தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : ஹாங்காங் !! கும்மிருட்டில்…நடுக் காட்டில்…வழிமாறிய மலைப்பயணம் !-ராம்

Comment : இது ஒரு திக் திக் திக் கட்டுரை படிக்கும்போதே என்ன ஆகுமோ என்று பயந்து படிக்க வைத்தது ஆனால் முடிவில் சுபம் சந்தோசம்

Posted Date : 31/12/2022

Heading : வலையங்கம்

Comment : குறைந்த பட்சம் இரண்டு தலைமுறையாக, குடிக்கு அடிமையாக மாறிக் கொண்டிருக்கும்,தமிழ்நாட்டுல,சுயமாக சிந்திக்க தெரியாத கூட்டமாக திரியற இந்த மக்களுக்கு புத்தி வருமா? பார்க்கவன்,Reston VA, USA

Heading : யோக ஆசனம் - சிறுகதை - பா அய்யாசாமி

Comment : அருமை

Seethalakshmi , Trichy

யோக ஆசனம் - சிறுகதை - பா அய்யாசாமி

Comment : அய்யாசாமியின் யோகா ஆசனம் சிறுகதையை படித்து, எங்கள் குடும்பத்தினர் அனைவரும் வயிறு குலுங்க விடாமல் சிரித்தோம். எடை குறைந்தது போலிருந்தது. அதுவும் 'அதெல்லாம் ஒண்ணும் செய்யலை, நேத்து நீ செஞ்ச அரிசி் உப்புமா மீதமிருந்ததுன்னோ, அதை காக்கைக்குப் போட்டேன், ஒரு ஈ காக்கை காணும்!' என்ற வரிகள் சிரிப்பு தெரபிக்கு சாம்பிள்.

தவமணி, நேசபிரியா, நாகர்கோவில்

Heading : துன்பம் மறந்திடு - பொன் ஐஸ்வர்யா

Comment : பொன் ஐஸ்வர்யாவின் துன்பம் மறந்திடு கதை வரிகள் நிதர்சனமாய் நெகிழ் வைத்தது.

சிநேகலதா, மதுராந்தகம்

Heading : தனியார் மயம் - கே.ராஜலட்சுமி.

Comment : பெரும்பாலான தனியார் வங்கிகள் சாமான்ய மக்களின் பணத்தை பலவகைகளில் கொள்ளையடிக்க வரிசை கட்டி, பசப்பு வார்த்தைகளுடன் காத்திருக்கிறது என்பதை இக்கதையின் மூலமாக புரிந்து கொண்டோம்.

வைஷ்ணவி வாஞ்சிநாதன், திருநெல்வேலி

Heading : வாழ்க்கை இது தான்

Comment : அட... இந்த ஆங்கில வரிகளுக்கான தமிழ் அர்த்தம் நல்லாயிருக்கு! கலக்குங்க பெயர் குறிப்பிடாத ப்ரோ...

கார்த்திகா பாலச்சந்திரன், விழுப்புரம்

Heading : சென்னையில் பனி மழை வருமா ?? ஜெர்மன் டயரி கார்த்திக் ராம்

Comment : இயற்கைக்கு மாறாக நாம் செடி-கொடிகள், மரங்கள் மற்றும் காடுகளை அழிச்சிட்டே வந்தா, அடைமழைக்கு பதிலாக பனிப்பொழிவு அதிகரிக்கும். இந்தியாவுல நிலப்பகுதியில் இருக்கிற டம்மி பீஸ் வீடெல்லாம் பனிப்பொழிவுக்கு தாங்காது. இப்பவே ஸ்ட்ராங்கா, சீப்பா ஸ்வெட்டர் கோட் வாங்கி வெச்சுக்குங்கனு பாலீஷா எச்சரிக்கை மணி?!

ஜமுனா பிரபாகரன் , ஊத்துக்கோட்டை

Heading : யாதும் ஊரே யாவரும் கேளிர் – இதன் மற்றொரு விளக்கம் என்ன ?? தமிழிலக்கண வாட்சப் குழு !! பரணீதரன்

Comment : பரணீதரனின் தமிழ் இலக்கண, இலக்கிய வாட்ஸ்அப் குழுக்கள் பற்றி சுவாரஸ்யமின்றி படிக்கத் துவங்கினேன். படித்து முடித்தபோது எங்களுக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அசத்துங்க!

