தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரிப்பு ஆளுநர் ரவி.
இது பெரியார் மண் அம்பேத்கர் வழியில் ஆட்சி அதெல்லாம் பொய் அப்படின்னு சொல்றாரு ஆளுநர்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் பவாரின் ஆயிரம் கோடி சொத்துக்கள் விடுவிப்பு.
வாஷிங்மெஷின் நல்லாதான் வேலை செய்யுது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல் வழங்கவில்லை மக்களவையில் மத்திய அரசு தகவல்.
ஆமா வெறும் தகவல் தான்.
தம்பி விஜய்க்கு ஒரு சிக்கல் என்றால் நான் தான் முதலில் நிற்பேன் சீமான்.
அப்பத்தான் அந்த சிக்கல் இன்னும் கொஞ்சம் பெருசா ஆகும்.
அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது எடப்பாடி பழனிச்சாமி.
நல்ல விஷயம் தானே இருக்கட்டும் தலைவரே !!
நான் இருக்கும் வரை சாதி மதவெறிக்கு இடமில்லை முதல்வர் ஸ்டாலின்.
அதனால் தான் மத்திய அரசை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்றாரு முதல்வர் !!
அரசியல் சதி இருந்ததால் தான் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை தொல்.திருமாவளவன்.
அதற்கு பதில் ஆதவ் அர்ஜுனாவை அனுப்பியதில் அரசியல் சதி எதுவும் இல்லைதானே தலைவரே !!
அரசியல் அடிப்படை அறிவை விஜய் வளர்த்துக் கொள்ள வேண்டும் அண்ணாமலை.
தலைவரே அதுக்கு ஏதாவது ஆறு மாசம் படிப்பு இருக்கா ?
ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு அந்த கூட்டணிக்கு முரணாக பேசுவது நாகரிகம் அல்ல திருமாவளவன்.
ஆமா அதையெல்லாம் நம்ப பேசக்கூடாது ஆறு பேர் கொண்ட குழு தான் பேசணும் அப்படித்தானே தலைவரே !!
2026 தேர்தலுக்கு திமுக கூட்டணி வலுவாக உள்ளது கார்த்திக் சிதம்பரம்.
ஆனால் இண்டியா கூட்டணி வலுவாகவில்லை அதை ஏன் எம்பி சொல்ல மாட்டேங்குறாரு.
டங்ஸ்டன் சுரங்கம் தோண்டப்பட்டால் பதவி விலகுவேன் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி.
ஏற்கனவே மதுவிலக்கு உத்தரவாதம் நீட் தேர்வு முதல் கையெழுத்து இப்படி நிறைய உறுதி....
மூன்றாவது இருக்கைக்கு உதயநிதி முன்னேற்றம்.
முதல் இருக்கை தான் இலக்கு !!
அடிக்கிற மழைக்கு அணையே தாங்கல தடுப்பணை கட்டினால் மட்டும் போதாது.அமைச்சர் துரைமுருகன் தகவல்.
அதாவது கமிஷன் கரப்ஷன் இல்லாம தரமா அணைய கட்ட வேண்டும் என்று அமைச்சர் சொல்றார் !!
தொண்டர்களின் குரலாய் எப்போதும் இருப்பேன் ஆதவ் அர்ஜுனா.
நீங்க தலைவரின் குரல் தான் இருக்கணும் தொண்டர்களின் குரல் இருந்தா இப்படி கட்டம் தான் கட்டுவாங்க !!
Leave a comment
Upload