திமுக ஆட்சி அறநிலையத்துறையின் பொற்காலம் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்.
இப்படி எல்லாம் பேசினா ஆசிரியர் வீரமணி கோவிச்சு பாரு !!
அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலில் கால்பதிக்க வேண்டும் பிரதமர் மோடி அழைப்பு.
அவங்க ரெடி நீங்க ரெடியா !!
நடிகர் விஜய்யுடன் சந்திப்பு கூட்டணிக்காக அல்ல தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
தேர்தல் தேதி அறிவிப்பு வரை கூட்டணி பற்றி நாங்க பேரம் பேசிக் கொண்டே இருப்பது தானே வழக்கம் இப்ப ஏன் அவசரம் !!
கச்சத்தீவை மீட்பாரா முதல்வர் ? முத்தரசன் திடீர் முரண்டு.
இப்ப வரவர கூட்டணி கட்சி அலப்பறை தான் ஜாஸ்தியாயிட்டே இருக்கு தலைவரே !!
நடிகர் ரஜினி சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கருணாநிதியை புகழ்ந்து பேசி வருகிறார். முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு.
அதான் எல்லாருக்கும் தெரியுமே !!
திமுக நிர்வாகிகள் மீதான வழக்குகள் ஒரு மாதத்தில் வாபஸ் அமைச்சர் ரகுபதி.
அதாவது அமைச்சர் எல்லாம் முறைப்படி செய்யணும்னு சொல்றார் !!
எப்போதும் தனித்தே போட்டி சீமான் உறுதி.
ஐ அம் வெயிட்டிங்ன்னு போன மாசம் சொன்னீங்க அது சும்மாவா !!
புதியதாக துவங்கிய கட்சி அமாவாசையை தாண்டாது விஜயை மறைமுகமாக சாடிய ஆர் எஸ் பாரதி.
அது என்ன அமாவாசை கணக்கு ?
பழனி முருகன் மாநாடு போல பிற மதங்களுக்கும் விழா நடத்த வேண்டும் ஜவாஹிருல்லா.
அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் நீங்களும் வந்துடுவீங்க பரவாயில்லையா !!
அதிமுகவுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து தந்ததே பாஜக தான் அமைச்சர் எல்.முருகன்.
ஆமாமா ஆளுங்கட்சியா இருந்தவர்களை எதிர்க்கட்சி ஆக்கினீர்கள் அதைத்தானே சொல்கிறீர்கள் !!
தமிழகத்தில் திமுகவை பாஜக நிச்சயம் ஒழிக்கும் அண்ணாமலை.
அப்ப அடுத்து அவங்களோட கூட்டணியா !!
நாட்டில் தினம் தோறும் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது அனைவரின் கடமையாகும் மேற்கு வங்க முதல்வர் மம்தா.
அதுக்கு தான் சிஸ்டர் வந்து வழக்கே பதிவு செய்யாமல் பார்த்துக்கிறாங்க !!
தனியார் பள்ளியில் தமிழில் பேச தடை எதிர்த்து கலெக்டரிடம் பெற்றோர் புகார்.
இஸ் இட்!!
பழனிச்சாமி பற்றிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் அண்ணாமலை திட்டவட்டம்.
நீங்கதான் ஒரு வாட்டி முடிவு செஞ்சுட்டா உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்களே அதான் எங்களுக்கு தெரியுமே !!
திமுகவில் குற்றவாளிகளுக்கு இடமில்லை அமைச்சர் ரகுபதி.
ஹவுஸ்புல் போர்டு மாட்டிட்டங்களோ !!
கிளாம்பாக்கம் முனையத்தில் டாஸ்மாக்.
மது பிரியர்கள் மனு கொடுத்து இருப்பார்களோ !!
முன்னாள் பெண் இன்ஸ்பெக்டர் கொலை மதிமுக மாவட்ட செயலாளர் கைது.
கூட்டணி சேர்க்கை காரணம் !!
Leave a comment
Upload