சந்திரலேகா பாலகிருஷ்ணன், அடையாறு

Heading : வலையங்கம்

Comment : குடும்பம் இனிமையான சூழல் பெருமானால் மற்ற வாக்குறுதி பற்றி மதுவை ஒழித்துவிட்டால், ஆளும் அரசு நிறைவேற்றாத பிற வாக்குறுதிகளை பற்றி மக்கள் கவலைப்பட மாட்டார்கள். மத்திய அமைச்சரின் குரல் உங்களுக்கும் கேட்டிருக்க வேண்டும். இந்த வாக்குறுதியை ஆவது குறைந்தபட்சம் நிறைவேற்றுங்கள். மதுவால் தமிழ்நாட்டு மக்கள் சீரழிய வேண்டாமே?! அரசு செவி சாய்க்குமா?

கமலம் சீனிவாசன், சீர்காழி

Heading : இந்த வாரம்.....

Comment : சென்ற வார புத்தாடை புரோமோ மற்றும் அட்டைப்பட கட்டுரைகள் செம சூப்பர்!

கௌஷிக், தீட்சிதா, சென்னை

Heading : பட்டாம் பூச்சி பேசுது 39 என்.குமார்

Comment : பட்டாம்பூச்சி பேசுது என்ற பெயரில் மனதை தொடும் வகையில் என்.குமாரின் பேச்சுக்கள் இதமாக வருடியது.

ஹெலன் டேவிட்சன், வேளாங்கண்ணி

Heading : மியாவ் மியாவ் பூனை - எழுத்து விஞ்ஞானி ஆர்னிகா நாசர்

Comment : ஆர்னிகா நாசரின் மியாவ் மியாவ் பூனை கதையைப் படித்து முடிப்பதற்குள் எங்கள் வீட்டில் 2 பூனைக்குட்டிகள் வந்து குடியேறிவிட்டது. பிறகென்ன... எங்களுக்கு கிடைத்த அன்பு பரிசாக வளர்க்க துவங்கிவிட்டோம்.

ராதாகிருஷ்ணன், தமானி , பொள்ளாச்சி

Heading : கால்பந்து அரசர் மறைந்தார் ! பீலே - மாலா ஶ்ரீ

Comment : கால்பந்து மன்னன் பீலேவின் சாதனைகளுக்கு முன்னே, 3 திருமணங்கள் மற்றும் 7 குழந்தைகள் எல்லாம் ஜூஜுபி! பாராட்டப்பட வேண்டிய வீரர். இந்தியாவில் இருந்திருந்தால் காணாமல் போயிருப்பார்!

ரேணுகா ஹரி, கலா கார்த்திக், பெங்களூரு

Heading : 2022 இது வரை - மாலா ஶ்ரீ

Comment : 2022-ம் ஆண்டு கண்ணோட்டம் வளவளன்னு இல்லாம, ச்சும்மா 'நச்'சுனு இருக்கு! மொத்தத்தில் விகடகவியின் நியூ இயர் ஸ்பெஷல் கலக்கலோ கலக்கல்!

ராதிகா பாலாஜி, சின்மயா நகர்

Heading : தாயைப் பற்றிய மோடியின் கட்டுரை - இணையத்தில் இருந்து.... !! நரேந்திர மோடி

Comment : காசி விஸ்வநாதரை தரிசிக்க சென்ற இடத்தில், தனது தாயாரை பற்றி பிரதமர் மோடி எழுதிய கட்டுரையை படித்து மனம் நெகிழ்ந்தது. தாயை காத்த தமன்!

ராதா வெங்கட், மாயா குப்புசாமி, வாரணாசி

Heading : கர்மயோகினிக்கு ஒரு இறுதி அஞ்சலி – ஹீராபென் மோடி மறைந்தார். பால்கி

Comment : பிரதமர் மோடியின் தாய் ஹீராபென்னின் இறுதிச் சடங்குகள் நடந்த இடத்தில் நாங்களும் இருந்தோம். அப்பகுதி மக்களுக்கு எவ்வித தடங்கலும் இன்றி அனைத்து பணிகளும் நடந்தன. பிரதமரும் அவரது சகோதரர்களும் தாயாரின் சடலத்தை சுமந்து சென்றபோது, கண்கள் கலங்க உடன் வந்தனர். எல்லாமே ஒருசில மணி நேரங்களில் முடிந்துவிட்டன. பிறகு, அனைவரும் தத்தமது பணிகளுக்கு கிளம்பி சென்றுவிட்டனர். இதுவே தமிழ்நாடாக இருந்தால்?!

சியாமளா விஸ்வம், அகமதாபாத்

Heading : வேடிக்கை பார்க்கிறார் கடவுள்-மகா

Comment : மகாவின் வேடிக்கை பார்க்கிறார் கடவுள் ஹைக்கூ கவிதை நல்லாயிருக்கு!

