி இந்தியாவை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை சந்தர்ப்பவாதம் காரணமாக சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக ஓட்டு வங்கியாக பயன்படுத்துவதால் இவர்களுக்கு ஆதரவாக சில குரல்கள் கேட்கிறது இந்தியாவில். அமெரிக்காவைப் போல் நாமும் எந்த கருணையும் காட்டாமல் இவர்களை வெளியேற்றி இந்தியாவின் இறையாண்மையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த சட்ட விரோத குடியேறிகளை வெளியே அனுப்புவது கண்டிப்பாக அவசியம்.
Leave a comment
Upload