என்றுமே தமிழரானா நம்மனைவருக்கும் ஒரு பெருமையுண்டு, அதாவது மனித வாழ்வியலில் தமிழன் தொடாத அறியாத உணர்தலில்லையென.
எந்த தலைப்பை வேணும்னாலும் கொடுங்க அதற்கான மேற்கோள் நமது தமிழர் பண்பாட்டை விளக்கிடும் தமிழிலக்கியங்களில் கண்டிப்பாய் காணலாம்.
இப்போது நமது இந்த வார ஸ்பெஷலாம் மகளிர் ஃபிட்னஸ் பற்றி நானும் பரணீதரனும் பேசிக்கொண்டிருந்தோம்.
இதோ அதன் சாரம்.
ஆணும் பெண்ணும் சரி சமம் என்றான் மாதொரு பாகனாகிய தென்னாடுடைய சிவன். ஆக மகளிருக்கு எத்துணை ஏற்றம்.
இருந்தும் இவ்விருவரில் உடலமைப்பில் வாழ்வின் பகுதியை கையாள்வதில் தான் எத்தனை வித்தியாசம்.
ஆக அவர்களின் மனதும் உடலும் ஃபிட்டாக இருக்க அந்த காலத்திலிருந்தே எங்குமே இருந்து தவழ்ந்து வந்த, இன்றும் அங்கும் இங்குமாக தங்கியிருக்கும் பழக்கங்கள் பலவற்றில் சிலவற்றை இங்கு பகிர்ந்திருக்கின்றோம்.
வயதுக்கேற்ற பழக்கங்கள், ஆட்டங்கள் பழக்கங்களாக மாறி அவர்களின் வாழ்வில் சிறு வயது முதல் முதுமை வரை தங்கி தாங்கி அவர்களின் உடல் வளமை மன வளமையைக்கூட்டும் இணை பிரியா நண்பர்களாகவே ஆகிவிட்டன என்பது மறுக்க முடியாத உண்மை.
பல்லாங்குழி - மூளை மற்றும் மனதிற்கு வலு கூட்டும் விளையாட்டு
பாண்டி - கால்களுக்கு வலு கூட்டும் விளையாட்டு
கோலமிடுதல் - தொடை கை கால்கள் மூளை மனதிற்கு வலு சேர்க்கும்
குடத்து நீர் சுமத்தல் - கருப்பை, குழந்தை வலு பெற உதவும்
ஆட்டுக்கல்லில் அரத்தல் - கை பூட்டு, கைகளுக்கு வலு சேர்க்கும்
அம்மியில் அரைத்தல் - கருப்பைக்கு, வயிற்றிற்கு, கை முட்டிக்கு, கை பூட்டிற்கு வலு சேர்க்கும்
உலக்கையில் இடித்தல் - கைகளுக்கு வலு கூட்டும்
சாணி தட்டுதல் - கண் பார்வை, மன ஒருமைப்பாடு, குறி வைப்பது, ஒரே அளவில் செய்வது (மன கட்டுப்பாடு, கணக்கு)
இவையனைத்தும் வீட்டிலிருந்தபடியே செலவில்லாமல், நேரமும் வீணாகாமல் வீட்டிற்குத்தேவையானவையும் கிடைத்து விடுகின்றன, மற்றும் மகளிருக்கான உடலமைப்பிற்கேற்றார்போல் அவர்களது உடல் ஃபிட்னஸும் கிடைத்துவிடுகின்றன. ஒன்றுக்கு ஒன்று ஃப்ரீ.
கையில் வெண்ணையிருக்க நெய்யிற்கு அலைவது போலே இந்த பழக்கங்களை அழித்தொழிக்க தொழிற் புரட்சி பெண் விடுதலை என்ற பேரில் பற்பல கருவிகள் பு(ப)ழக்கத்திற்கு வந்து விட்டன. விளைவு அதிக செலவு, ஃபிட்னஸுக்கு ஜிம் என்ற மூன்றாம் செலவு. வாங்கிய கருவிகள் தனக்கிடப்பட்ட செயலை மட்டும் செய்கின்றன. அதனால் மறைந்துபோன பழக்கம் தந்த hidden பயன்கள் மிஸ்ஸிங்க்.
இப்படியே போனால், நமது பாரம்பர்யத்தை, உதாரணத்திற்கு, "இந்த சட்னி அம்மி குழவியில் அரைத்தேனாக்கும், ரொம்ப நல்ல ஃபீலிங்கா இருந்தது. என் வீட்டுக்காரர் எடுத்த வீடியோ பாரேன்" என்று நவராத்திரி ரவிக்கத்துணி மாதிரி குரூப்பில் வந்தால் ஆச்சர்யப்படாதீர்கள்.
இந்த அம்மிக் குழவி அந்த பலான பலான இடத்தில் ஒன் அவருக்கு ஆயிரம் ரூபாய்க்கு வாடகை. ரெண்டு வருஷமாச்சு ஆன்லைனில் புக் பண்ணிட்டு, ஃப்ளைட் ஏறி வாடகைக்கார் வெச்சிகிட்டு அங்க ஹோட்டல் தங்கி…என்ற யூடியூபில் வீடியோ போட்ட பத்து நிமிஷத்தில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் என்ற கதைப்பு வரும்.
இன்றைய கற்பனை நாளைய நிஜம்.
பழையன போதலும் புதியன புகுதலும் என்றதில் இந்த பழக்கங்கள் சேரவிடாது இருத்தலே பலம்.
இல்லம் எனில் மகளிர் தான் மைய்யப்புள்ளி. எனில், அவர்களின் ஃபிட்னஸ் இல்லற வாழ்வில் இன்றியமையாதது தானே.
Leave a comment
Upload