உடல் உறுப்பு தானம் திட்டம் என்பது 2007-2008-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. மூளை சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானமாக பெற்று பிறருக்கு பயன்படுத்துவது என்பது தான் இந்த திட்டம். தமிழகம் தான் இந்த திட்டத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
மூளை சாவு காரணமானவரின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்றவை விசேஷ விமானம் மற்றும் கார்களில் கொண்டு வரப்பட்டு தமிழ்நாட்டில் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை நடந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் உறுப்பு தான திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி தந்திருக்கிறது.
மூளை சாவு அடைந்த நிலையிலும் உறுப்பு தானம் செய்ய வரும் குடும்பத்தின் தியாகம் துணிச்சல் உண்மையில் பாராட்டப்பட வேண்டும். இப்போது உறுப்பு தானத்தை ஊக்கிவிக்கும் முயற்சியாக உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய ஒரு முயற்சி.
உறுப்பு தானத்துக்காக யாரும் காத்திருக்காத நிலையை உருவாக்க வேண்டும் எல்லோரும் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும். தமிழக அரசின் இந்த முயற்சியை விகடகவி பாராட்டி வாழ்த்துகிறது.
Leave a comment
Upload