தொடர்கள்
கதை
லஞ்சம்- ஆனந்த் ஶ்ரீனிவாசன்.

20241113232820530.jpg

போகும் பொழுதே அம்மா தடுத்தாள். “டேய் ஷிவா நீயும் உன் அமெரிக்கா நண்பனும், உன் காரில் தான் அழைத்து வரணுமா?”
.
ஏர்போர்ட் இருந்து “டாக்ஸி எங்கேஜ் பண்ணக் கூடாதா ?”
“அப்படியில்லைம்மா? அவனை அழைத்து தங்கியிருக்கும் ஹோட்டலில் கொண்டு விடுவதோடு மட்டுமல்லாமல் நான் தான் என் காரில் அழைத்துப் போறேன்ன்னு பிராமிஸ் பண்ணிட்டேன். இல்லாட்டியும் என் ஸ்டேட்டஸ் பத்தி கிண்டல் பண்ணுவாங்க அதான் “
அவன் அங்கே எவ்வளவு ஹெல்ப் பண்ணி இருக்கான் தெரியுமா?
சிவா தன் காரில் அமெரிக்கா நண்பனை மகாபலிபுரம்காண்பித்து விட்டு அதன் பெருமைகளைச் சொல்லி வந்தவன், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாளை தரிசித்து விட்டு வரும் போது, எதிரில் ஒரு லாரி மோத நல்ல வேளை இவன் கொஞ்சம் லெஃப்ட் ஒடிக்க ,அது மரத்தின் மீது மோத சின்னக் காயத்துடன் திரும்பினான் சிவா. காருக்கு தான் சேதம். அதிகம்.
அமெரிக்கா நண்பனுக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் காயம் . நாலு நாளில் சரியாகி விட்டது.
“தலைக்கு வந்தது தலைபாகையோடு போச்சு”. என்றாள் அம்மா.
பத்து நாள் கழித்து, “அப்பா வண்டி டேமேஜ் ஆனதுக்கு இன்சூரன்ஸ் கிளைம் பண்ண,. ஆட்டோ மொபைல் காரன் கிட்ட ஸ்பேர்ஸ் மாத்த,( CSR) கம்யூனிட்டி சர்வீஸ் ரெஜிஸ்டர் கேக்கறாங்கா”.
“விபத்து நடந்த அந்தச் சரகத் தை சேர்ந்த போலீஸ் ஸ்ட்டேஷனல
தான் வாங்கணும். “
“நீ உன் இன்பளுன்ஸ் பயன்படுத்தி ஒரே ஃபோனில் வாங்க கூடாதா?” அம்மா கேட்டாள்.
“அது தப்பும்மா நான் தான் நேரில் போய்ப் புகார் கொடுக்கணும் . அப்ப தான் உடனே கிடைக்கும்”.
சிவாவும் அவன் அப்பாவும் சம்பந்தபட்ட போலீஸ் ஸ்டேசன் போய் , புகார் கடிதம் கொடுக்க முயற்சித்த போது” இங்கே போ அங்கே போ “என்று அலைகழித்துக் கடைசியில் புகார் வாங்கிக்கொண்ட பிறகு
CSR கொடுங்க சிவா கேட்ட போது ,“நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு சீக்கிரம் கிடைக்காது?”
“ஒங்கள இடிச்ச வண்டியில் யாருக்காவது காயம் பட்டுருக்கான்னு. பார்க்கணும் விசாரிக்கணும்” . ஸ்பாட் வெரிடபிகேஷன் பண்ணனும்
“எதுக்கும் போயிட்டு நாளை மறுநாள் வாங்க?” .
பதிலில் ஒரு அலட்சியமும் திமிர்தனமும் இருந்ததைக் கவனித்தான் ஷிவா.
“சரி பொறுமையா இருப்போம் வாடா “என்று சிவாவின் அப்பா வெளியே அழைத்து வந்தார்.
மறுநாள் போய்க் கேட்ட போது “சர்வர் பிராப்ளம். நாளிக்கி வாங்க கட்டாயம் வாங்கிகிட்டுப் போகலாம் “என்றார் சப் இன்ஸ்பெக்டர்.
“வரும் பொழுது ஒரு பண்டல் A 4 ஷீட்டும், இருபது கார்பன் பேப்பரும் வாங்கிட்டு வாங்க”.
