தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20241022135523334.jpeg

கூட்டணிக்கு வருகின்றவர்கள் 100 கோடி கேட்கிறார்கள் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அமைச்சர் பதவிக்கு பதில் பணம் கேட்கிறார்கள் இதான் விஷயம் !!

குவாரிகளில் ரூபாய் 25 ஆயிரம் கோடி முறைகேடு விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு காங்கிரஸ் கடிதம்.

தலைவருக்கு கூட்டணி தொல்லை அதிகமாகிக் கொண்டே போகிறது !!

கருத்து வேறுபாடுகளாலே கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு பறிபோனது. முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி.

அண்ணன் கட்சி ரகசியத்தை எல்லாம் வெளியில சொல்றார் !!

விவசாயிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை மத்திய மாநில அரசுகள் தரவில்லை டாக்டர் ராமதாஸ்.

மத்திய அரசு ஆளும் கட்சி கூட்டணியில் நீங்க இப்ப இல்லையா டாக்டர் அத கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் !!

சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து நான் பாஜகவில் சேரவில்லை, சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த முன்னாள் ஆம் ஆத்மி அமைச்சர் பேட்டி.

நம்பிட்டோம் !!

இனியாவது வாய் ஜாலத்தை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும் கே.டி.ராமராவ் செயல் தலைவர் பாரத் ராஷ்ட்ரசமிதி.

ரொம்ப பாதிக்கப் பட்டவர் போல தெரியுது !!

மகாராஷ்டிராவிலும் ஜார்க்கண்டிலும் தேர்தல் அதிகாரிகள் தூங்கி வழிகிறார்கள் அசோக் கெலட் மூத்த காங்கிரஸ் தலைவர்.

தேர்தல் முடிவு காங்கிரஸ் தலைவருக்கு தெரிஞ்சு போச்சு !!

கும்பகர்ணன் ஒரு தொழில் நுட்ப நிபுணர் நவீன இயந்திரங்களை வடிவமைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் அவர், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல்.

அக்கா எப்பவுமே புதுசா யோசிப்பாங்க !!

அதிமுகவுடன் கூட்டணி இல்லை தமிழ்நாடு வெற்றி கழகம் அறிவிப்பு.

இப்ப குமுதா ஹாப்பி தானே !!

திமுக கூட்டணி சலசலப்பு எதுவும் இல்லை எஸ்.திருநாவுக்கரசர்.

ஆமா சும்மா பேசிகிட்டு இருக்காங்க அவ்வளவுதான் !!

பொதுக் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு நாற்காலி இலவசம் என அறிவித்தது திருப்பூர் அதிமுக.

ஆட்சியில் பங்குக்கு முன்னோட்டம் நாற்காலி !!

திமுக, அதிமுக இரண்டுக்குமே மக்கள் பற்றி அக்கறை இல்லை உயர்நீதிமன்றம் சலிப்பு.

உண்மைய உரக்க சொல்லிட்டாங்க !!

பொய்யர் பழனிச்சாமி ஸ்டாலின் ஆவேசம்.

ரொம்ப பாதிக்கப்பட்டார் போல தெரியுது.

டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூபாய் 397 கோடி ஊழல் செந்தில் பாலாஜி மீது போலீசில் புகார்.

ஜாமீன்ல இருந்து வந்ததும் ரொம்ப பாஸ்ட்டா இருக்காரு போல தெரியுது !!

பொறுப்புக்காக பாஜகவில் இணையவில்லை சரத்குமார்.

தூக்க கலக்கத்தில் கட்சியில் சேர்ந்துட்டாராம் !!

சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினர் பங்கு எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை ஆளுநர் ரவி.

ஜார்க்கண்ட் தேர்தலுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை!!

அதிமுக ஆட்சியில் வெட்டிய குளத்திற்கு அம்மா குளம் என்று ஜெ பெயரை வைத்தனர். அதை அவர்கள் மறந்துவிட்டு விமர்சிக்கிறார்கள் அமைச்சர் பொன்முடி.

நீங்க பேசாம வீராணம் ஏரிக்கு கருணாநிதி ஏரின்னு பெயர் வச்சிருங்க !!

திமுக அடுத்து 550 தேர்தல் வாக்குறுதிகளில் 45 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன அன்புமணி ராமதாஸ்.

கரெக்டா கணக்கு வச்சிருக்கார் டாக்டர்.