தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : தங்கப் பதக்கத்தைப் பார்க்காமல் சென்ற தந்தை - காமென்வெல்த் வெற்றியில் ஒரு சோகம். - மாலா ஶ்ரீ

Comment : என்ன கொடுமை... தந்தைக்கு தெரியாமல் சென்று, தங்கப்பதக்கம் வாங்கிய தகவலை தெரிவிக்க போனில் அழைத்தபோது, அவர் இறந்த தகவலை கேட்டு அந்த பெண்ணின் மனம் என்ன பாடுபட்டு இருக்கும் என்பதை படிக்கும்போது எங்களின் நெஞ்சம் படபடத்தது. நெகிழ் வைத்த சம்பவம்!

வித்யா முரளி, மேற்கு தாம்பரம்

*****

Heading : குலசேகரத்தில் வருது ராக்கெட் தளம் - மயில்சாமி அண்ணாதுரை - மாலா ஶ்ரீ

Comment : தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் ஆக்கப்பூர்வமான பேச்சுக்கள் மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இதுபோன்ற உற்சாக பேச்சு படிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது மிக்க மகிழ்ச்சி.

சியாமளா விஸ்வம், பெங்களூரு

****

Heading : கமல் அரசியலுக்கு முழுக்கு ! ம.நீ.மய்யத்தில் சுப்புசாமி. - புதுவை ரா.ரஜினி

Comment : கமல் அரசியலுக்கு முழுக்கு என்ற ஒரு வரியை வைத்து, சுப்புசாமி தாத்தாவின் ஹாஸ்ய பேச்சுக்கள் மூலம் நீண்ட நகைச்சுவை நாடகமாக தந்துவிட்டார் புதுவை ரஜினி. ரசித்து சிரித்தோம்!

ரேணுகா ஹரி, சாலிகிராமம்

****

Heading : மிஸ்டர் ரீல் - தமிழக ஆளுனருடன் ஒரு சந்திப்பு

Comment : என்னாப்பா இது... தமிழக ஆளுநரும் சந்திப்பு, உரையாடல் என ரீல் அறுந்து விடாமல் பல்வேறு சுவையான தகவல்களை அள்ளி தந்துவிட்டீரே!

ரேணுகா மேனன் , திருச்சூர், கேரளா

****

Heading : சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

Comment : சினிமா பகுதிக்கு எங்கேருந்துபா செய்திக்கு தகுந்தவாறு கலர்புல் கதாநாயகி படங்களை பிடிக்கிறீர்? படத்தை பார்த்து செய்தியை படிச்சா, ச்சும்மா 'ஜிவ்வு'னு கிக் ஏறுதே! நாளிதழ் சினிமா செய்திகளை பின்னே தள்ளிவிட்டு, விகடகவி சினிமா படங்கள் நம்பர் 1 ஆக உள்ளது.

கிருஷ்ணகாந்த், ரவி வர்மா, சித்தூர், ஆந்திரா

****

Heading : குஜராத் தேர்தல் சுவாரஸ்யங்கள் ! ஒரே ஒரு ஓட்டுக்கு வாக்குச் சாவடி !- மாலா ஶ்ரீ

Comment : குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை மிக அழகான ஓவியம் போல் தொகுத்து வழங்கியது மிகச் சிறப்பு!

ஜமுனா பிரபாகரன் , ஊத்துக்கோட்டை

Heading : மனித குலத்தின் புதிய சவால் ஜோம்பி வைரஸ் !! உஷார் !! - மாலா ஶ்ரீ

Comment : உலகம் முழுவதிலும் மனிதர்களிடையே ஜோம்பி வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயங்கள் உள்ளன. அதன் முன்னோட்டம் தானோ, கடந்த 2 ஆண்டுகளாக நம்மை முடக்கிய கொரோனா வைரஸ் தொற்று என்ற அச்சத்தை ஏற்படுத்தியது.

சுப்பிரமணிய சிவா, மார்த்தாண்டம்

****

Heading : தீவிரவாதத்தின் அடுத்த குறி தென்னிந்தியாவா ??? -விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Comment : இந்தியாவில் மும்பை குண்டு வெடிப்புக்கு பிறகு பெரிய அளவில் எவ்வித தீவிரவாத தாக்குதலும் நடைபெறவில்லை. தற்சமயம் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு, மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு இரண்டுமே தென் மாநிலங்களில் தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டு முயற்சிக்கிறார்களோ என்ற அச்சத்தை, தங்களின் விரிவான கட்டுரை எங்களை போன்ற வெளிநாட்டு தமிழர்களிடம் ஏற்படுத்தியது.

