சமீப காலமாக தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது. இதற்கு காரணம் மொத்த வாக்காளர்களில் ஒரு சதவீதம் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு கேட்டு இப்படித்தான் இருக்கும் தேர்தல் முடிவு என்பதில் என்ன லாஜிக் என்பது புரியவில்லை.
உதாரணமாக சமீபத்தில் நடந்த அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் சொல்லப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் வாக்கு எண்ணிக்கையின் முதல் ஒரு மணி நேரம் காங்கிரஸ் முன்னிலை என்று சொல்லப்பட்டு காங்கிரஸ் கட்சியும் பெரிதாக அதை கொண்டாடியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் மூன்றாவது முறையாக அரியானாவில் பாஜக ஆட்சியை பிடிக்கிறது. இதேபோல் ஜம்மு காஷ்மீரில் ஜம்முவில் பாரதிய ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைத்தது. காஷ்மீரில் பாஜகவின் மாநில தலைவரே வெற்றி வாய்ப்பை இழந்தார். பி டி பி கட்சியின் தலைவி மெகபூபா முக்தியின் மகளே வெற்றி வாய்ப்பை இழந்தார். அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. பத்தாண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
எனவே கருத்துக்கணிப்பு என்பது அன்றைய பரபரப்பு செய்தியாக மட்டுமே இருக்கும் போலும் !!
Leave a comment
Upload