சுபாஷிணி, வேதவள்ளி, லக்னோ

Heading : ராகுல் நடைப்பயணம் ஓட்டாக மாறுமா?-ஒரு அலசல் ரிப்போர்ட்- ஜாசன்

Comment : என்னங்காணும்... மாயா இருந்தாலும் சும்மா நடந்துடுவாங்களா? 'ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்' கதைதான். நடந்தா, மக்களை சந்திச்ச மாதிரியும் ஆச்சு... தனது 'பப்பு' இமேஜை உடைச்சு, காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு சேகரிப்பு மாதிரியும் ஆச்சே ராகுலுக்கு!

சுவர்ணலதா பாஸ்கரன், பாஞ்சாலங்குறிச்சி

Heading : ஆதார் இணைப்பு அவசியமா?! – ஆர்.ராஜேஷ் கன்னா

Comment : ஆதார் அட்டை வாழ்வின் ஆதாரம்.👍

Chandra Ramakrishna , Chennai.ஆத

Heading : தமிழகத்தில் "வாரிசு "ரெடி-ஜாசன்

Comment : ரஜினி மாதிரிதான் நடிகர் ஜோசப் விஜய்யும், அரசியலுக்கு வர்ற மாதிரி சீன் காட்டிற்குள்! முன்னவர், வருமானத்தை எண்ணி ஒதுங்கிட்டார். இவர், மதில் மேல் பூனையாக இருக்கார். அவருக்கு புதுப்பட ரிலீஸ்ல... அந்த பயம்! வேணாம் செல்லம், அரசியல் வேற, சினிமா வேற!

சடகோபன், பாத்திமா பாபு, சிவகங்கை

Heading : ஹாங்காங் !! கும்மிருட்டில்…நடுக் காட்டில்…வழிமாறிய மலைப்பயணம் !-ராம்

Comment : புத்தாண்டு பிறப்பு தினத்தில் திகில் மலையேற்றத்தில் வழித்தடம் மாறி, உங்கள் அனைவரையும் போலீஸ், தீயணைப்பு வீரர்கள் மீட்டரை சஸ்பென்ஸ் வீடியோ, புகைப்பட சஸ்பென்ஸ் பயண கட்டுரையை கொடுத்து, எங்களை மிரள வைத்துவிட்டீரே ராம்! அந்த புரொபசரை..? நல்லாயிருக்கு!

சுமதி, மாலதி, வாசுகி, பாலாமணி, பாலக்காடு

Heading : தாயைப் பற்றிய மோடியின் கட்டுரை - இணையத்தில் இருந்து.... !! நரேந்திர மோடி

Comment : மோடிஜி யின் அம்மாவுக்கு என் pranams.,

Chandra Ramakrishna., Chennai.

Heading : கர்மயோகினிக்கு ஒரு இறுதி அஞ்சலி – ஹீராபென் மோடி மறைந்தார். பால்கி

Comment : கர்ம வீரர் மோடிஜி க்கு என் தாழ்மையான வணக்கங்கள். மோடிஜி யின் அம்மாவுக்கு என் நமஸ்காரம் ஃஃ

Chandra Ramakrishna , Chennai.

Heading : குருவே சரணம் - 009 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : 🙏♥️

Heading : குருவே சரணம் - 012 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : 🙏🙏

Heading : துன்பம் மறந்திடு - பொன் ஐஸ்வர்யா

Comment : எளிமையான சிறு கதை. ஏராளமான information. Reach செய்யவே கடினமான remote area. அங்கு அவர்களின் பணிக்கு இடையில் பசி ஆற்ற ஒரு மெஸ். பணி சுமை, பரிதவிப்பு உணர்வுகள்! கல்லா பெட்டி பெரியவரின் தொழில்நுட்ப அனுபவம், திறமை அவரது மூளை பாதிப்புக்கு அப்பாற்பட்டு இருப்பது ஆறுதலை அளிக்கிறது.

Heading : வாசகர் மெயில்

Comment : வணக்கம், நாங்கள் விகடகவியில் தொடர்ந்து பாரத மலைக்கோயில்கள் படித்து வருகிறோம். தெரியாத மலைக்கோயில்கள் பற்றித் தெரிந்துகொண்டோம். கோயிலை நேரில் பார்ப்பது போன்று ஆசிரியர் எழுதி வருகிறார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. சென்ற இரண்டு வாரங்களாக இந்த தொடரை எதிர்பார்த்து ஏமாற்றமுற்றோம். தொடர்ந்து பாரத மலைக்கோயில்களை எதிர்பார்க்கும்….. விஜயலெட்சுமி ஜெய்சங்கர், பெங்களூர்.

விகடகவி : கடந்த சில வாரங்களாக ஆரூரால் எழுத முடியாத அசந்தர்ப்பம். விரைவில் மலைக் கோவில் மீண்டும் வரும். ஆ.குழு.