தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வேங்கை வயல் வழக்கில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஜனவரி 24-ஆம் தேதி தெரிவித்தது. இதன் மூலம் சர்ச்சைக்குரிய வேங்கை வயல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
கடந்த 2022 டிசம்பர் 26-ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் முடுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்த மேல்நிலைப் குடிநீர் தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
தோழமைக் கட்சித் தலைவரான திருமாவளவன் வேங்கை வயல் குற்றவாளிகள் தண்டிப்பதில் காலதாமதம் ஏன் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால் இந்திய அளவில் இது ஒரு பேசும் பொருளாக இருந்தது.
ஒரு கட்டத்தில் இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைத்தது. இது தவிர ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. நீதிபதியும் வேங்கை வயல் சென்று நேரடியாக விசாரணை நடத்தி இருக்கிறார்.
இந்த வழக்கு விசாரணை மிகவும் தாமதப்படுத்தப்படுகிறது. உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற இந்த அரசு முயற்சி செய்கிறது என்றெல்லாம் விமர்சனம் வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணையின் போது தான் தமிழக அரசு வேங்கை வயல் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்கள் விசாரணை முடிந்து விட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் முரளி ராஜா, சுதர்சன், மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு.
அரசு தரப்பு பல மாதங்களாக விசாரணை நடத்திய பிறகு பலர் மீது சந்தேகப்பட்டு விசாரித்து இறுதியாக இந்த மூவரும் குற்றவாளிகள் என்பதை அடையாளம் கண்டுள்ளோம்.
இந்த மூவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் அதிர்ச்சி தகவல். அதில் ஒருவர் முரளி ராஜா தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுபவர் என்பது இன்னொரு அதிர்ச்சி தகவல். குற்றப்பத்திரிக்கை என்பது புகார்தாரருக்கும் எதிரிக்கும் மட்டும் வழங்கப்படும் ஆவணம் என்பதால் குற்றப்பத்திரிக்கையில் உள்ள பல விஷயங்கள் பொதுவெளியில் வரவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
தலித் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் தலித் மக்களே மலம் கலந்து விட்டார்கள் என்ற தமிழக அரசின் "கண்டுபிடிப்பை "கூட்டணிக் கட்சிகளே ஏற்க வில்லை
வேங்கை வயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியலின சமூகத்தை சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரண நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது.
மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் திருமா. இதை தவிர விடுதலை சிறுத்தை கட்சி இந்த வழக்கில் மேல்முறையீடும் செய்திருக்கிறது. ஆரம்பம் முதல் இந்த வழக்கில் பட்டியலின மக்களை சிக்க வைக்க காவல்துறையின் முயற்சி செய்கிறது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார் திருமா. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறது.
வேங்கை வயல் விவகாரத்திற்கு தனிமனித பிரச்சனை தான் காரணம் என்கிறது தமிழக அரசு. வேங்கை வயலில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் 196 செல்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
வேங்கை வயல் சம்பவத்திற்கு சாதி மோதல் அல்லது அரசியல் காற்புணர்ச்சி காரணம் கிடையாது என்று சொல்லி இருக்கிறது தமிழக அரசு செய்து குறிப்பு. அதே சமயம் திமுகவை சார்ந்தவர்கள் யாரும் இதைப் பற்றி எந்த கருத்தும் சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
தொடர்ந்து திமுக தான் இஷ்டப்படி நடப்பதாக திருமாவளவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னை புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன் "நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம் ஆனால் மனநிறைவுடன் இருக்கிறோம் என்று சொல்ல முடியாது . திமுக எதிர்க்கிறதோ இல்லையோ நான் சனாதனத்தை கடுமையாக எதிர்ப்பேன். திமுகவோடு பயணிக்கும் போது விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. வலிகள் இல்லாமல் இல்லை ஏமாற்றங்கள் இல்லாமல் இல்லை. ஈவேராவின் கொள்கைகளை காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்குவது ஏற்க முடியாது என்று பேசி இருக்கிறார்.
திமுக இதை மௌனமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
Leave a comment
Upload