சிவராமகிருஷ்ணன், வனிதா, சிங்கப்பூர்

****

Heading : வலையங்கம் ! G 20. உலக பீடத்தில் இந்தியா ! பெருமைமிகு தருணம்

Comment : ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை தற்போது இந்தியா என்றிருந்தது மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில், இந்த உலகத்துக்கான அடையாளம் நாம்தான். ஜனநாயகம் என்பதற்கான அர்த்தமே இந்தியாதான். இதில், இவ்வுலகுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பது உறுதி.

ராதா வெங்கட், மாயா குப்புசாமி, சென்னை

****

Heading : "நான்" மறைந்த தினம். - 1 -பால்கி

Comment : சபரிமலையில் நான் என்ற அகந்தையை ஒருவர் கைவிட்டாலே, மணிகண்டனும் ஆபாத்பாந்தவனாக காட்சியளிப்பார் என்பது தங்களின் சொந்த அனுபவத்தின் மூலம் அழகாக விவரித்த விதம் மிக அருமை!

சிவந்தியப்பன், பொள்ளாச்சி

****

Heading : ஒலிக்காத குரல்-மகா

Comment : என்னே கொடுமை... குடியிருக்கும் மரத்தை இழந்து பரிதவிக்கும் பறவைகளின் அபயக் குரல்!

கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஆலங்குடி

****

Heading : பாரதத்தின் மலைக் கோவில்கள் ! - 7 சோளிங்கர் மலை, தமிழ்நாடு!! யோகங்களைத் தரும் யோக நரசிம்மர், யோக அஞ்சநேயர்!! ஆரூர் சுந்தரசேகர்.

Comment : சோளிங்கர் மலைமீது வருடத்தில் 11 மாதம் யோகநிலையில் இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்ற சுந்தரசேகரின் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உடனே கிளம்பிவிட்டேன் சோளிங்கருக்கு, கார்த்திகை மாதம் அல்லவா!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்

****

Heading : மகளானவள் - சிறுகதை -- பா அய்யாசாமி

Comment : அய்யாசாமியின் மகளானவள் சிறுகதை சூப்பர்ப்! ஒவ்வொரு புகுந்த வீட்டிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால், மாமனார்-மாமியார் முதியோர் இல்லத்தில் விடப்பட மாட்டார்கள். நிகழுமா? தங்களின் இணைப்பு தகவலுக்கு நன்றி.

கிருஷ்ணகுமார், ரவீந்திரநாத், அலகாபாத்

****

Heading : தெரியாத கல்யாண வீட்டில் சாப்பிட்டிருக்கிறீர்களா ?? - ராம்

Comment : இதென்ன கொடுமை... கையில் செல்போன் இருந்தால், எல்லாவற்றையும் படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்துவதா? அந்த வாலிபருக்கு என்ன நிலைமையோ? அவரது எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக மாற்றி விட்டார்களே!

வைதேகி பரந்தாமன், நாகர்கோவில்

****

Heading : வாழ்க்கை இது தான்

Comment : ஐ... இந்த பொன்மொழி நல்லாயிருக்கே! இதுபோன்ற ஊக்க மொழிகளை அனைவரும் அறிந்து கொண்டால் வாழ்க்கை பொன்னாகும். இல்லையெனில் புண்ணாக்கும்!

லாவண்யா கார்த்திக் , கான்பூர்

***

Heading : "நான்" மறைந்த தினம். - 1 -பால்கி

Comment : ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் . உங்கள் உண்மை சம்பவத்தை படிக்கும் போது மனதில் ரொம்ப பதட்டமாக இருக்கிறது. அந்த மணிகண்டேனே உங்களை வழிநடத்தி நல்லது செய்து இருக்கிறார்.கண்கண்ட தெய்வம். ஐயப்பன் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

Chandra Ramakrishna , Chennai.

****

Heading : கமல் அரசியலுக்கு முழுக்கு ! ம.நீ.மய்யத்தில் சுப்புசாமி. - புதுவை ரா.ரஜினி

Comment : எதற்காக இந்த சட்டங்கள்?சூதாட்டத்தை தடுக்க இப்ப உள்ள சட்டங்கள் முறையாக அமல்படுத்த இயலாத நிலையா? பார்க்கவன் Reston, USA

****

Heading : வலையங்கம் ! G 20. உலக பீடத்தில் இந்தியா ! பெருமைமிகு தருணம்

Comment : வெளியுறவுத் துறை செயல்பாடும் மெச்சதகுந்ததே..வாழ்க! பார்க்கவன் Reston, USA

****

Heading : தாராவி தயாராகுது 20 ஆயிரம் கோடியில் ! - மாலா ஶ்ரீ

Comment : முக்கால்வாசி நாயகன் படம் சென்னை செட்டுலத்தானே எடுத்தாங்க

****

Heading : திருப்புகழ் - இசையும், இலக்கணமும். 2 - குருநாதன்

Comment : அருமை அய்யா. அழகிய தமிழில் மிகவும் விளக்கமாக சந்தங்கள், தாளங்கள் பற்றி விவரித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி

Vara, USA