தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

இனியா

தமிழில் வாகை சூடவா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இனியா. தற்சமயம் தமிழ் மற்றும் தெலுங்கு மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இது தவிர புதிதாக ஒரு நடன பள்ளி தொடங்கியிருக்கிறார் நடிகை இனியா.

நித்யா மேனன்

2024072919531355.jpg

தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார்.

100 கோடி

20240729195430582.jpg

விக்ரம் ,மாளவிகா மோகன் நடித்து வெளியாகி இருக்கும் தங்கலான் படம் வசூல் 100 கோடியை நெருங்குகிறது.

டாப்ஸி

தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. இப்போது இந்தி திரை உலகில் அவர் பிஸி நடிகை. என்னை துரத்தி துரத்தி படம் எடுக்காதீர்கள். நான் முதலில் பெண் அப்புறம் தான் நடிகை என்கிறார் டாப்ஸி.

கீர்த்தி சுரேஷ்

20240729200118619.jpg

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளா லீக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள திருவனந்தபுரம் கிரிக்கெட் அணியின் உரிமையாளராக இருக்கிறார். அடுத்த மாதம் கிரிக்கெட் போட்டி கேரளாவில் நடக்க இருக்கிறது.

ராஷ்மிகா

20240729200248845.jpg

உணவு, சிரிப்பு, தூக்கம், பயணம், நல்ல புத்தகம், காபி மற்றும் என் நாய்க்குட்டி இவை அனைத்தும் என் வாழ்க்கைக்கு மிக முக்கியம் என்று பதிவிட்டு இருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

விஜய்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் திரைப்படம் மூன்று மணி நேரம் ஓடும் திரைப்படம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ்.