ஹவாய், அழகான கடற்கரைகள் நிறைந்த தீவானதால் இங்கு வரும் பயணிகள் பற்பல இடங்களில் கடலில் நீராடி மகிழ்கின்றனர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற உலாவல் விளையாட்டை (SURFING Sports) சுற்றுலா பயணிகள் விரும்பி ஈடுபடுகின்றனர். கடற்கரை சந்தோஷத்தை விட விசை படகு சவாரியில் பெரிய தீவுகளில் இருந்து சிறிய தீவுகளுக்கு பயணிக்கும் அனுபவம் பயணிகளை சிலிர்க்க வைக்கிறது.
ஹொனலுலு வைக்கிக்கி கடற்கரையிலிருந்து அருகிலுள்ள மற்ற சிறிய தீவுகளுக்கு படகு சவாரி வீடியோ இதோ
கடற்கரைகளை ரசிப்பதும் சுவாரசியமாக இருந்தாலும் ஹவாய்த் தீவுக்கும் ஓஹாஹூ ஹோனலூலு தீவுகளுக்கிடையே உள்ள சிறிய தீவுகளுக்கு படகு சவாரி மிகவும் த்ரில்லாக இருந்தது.
ஹவாய் தீவுகளின் தொடர்ச்சியான மலைகள் பெருமளவு நீருக்குள் மூழ்கி பூமிக்கு வெளியே காணப்படும் மேற்புற பகுதியாகவும், இவற்றில் சில எரிமலைகளில் உருவான சாம்பல் கலந்த மணற்பகுதியாகவும் இணைந்து உள்ளது.
பசிபிக் கடலில் உள்ள “மோரா” தீவிலிருந்து (நீயுஜிலாந்து அருகில்) பழங்குடியினர் நான்காம் நூற்றாண்டில் ஹவாய் தீவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். அதை தொடர்ந்து சில நூற்றாண்டுகளில் பசிபிக் தீவுகளான டோங்கா (Tonga), டஹிட்டி (Tahiti), பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடலில் உள்ள தீவுகள் (Filipinos, Fujians) என பலர் ஹவாய்க்கு குடி பெயர்ந்துள்ளார்கள். பல வேறு கலாசாரம் கொண்ட இவர்கள் யாவரும் ஹவாய்க்கு குடி வந்த பின், பாலிநேசியன்ஸ் (Polynesians) என்ற இனத்தவராக இங்கு வாழ்கின்றனர். “அலோஹா” என்று அவர்கள் பெரிதும் மனதார ஒருவரை ஒருவர் வணக்கம் சொல்லி கொள்வதன் மூலம் தங்களுக்குள் உள்ள இணக்கத்தை வளர்த்து கொண்டுள்ளனர்.
1,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றின் பூர்வீக ஹவாய் மற்றும் பாலினேசியர்கள் இப்போது அமெரிக்காவின் 50வது மாநிலமாக ஹவாயின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டனர்.
இவர்களுக்கு படகு உற்பத்திதான் முக்கியத் தொழில். மேலும் சர்பிங், மற்றும் (Outtrigger Canoeing) மேம்படுத்தப்பட்ட துடுப்பு படகு போட்டியை பொழுது போக்கு விளையாட்டு பந்தயங்களாக போட்டி நடத்தி ஒரே சமூகமாக வாழ்கின்றனர்.
ஹவாய்க்கு வரும் சுற்றுலா பயணிகள் பாலினேசியன் குடியிருப்பில் தினந்தோறும் நடைபெறும் கலாசார நிகழ்ச்சியை கண்டு செல்கின்றனர். இந்த இனத்தவரின் வித்தியாசமான தோற்றம், கட்டான உடலமைப்பு, பனை மர ஓலைகளை கொண்டு அவர்கள் அணியும் வெவ்வேறு வளைவுகள், பூக்களால் ஆன அலங்காரங்கள் தான் இங்கி ஹைலைட்டே. இவர்கள் அணியும் உடைகள் பலவண்ணங்களுடன உள்ள அச்சு வடிவமைப்புகள் கொண்டு அசத்தலாக அமைந்துள்ளது.
கலை நிகழ்ச்சியில் தெளிவான ஹவாய் நடனங்களான ஹூலூ (Hulu — குழுவாக தங்களது தோள்பட்டை கை தசைகளை அசைத்து கொண்டு புரியும் ஆட்டம்) மற்றும் அலோஹா நடனம் (உயர்வும் தாழ்வும் உடைய அலை அலையான சைகைகளை, ஒலிக்கின்ற இசை அல்லது பாடலுக்கு தகுந்தவாறு குழுவுடன் ஆடுவது) பயணிகளை மிகவும் கவர்கிறது.
சமோ (Sami) இனத்தவரின் ‘Fire knife’ நடனம், டஹிட்டியின் (Tahiti) இனத்தவரின் ‘ori’ நடனம் (இசைக்கின்ற முரசு ஒலிக்கு ஏற்றவாறு இடுப்பின் அசைவும், சுழற்ச்சியும் புரிவது), சமோவன் (Samoan) ஆண்கள் குழுவாக அறைந்து கொண்டு புரியும்) ‘slap dance’ என வித்தியாசமான திறமைகளை இங்கு பார்க்கலாம். இந்த அபூர்வ திறமைகள் கொண்ட பூர்வீக மக்களின் ஆட்டங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு அறிய விருந்து.
பயணத்தின் இறுதி கட்டமாக ஓஹாஹூ தீவில் அமைதியான மற்றும் நீர்நிலை. குன்றுகள் என எழிலான சூழ்நிலை உள்ள ISKON ஆலயம் சென்றோம். இந்திய உணவு அருந்தி ஹவாய் சுற்றுலாவை முடித்துக்கொண்டோம்.
இந்திய சைவ உணவுகளுக்கு ஹவாய் தீவில் பஞ்சமில்லை.
யெம்மி யெம்மி தோசை....வேணும்னா ஹாய்யா ஹவாய் போகணும்.
அலோஹா அலோஹா அலோஹா (ஹவாய் மக்கள் கூறும் வணக்கம்)
வணக்கம் வணக்கம் வணக்கம்.
Leave a comment
Upload