தொடர்கள்
கல்வி
தமிழகத்தின் நல்லாசிர்யர்கள் - மாலா ஶ்ரீ

20240731094631419.jpg 20240731094711112.jpg

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 50 பேர் இந்தாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகி உள்ளனர். தமிழகத்தின் வேலூர் மாவட்டம், ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் மற்றும் மதுரை, டி.வி.எஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

2024-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழகத்தின் கோபிநாத், முரளிதரன் ஆகிய 2 பேர் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 50 ஆசிரியர்களுக்கு, வரும் செப்டம்பர் 5-ம் தேதி, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தில் புதுடெல்லி விக்யான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருது வழங்கி கௌரவிக்கிறார்.

இந்த தேசிய நல்லாசிரியர் விருதுடன் 50 பேருக்கும் தலா ₹50 ஆயிரம் மற்றும் வெள்ளி பதக்கத்துடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழகத்தின் வேலூர், மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களான கோபிநாத், முரளிதரன் ஆகிய இருவருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.