ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பாஜக இப்படி எந்த கட்சியும் போட்டி போடாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கின்றன. நாம் தமிழர் கட்சி மட்டும் வேட்பாளரை அறிவித்திருக்கிறது. போட்டியில் ஒதுங்கிக் கொண்டதற்கு இந்த கட்சிகள் சொல்லும் காரணம் ஆளுங்கட்சி தனது ஆட்சி அதிகாரத்தை பண பலத்தை பயன்படுத்தி முறைகேடுகள் செய்யும் என்பதுதான். கிட்டத்தட்ட உண்மைதான். தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் இது போன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி ஒட்டுமொத்த அமைச்சரவையும் ஆளும் சட்டமன்ற உறுப்பினர்களையும் தெருவுக்கு ஒருவர் என்று நியமித்து வாக்காளர்களை பணம் மற்றும் பரிசுப் பொருட்களை தந்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்கள். இதை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை என்பதும் உண்மை.
ஆளுங்கட்சி நான்கு ஆண்டுகளாக நாங்கள் மக்களுக்கு நன்மையே செய்திருக்கிறோம் நல்லாட்சி தருகிறோம் என்று பெருமை பேசும் போது எதற்கு இந்த கவனிப்பு என்பது தெரியவில்லை. எனவே இந்த கவனிப்பின் மூலம் அவர்கள் நல்லாட்சி நல்லாட்சி தந்தார்களா என்பதும் அவர்களுக்கு சந்தேகம் இருப்பது போலும். ஆளுங்கட்சி கொடுத்து பழகிவிட்டது. வாக்காளர்கள் வாங்கி பழகி விட்டார்கள். ஆனால் இந்த தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கிறது என்று சொல்ல முடியாது. தேர்தலில் புறக்கணிப்பதாக சொல்லும் அதிமுகவும் இந்த தவறை செய்திருக்கிறது. அப்போது எதிர்க்கட்சியான திமுக புறக்கணித்து இருக்கிறது. மொத்தத்தில் இடைத்தேர்தல் என்றாலே ஜனநாயகம் காணாமல் போகிறது.
Leave a comment
Upload