தொடர்கள்
அனுபவம்
நடந்தது - ஜாசன்

20241022182954466.jpg

ரயிலில் அடிக்கடி சந்திக்கும் நண்பரை அன்று சந்தித்தேன். நாட்டு நடப்புகள் பற்றி அவர் கருத்து எல்லாம் கொஞ்சம் சுளிர் சவுக்கடியாக இருக்கும். பேச்சு கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டருக்கு நடந்த கத்திக்குத்து பற்றி வரும்போது அவர் சொன்ன கருத்துக்கள் எல்லாம் நியாயமாக இருந்தது.

கத்திக் குத்தெல்லாம் இல்லை, அந்தப் பையன் வைத்திருந்தது சாதாரண காய்கறி நறுக்கும் கத்தி. அந்தப் பையன் விக்னேஷ் குற்றப் பின்னணி உள்ளவரோ, அடிக்கடி சிறைக்கு போனவரோ அல்ல. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்திருக்கிறார். புற்றுநோயால் அவதிப்படும் தனது தாய், தவறான சிகிச்சியால் சிரமப்படுகிறார் என்ற ஆதங்கத்தில் தான் அவர் அந்த டாக்டர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார். அது கூட இன்னொரு டாக்டர் கீமே தெரபிஹெவியா தந்துட்டாங்க என்று இந்த டாக்டர் பற்றி கருத்து சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் வாக்குவாதத்தின் போது இந்த சம்பவம் நடந்திருக்கிறது. எல்லோரும் அந்த இளைஞரை மட்டும் குற்றம் சொல்கிறார்கள். டாக்டர்கள் தமிழக முழுவதும் போராட்டம் ஸ்டிரைக் எல்லாம் நடத்தினார்கள். ஆனால் அந்த டாக்டர் தவறாக சிகிச்சை தந்திருக்கிறார் என்ற கேள்விக்கு அமைச்சரும் பதில் சொல்லவில்லை, மருத்துவர் சங்கமும் பதில் சொல்லவில்லை. இது எந்த வகையில் நியாயம். அதுமட்டுமல்ல அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கக் கூடாது என்பது நடத்தை விதி. சம்பந்தப்பட்ட டாக்டர் ஒரு பிரபல மருத்துவமனையில் வேலை பார்க்கிறார் என்று சமூக வலைதளங்களில் பரவலாக உலா வருகிறது. இதுவரை டாக்டர் பாலாஜி அதை மறுக்கவில்லை. அப்படி என்றால் அது உண்மை என்று தானே அர்த்தம் என்ற அந்த நண்பர் இன்னொரு விஷயமும் கேட்டார்.

டாக்டர்கள் எல்லாம் கத்திக்குத்து சம்பவத்திற்கு போராட்டம் நடத்தினார்கள். ஆனால், ரமணா என்ற படத்தில் தனியார் மருத்துவமனைகளின் பகல் கொள்ளை பற்றி விஜயகாந்த் ஒரு வசனம் பேசுவார் டாக்டர்களிடமும், வக்கீல்களிடமும், எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்று சொன்னால் போதும் அவ்வளவுதான் என்று இது டாக்டர்களை அவ மரியாதையை செய்வதாக அப்போ எந்த டாக்டர்களும் எதிர்த்து குரல் தரவில்லையே. இதேபோல் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலும் டாக்டர்களை விமர்சனம் செய்து நிறைய காட்சிகள் வரும் அப்போதெல்லாம் இந்த டாக்டர்கள் எங்கே போனார்கள் என்று கேட்டார்.

கத்திக்குத்து சம்பவத்திற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது என்பது மட்டும் எனக்கு தெரிந்தது.