தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை. - பாகம் -26 ரேணு மீரா

2024050713063507.jpg

கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்

குத்து ஒக்க சீர்த்த இடத்து. –குறள்490

அடங்கி இருக்கும் காலத்தில் கொக்கு போல் இருக்க வேண்டும், தக்கவாய்ப்பு நேரம் போது கொக்கு மீனை கொத்துவது போல அச்செயலை தவறாமல் செய்து முடித்தல் வேண்டும்.

காலம் நேரம் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை முக்கியம் என்பதை வள்ளுவ பெருமான் இந்த குறளில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதை நம் குழந்தைகளுக்கு சரிவர கொண்டு சேர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

சரியான நேர பயன்பாடு மற்றும் திட்டமிடுதல்.

சில குறிப்புகள் -

நாம் செய்ய வேண்டிய வேலைகளை அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்தி பட்டியலிட வேண்டும். நாம் முறையாகச் செய்ய ஆரம்பித்தால் சரியான காரியங்களை, சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியும். மேலும் முக்கியமான காரியங்களை செய்ய நேரம் இல்லாமலோ, மறந்தோ தவிர்த்து விட மாட்டோம்.

இப்படி திட்டமிடும்போது,

நான்கு விதமாக வேலை நிலைகளை மனத்தில் கொள்ள வேண்டும்

1) அவசியம் மற்றும் அவசரம்.

a) நாளைய தேர்வுக்கு படிப்பது.

b) ரயிலுக்கு புறப்படுவது( புக் செய்த)

2) அவசியம் ஆனால் அவசரம் இல்லை.

a) புதிய வாய்ப்புகளை உருவாக்குதல்.

b) எதிர்கால வாழ்க்கைக்கு திட்டமிடுதல்.

3) அவசியம் இல்லை ஆனால் அவசரம்.

a) திடீர் பல் வலி மருத்துவரை பார்ப்பது.

4) அவசியமும் இல்லை அவசரமும் இல்லை.

a) பொழுதுபோக்கு அம்சங்கள்.

b) கேம்ஸ் விளையாடுதல்.

c) மொபைல் போனில் ரீல்ஸ் பார்ப்பது.

இப்படியே வேலைகளை எது முக்கியம் , முக்கியம் இல்லை என்று முதலில் தெளிவாக பிரித்து பார்த்து வரிசை படுத்த குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

உங்கள் குழந்தையின் சிந்தனைக்கு ஒரு சில பயிற்சிகள் உண்டு. இவற்றை நீங்களும் செய்து பழகி பெண் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

  • @ திட்டமிட்டு செயலாற்றி வாழ்வில் முன்னேறியவர்கள் யாரையாவது உனக்குத் தெரியுமா?

அவர்கள் பெயர்களை பட்டியலிட்டு அவர்கள் சாதித்த சாதனையை கலை மனதிற்கு கொண்டு வர வேண்டும்.

  • திட்டமிட்டபடி உன்னால் செயல்படுத்த முடிகிறதா?

இல்லையெனில் உன்னில் உள்ள தடைகள் என்ன?

  • திட்டமிட்டு எதிர் வருகின்ற தடைகளை உன்னால் எதிர்கொள்ள முடிகிறதா?

இப்படி கேள்விகளை தனக்குள் தானே கேட்டு அந்த கேள்விகளுக்கு பதில்களை எழுத வேண்டும். இதனைத் தொடர்ந்து சுய ஆய்வு வினாக்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.

  • உன் செயல்கள் முறையான திட்டமிடலால் செய்யப்படுகின்றனவா?
  • ஒவ்வொரு செயலுக்கும் போதுமான கால அவகாசம் தருகின்றாயா?
  • முறையான கண்காணிப்புடன் செயல்கள் செய்யப்படுகின்றனவா?
  • முடிக்கப்படாமல் பல வேலைகள் தேங்கி கிடக்கின்றனவா?
  • முடிக்கப்படாத வேலைகள் என்னென்ன இருக்கிறது?

இப்படி கேள்விகள் கேட்டு சுய ஆய்வு செய்தபின். ஒரு நாளில் முடிக்க வேண்டிய வேலைகளை எந்த அளவிற்கு முடித்திருக்கிறோம் பிறகு ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டபடி முடிக்கிறோமா அதன் பிறகு ஒரு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலைகளை பட்டியல் இட்டு இதுவரை எத்தனை தெளிவாக நாம் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். இப்படி நீங்கள் உங்கள் வேலைகளை வரிசைப்படுத்தி திட்டமிடும்போது உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள் அப்போது அவர்களும் பள்ளி பாடங்களையும் வீட்டு பாடங்களையும் நேரத்தில் முடிக்க கற்றுக் கொள்வதுடன் எளிமையான பல யுத்திகளையும் கையாள்வார்கள்.

தொடர்ந்து பேசுவோம்……..