தொடர்கள்
பொது
மலைகள் தினம் ... "உலகில் முக்கியமான மலை தொடர் மேற்கு தொடர்ச்சி மாலை " - ஸ்வேதா அப்புதாஸ் .

உலக மலைகள் தினம் வருடந்தோறும் டிசம்பர் 11 ஆம் தேதி அனுசரிக்கபடுகிறது .

20241111225742272.jpg

சமீப காலமாக எதற்கெல்லாமோ தினங்கள் அனுசரிக்க பட்டுவரும் வேளையில் அகில உலக மலைகள் தினம் உலகமுழுவதும் மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது .

இயற்கை ஆர்வலர்கள் டிசம்பர் 11 ஆம் நாளை உயர்ந்த சிகரங்கள் போல உயர்த்தி பார்க்கிறார்கள் .

20241111225804435.jpg

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சிவதாசிடம் பேசினோம் ,

20241111225830621.jpg

" இன்டர்நேஷனல் மவுண்டைன் இயர் என்று 2002 ஆம் வருடம் டிசம்பர் 11 ஆம் தேதியை அறிவித்தது ஐ நா . ஆல்ப்ஸ் மலையில் இருந்து உலகில் உள்ள அனைத்து மலைகளுக்கும் இந்த நாள் பொருந்தும் .

20241111225859531.jpg

உலகில் முப்பது சதவிகிதம் மலைகளை நம்பி தொடர்புடன் இருக்கிறது இதில் மழை ,பனி , காலநிலை ,குடிதண்ணீர் ,விவசாயம் மற்றும் பழங்குடியினரின் வாழ்க்கையும் அடக்கம் .

20241111225938472.jpg

உலகில் உள்ள 14 மலை தொடரில் பல்லுயிர்பெருக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் மலை தொடர் நம் மேற்குத்தொடர்ச்சி மலை தான் .மலை தொடர்ச்சியின் இதய பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது .

நீலகிரியை பொருத்தமட்டில் ஏகப்பட்ட மலைகள் காணப்படுகின்றன இவைகளில் தொட்டபெட்டா சிகரம் , தேவர்பெட்டா என்று நிறைய மலைகளை பார்க்கமுடியும் .

2024111123000854.jpg

முக்குர்தி மலை ஒரு புல்வெளி சரிந்து காணப்படும் மலை இங்கு தான் உலகிலே அரிய மிக முக்கியமான நீலகிரி வரையாடு காணப்படுகிறது .

இந்த வரையாடை பாதுகாக்க தமிழக அரசு 27 கோடி ஒதுக்கியுள்ளது .

இந்த வரையாடுகள் மலை சரிவில் ஓடி பாய்ந்து வருவதும் அதன் கால் குளம்புகள் பாறைகளில் உரசி நெருப்பு ஏற்பட்டு ஒரு அழகிய ஒளியில் ஓடுவதை பார்த்தால் மெய்சிலிர்த்துவிடும் .

உலகில் எங்குமே இல்லாத சோலைகள் , புலிவெளிகள் அதிகமாக காணப்படும் மலைகள் நீலகிரியில் தான் உள்ளது .

20241111230049968.jpg

முக்கூர்த்தி மலை தொடர் உலகில் எங்குமில்லாத கேரளா சைலன்ட் வேலியை இணைகிறது .

நீலகிரி மலைகள் உலகின் உயிர்சூழல் பாதுகாப்பு உள்ள இயற்கை சூழல் பகுதி .

சுற்றுசூழல் ,போக்குவரத்து , மக்கள் அடர்த்தி , கட்டிடங்கள் என்று வந்தாலும் உயிர்சூழல் இன்னும் பாதுகாப்பாக இருப்பது சுற்றுசூழல் ஆர்வலர்களின் விழிப்புணர்வால் தான் .

20241111230421324.jpg

அதே சமயம் மலைகளை நோக்கி வருபவர்கள் அதிக சுற்றுலா கூட்டம் , வாகன புகை , பிளாஸ்டிக் பயன்பாடு பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மலைகளும் அதனுடே இருக்கும் வனத்தின் மாசுகெட்டுபோய்விடுகிறது என்பது தான் வருத்தமான ஒன்று .

அண்மையில் தமிழக அரசு இந்த மலைகளில் ட்ரெக்கிங் சாகசத்தை துவக்கியுள்ளது .

20241111230629998.jpg

இந்த ட்ரெக்கிங் வனத்தையும் , மலைகளையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையும் கூட .

மலையேற்றம் பயங்கரமான ஒன்று பத்து இடங்கள் அபாயகரமானதாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது ட்ரெக்கிங் செல் பவர்கள் படு எச்சரிக்கையாக செல்வது அவசியம் .

இப்படிப்பட்ட மலைகளில் வசிக்கும் நானும் அனைவரும் இந்த நாளை பெருமையாக கருதுகிறோம் .

அதே சமயம் சுற்றுப்புறசூழல் ,இயற்கை மற்றும் மலைகளை பாதுகாப்பது நமது கடமை என்பதை உணரவேண்டும் என்று கூறினார் .