ஆதவ் அர்ஜுனா - விஜய் ஃபார்முலா
விகடகவியார் உள்ளே நுழைந்ததும்" அரசியல் சட்டத்தை நான் தான் எழுதினேன் என்று அம்பேத்கர் பெருமையாக எல்லாம் அவர் இருக்கும் வரை சொல்லிக் கொண்டதில்லை.
இன்னும் சொல்லப்போனால் இந்த சட்டத்தை அடுத்த தலைமுறை ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவாதம் தர முடியாது என்று தான் சொன்னார்.
1951-இல் முதல் சட்ட திருத்தத்தை ஜவஹர்லால் நேரு கொண்டு வந்தார். அதன் பிறகு சட்டத்தில் நிறைய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது . இன்று விகடகவியார் சொன்னபோது "சரி ஆதவ் அர்ஜுனா விஜய் அம்பேத்கர் பற்றிய புத்தக வெளியீட்டு விழா வாரும்" என்று நாம் சொல்வோம்.
இந்த புத்தக நிகழ்ச்சியில் இருந்து திமுக ஒரு விஷயத்தை தெளிவாக தெரிந்து கொண்டு விட்டது.
விஜய் இலக்கு திமுக தான் பாரதிய ஜனதாவை அவர் கண்டு கொள்ள மாட்டார் என்பது.
அந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட வீடியோ திமுகவை எரிச்சல் செய்ய வைத்தது.
பிரசாந்த் கிஷோரை திமுகவுக்கு அறிமுகம் செய்தது நான்தான் வியூகம் அமைத்து அவர்கள் வெற்றி பெற உதவி செய்ததும் நான்தான் என்பதுதான்.
அந்த வீடியோ, ஆதவ் அர்ஜுனாவின் அந்த வீடியோ சமூக வலைதளத்தில் நான் பார்த்தவரை காணோம். நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு மட்டும் அது தகவல் ஆகிவிட்டது என்று சொல்லி சிரித்தார் விகடகவியார்.
பின் அவரே தொடர்ந்து "வருகிற 2026 சட்டமன்றத் தேர்தல் மன்னராட்சி ஒழிக்கும் தேர்தலாக இருக்கும். பிறப்பால் ஒருவர் முதல்வராக முடியும் என்பதற்கு முடிவு கட்ட வேண்டும் தமிழ் சினிமாவை ஒருவரே கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் உதயநிதியை மறைமுகமாக தாக்கி பேசினார் ஆதவ் அர்ஜுனா.
இது போதாது என்று விஜய் தனது பேச்சை முடிக்கும் போது தொல் திருமாவளவன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு காரணம் கூட்டணி அழுத்தம் தான்" என்று பேசினார் அது மட்டுமல்ல, 200 தொகுதி இறுமாப்பு பேச்சு மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள் என்று திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார் விஜய்.
"இதற்கு தான் திமுகவில் கிட்டத்தட்ட எல்லோரும் பதில் சொல்லிவிட்டார்களே என்றோம் நாம். ஆனால், முதல்வர் ஸ்டாலின் தற்சமயம் அது ஒரு ராங் மூவ் என்று யோசிக்கிறார். நாமே தேவையில்லாமல் விஜய்க்கு முக்கியத்துவம் தரத் தொடங்கி விட்டோமோ என்பது அவர் கருத்து
விஜய் பற்றி யாரும் பேசாதீர்கள் அது திமுகவின் ஐடி விங் பார்த்துக் கொள்ளும் என்று முதல்வர் சொல்லிவிட்டார் என்ற விகடகவியாரிடம் "தொல்.திருமாவளவன் தான் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுத்து விட்டாரே என்று நாம் சொன்னபோது கட்சியை விட்டு நிரந்தரமாக அவரை நீக்க வேண்டும் என்பதுதான் திமுக யோசனை. ஆனால், 6 மாதம் தான் அவர் இடைக்கால நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதை திமுக ரசிக்கவில்லை.
இன்னொரு கட்சியின் அரசியலில் நாம் தேவையில்லாமல் தலையிட வேண்டாம் தேர்தலின் போது பார்த்துக் கொள்ளலாம் என்று திமுக முடிவு செய்திருக்கிறது. ஆனால் துரைமுருகன் கருத்து வேறு மாதிரி இருக்கிறது "என்றார் விகடகவியார்.
அது என்ன அவரின் மாற்று கருத்து எல்லாமே திருமா ஆதவ் அர்ஜுனா பேசி வைத்துக் கொண்டு செய்வது போல் தெரிகிறது.
இப்போது மற்ற கூட்டணி கட்சிகளை விட விடுதலை சிறுத்தை கட்சி ஏதோ தவிர்க்க முடியாத சக்தி போன்ற ஒரு பிம்பத்தை திருமாவளவன் உருவாக்க முயற்சி செய்வது போல் தெரிகிறது என்று சொல்ல முதல்வரும் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார் விகடகவியார்.
Leave a comment
Upload