நவீன ஊட்டியை உருவாக்கின ஜான் சல்லிவன் உருவாக்கின ஏரி தான் இன்றைய படகு இல்லம் .
சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழு க்கும் இந்த ஏரி தன் அழகை இழந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் இதை சுற்றி வந்து கொண்டிருக்கும் கட்டுமானங்கள் .
ஒரு காலத்தில் இயற்கை அழகோடு ஒன்றித்து காட்சியளித்த இந்த ஏரி தற்போது கட்டுமானங்கள் நிறைந்து காணப்படுகிறது .
எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது ஏரியின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல ஒரு பாலம் கட்ட முடிவு செய்து எல்லா பணிகளும் ரெடியாக அது எனோ கைவிடப்பட்டது .
முன்னாள் கூடலூர் எம் எல் ஏ சுற்றுலா துறை அமைச்சராக இருந்த மில்லர் ஊட்டி படகு இல்லத்தை பொலிவு படுத்த சில நடவடிக்கை எடுத்தார் ..
அப்பொழுது அவரை நாம் சந்தித்து மினி கார்டனில் ஒரு படகு குழாம் அமைத்து மினி கார்டனை விசிட் செய்யும் சுற்றுலா பயணிகள் படகில் ஏறி எதிர் புறம் இருக்கும் படகு இல்லத்திற்கு பயணிக்க படகு வசதி செய்து கொடுக்கலாம் என்று கூற அவரும் சரி என்று கூறியதோடு அந்த ஐடியா மறந்து போய்விட்டது .
தமிழக சுற்றுலா மேம்பாட்டு கழகம் பெரும்பாலான படகு இல்ல பகுதியை தனியாரிடம் ஒப்படைத்து ஏதேதோ விளையாட்டு யுக்திகள் நடைபெறுகின்றன .
இது ஒரு பக்கம் இருக்க ஏரி கரையில் சாகச சுற்றுலா கோபுரம் ஜிப் லைன் மற்றும் கயிறு பாலம் அமைக்க பட்டு வருகின்றது .
இந்த நவீன சாகச சுற்றுலா கட்டுமான பணிகள் கடந்த ஒருவருடமாக நடந்து கொண்டிருக்க இந்த கட்டுமான பணிகள் இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று இதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர் .
போராடின இவர்களை கைது செய்யும் படலமும் நடந்துள்ளது .
தற்போது இந்த கட்டுமான பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது .
இந்த கட்டுமானத்தை மேற்கொள்ளும் ஒப்பந்த காரர் (Hill area Coservation Authority) - மலை பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் முன் அனுமதி ஒப்புதல் பெறவில்லை என்றும் 1993 ஆம் வருட மாஸ்டர் பிளானுக்கு எதிரானது என்று கூறுகின்றனர் .
ஊட்டி விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் கூறும் போது ,
" நம்ம ஊட்டி எரி செயற்கையானது தான் ஜான் சலிவனால் உருவானது அதே சமயம் இது ஒரு சதுப்பு நிலத்தில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது .
இங்கு எந்த கட்டுமானமும் உருவாக கூடாது .
தற்போது சாகச சுற்றுலா என்ற பெயரில் பெரிய கோபுரம் ஜிப் லைன் , கயிறு பாலம் அமைக்கும் பணி கடந்த வருடம் துவங்கி நடந்து வருகிறது . ஏரியின் இயற்கை எழிலை பாதிக்கக்கூடியது . அதை எதிர்த்து நாங்கள் போராடினோம் எங்களை கைது செய்யும் அளவுக்கு சென்றுவிட்டனர் .
தற்போது இந்த கட்டுமான ஒப்பந்தக்காரர் மலை பகுதி பாதுகாப்பு ஆணையத்திடம் அனுமதியோ ஒப்புதலோ பெறவில்லை அதனால் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . மலைகளின் அரசியின் இயற்கை அழகை கெடுக்கும் எந்த பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பது தான் சரி இதற்காக தான் நாங்கள் போராடுகிறோம் " என்கிறார் .
படகு இல்லம் செல்லும் வழியில் உள்ள நடைபாதையில் புதிய தடுப்பு இரும்பு வேலி அறைகுறையாக அமைத்து பாதியில் நிற்கிறது .அதே போல நடைபாதையில் அலங்கார மின் விளக்கு பொருத்தப்பட்டு அதுவும் பாதியில் எனோ நிற்கிறது .
பழைய அழகான படகு இல்லம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது வேதனையான ஒன்று என்று கூறுகிறார்கள் சுற்றுசூழல் ஆர்வலர்கள் .
Leave a comment
Upload