இன்னொரு கேஸ் விசாரிக்கும் போது அவர்களிடம் இதே மாதிரி கேட்டதை கவனித்தார்.
“என்ன சிவா! இது லஞ்சமாக இருக்கு. மாச மாசம் ஸ்டேஷனரி வாங்க ஃபண்ட் அலாட் பண்ணுவாங்க இல்லை அதில் வாங்க வேண்டியது தானே”.
“ஆமாம் அப்பா. இது புதுசா இருக்கு.”
“இப்பயாவது நீ யாருன்னு சொல்லி CSR வாங்க கூடாதா?
இது ஒரு சவாலான சூழ்நிலை போல் தெரிகிறதே!”
“ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஒரு சமூகச் சேவை பதிவேட்டை (CSR) வழங்குவதற்குப் பதிலாக எழுதுபொருட்களைக் கோரினால், அது ஒழுக்கக்கேடான நடத்தை அல்லது ஊழல். “
“ஆமாம் !அப்படித்தான் தெரியுது நாமே *கண்ணியமா இதை நிராகரித்து விடுவோம்”
“எங்களுக்கு அந்த வசதி இல்லை *: என்று மறுத்து பார்ப்போம்” .
வாய் வார்த்தையா சொன்ன விஷயத்தை ஒரு வேண்டுகோளாக எழுதிக் கொடுங்கன்னு கேட்கலாமா?.
“சரி நாங்க பேப்பர் வாங்கித் தர்றோம். ஒரு ரசீது நாங்கள் பெற்றுக் கொண்டோம் என்று கேட்டு பார்ப்போமா?”சிவாவின் அப்பா தன் அனுபவத்தைக் காட்டினார்.
இன்ஸ்பெக்டர் பார்க்கலாம் என்றால் அவர் எஸ். பீ ஆபிஸ் போயிருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது.
“வாங்கப்பா? நான் எப்படி வாங்கறதுண்ணு முடிவு பண்ணிட்டேன்” .
வெளிய வந்தார்கள்.இனி இங்கு வெயிட் பண்ணி பிரயோசனமில்லை. நேரே காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சென்று நடந்த விபரத்தை எழுதிக் கொடுத்தான்.
அப்படியே . *ஊழல் எதிர்ப்பு ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டு *: நடந்த சம்பவத்தைப் புகாராக மெயில் அனுப்பினான்.
“இந்தா இந்த வாய்ஸ் ரெக்கார்டிங் மெஸேஜ்யும் சேர்த்துஅனுப்பு. நீ எஸ்.ஐ கிட்ட பேசிக்கிட்டு இருந்த போ நான் ஒங்க பேச்சை ரெகார்ட் பண்ணியது அவருக்குத் தெரியாது”.
அப்பா” யூ ஆர் பிரில்லியன்ட் “ இது சூப்பர் எவிட்ன்ஸ் “
மறுநாளே அவன் மொபைல்க்கு அழைப்பு வந்தது.
சம்பந்தபட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வரசொல்ல,
“ஒரு சின்ன விஷயத்தை இவ்வளவு பெரிசு படுத்திப் பிரச்சனையில் கொண்டு விட்டீங்க. சம்பந்த பட்ட எஸ் ஐ 15 நாள் சஸ்பென்ட் பண்ண சொல்லி உத்திரவு வந்துருக்கு.”
“இந்தாங்க ஒங்க CSR.”.
“எதுங்க சின்ன விஷயம்.? டிராபிக் இன்ஸ்பெக்டர் இன்வெஸ்டிகேசன் முடிந்து ரிப்போர்ட் கொடுத்த பின் பத்து நாள் கழிச்சும் புகார் கொடுத்தபின்பு CSR எங்களுக்கு அரை மணி நேரத்தில் கிடைக்க வேண்டிய மூணு நாளும் கிடைக்கல. இந்த அலைச்சலும் லஞ்சமும் தேவையா சார்.?”
எல்லாவிதமான செயல்களுக்கும், லஞ்சம் கேட்கும் இந்தப் போலீஸ் ஸ்டேஷன் சாமானிய மக்களை எப்படிப் பாடு படுத்தும் . என்று புரிந்தது .
அந்தப் போலீஸ் ஸ்டேஷன் பற்றிய ஊழல்களைச் சேகரித்து மேலிடத்துக்கு அனுப்பினான் CB சி .ஐ.டி ஆபீஸில் வேலைப்பார்க்கும் சி.ஐ. டி சிவா.