திரிஷா
விஜயின் புதுக் கட்சியில் சேருவார் அவர்தான் கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளர் என்றெல்லாம் திரிஷா பற்றி செய்திகள் வலம் வந்தன. அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார் அவரது அம்மா உமா கிருஷ்ணன்.
சாய் பல்லவி
சாய் பல்லவி குன்னூரில் தான் படித்த பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கிருந்த பள்ளி குழந்தைகளுக்கு அவர் சொன்ன அறிவுரை "இப்போது படிக்கும் குழந்தைகளிடம் சோசியல் மீடியா ஆதிக்கம் உள்ளது கவன சிதறல் ஏற்பட வாய்ப்பு அதிகம் அதற்கு இடம் கொடுக்காதீர்கள். ஒழுக்கம் நல்ல முறையான வாழ்க்கை முறையை நமக்கு பெற்றுக் கொடுக்கும் "என்றெல்லாம் புத்திமதி சொல்லி இருக்கிறார் சாய் பல்லவி.
பராசக்தி
சிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்கார இயக்கும் படத்துக்கு பராசக்தி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். இது தவிர ஸ்ரீ லீலா அதர்வா ஆகியோரும் உண்டு.
ராஷ்மிகா
மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இந்தப் படத்திற்கு ஜாவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் விக்கி கவுசல் ராஷ்மிகா நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது அதில் உள்ள நடன காட்சிக்கு எதிர்ப்பு வந்ததைத் தொடர்ந்து அந்தப் பாடல் காட்சி நீக்கப்பட்டிருக்கிறது.
சுட சுட
ஜென்டில் வுமன்
ஜெய் பீம் புகழ் லிஜோ மோள் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ஜென்டில் வுமன். இது பெண்கள் விஷயம் பேசும் படம் பெண்ணியம் படம் அல்ல என்கிறார் இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன்.
கராத்தே பாபு
நடிகர் ரவி மோகன் அதாவது பழைய ஜெயம் ரவி நடிக்கும் அரசியல் கதை படத்திற்கு கராத்தே பாபு என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
தனுஷ்
இன்னொரு இந்தி படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கீர்த்திசனோன்.
கங்கனாரனாவத்
பாராளுமன்றத் தேர்தல் காரணமாக நடிகை கங்கனாரனாவத் சினிமாவுக்கு லீவு விட்டிருந்தார். இப்போது வெற்றி பெற்று ஆளும் கட்சி எம்பி ஆகிவிட்டார். எனவே மீண்டும் நடிக்க வரத் தொடங்கி விட்டார். ஏற்கனவே விஜய் இயக்கத்தில் நடிகர் மாதவனுடன் இணைந்து நடிக்கும் படத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விட்டது.
ஷோபனா
பத்மபூஷன் விருது வாங்கும் நடிகை ஷோபனா, ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடிக்கும் ராமாயணம் படத்தில் ராவணனின் தாய் வேடத்தில் நடிக்கிறார்.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்ததால் நடிகை நயன்தாரா தாய்மொழியான மலையாளத்தில் நடிப்பதை தவிர்த்தார். தற்போது டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர இன்னொரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார்.
அனிகா சுரேந்திரன்
குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் தற்போது தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் முத்தக் காட்சிகள் எல்லாம் உண்டாம்.
Leave a comment
Upload