கீர்த்தி சுரேஷ் திருமணம்
அஜித்
படத்துக்கு பிரமோஷன் என்ற பெயரில் பெரிய பில்டப் எல்லாம் கொடுக்காதீர்கள் என்று கண்டிஷனாக அஜித் சொன்னதால் விடாமுயற்சி டீசர் திடீரென்று எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவு வெளியிடப்பட்டதாம்.
மமிதாபைஜு
விஜய் நடிக்கும் படத்தில் மமிதாபைஜு கல்லூரி மாணவியாக நடிக்கிறார். விஜய் மீது இந்த படத்தில் அவருக்கு ஒரு தலை காதலாம்.
நயன்தாரா
ராக்காயி படத்துக்காக புடவை கட்டிக்கொண்டு ஆக்ஷன் காட்சிகள் நடித்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது என்கிறார் நயன்தாரா.
வாணி போஜன்
அடுத்த வேளை சாப்பிட வேண்டும். என்னைப் பற்றி பேசுபவர்கள் யாரும் எங்கள் குடும்பத்துக்கு சாப்பாடு போட மாட்டார்கள். அப்படி ஆரம்பித்தது தான் என் நடிப்பு பயணம் என்கிறார் வாணி போஜன்.
திரிஷா
உன்னை மனமுடைய செய்தவரிடம் நெருக்கமாக நட்புடன் பழகும் ஒருவருடன் எந்த காலத்திலும் நாம் பழகக் கூடாது இது த்ரிஷா போட்டு இருக்கும் இன்ஸ்டா போஸ்ட் யாரைச் சொல்கிறார் என்று ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள்.
ராஷ்மிகா
சமீபத்தில் புஷ்பா பட பிரமோஷனில் சென்னையில் தொகுப்பாளனி உங்கள் வருங்கால கணவர் திரைத்துறை சேர்ந்தவரா அல்லது எந்தத் துறையை சேர்ந்தவர் என்று ராஷ்மிகாவிடம் கேட்டபோது அதுதான் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே என்று சிரித்தபடியே சொல்லி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் வைரலாகி கொண்டு இருக்கிறது.
ஸ்ரீ வள்ளி
புஷ்பா படத்தில் ஸ்ரீ வள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல அவரை உண்மையாக உணர்கிறேன் அவள் எனது இரண்டாவது அடையாளம் என்கிறார் ரஷ்மிகா.
தனுஷ்
நயன்தாரா தொடர்ந்து தனுஷை கடுமையாக விமர்சனம் செய்து வந்தாலும், தனுஷ் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பது அவருக்கு பெருமை என்று ஒரு பக்கம் சொன்னாலும், இன்னொரு பக்கம் அவரது விவாகரத்து விஷயம் பெரிய அளவு பேசும் பொருளாக இல்லாதது அவருக்கு சந்தோஷமாக இருக்கிறது.
Leave a comment
Upload