தொடர்கள்
ஆன்மீகம்
கர்நாடக சங்கீதம் சொல்லும் ராம கதை - கர்னல் டாக்டர் கே.ஹரிகிருஷ்ணன்

20240019154544394.jpg

சிவ பகவான் பார்வதிக்கு எடுத்து சொன்ன ஸ்லோகம் இது. ராமா ராமா ராமா என்றுசொன்னாலே போதும், விஷ்ணுவின் 1000 பெயர்களை சொன்னதின் பலம் கிடைக்கும்என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள் ஆகும். ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் இந்தஅறிவுரையை இன்னும் பல மடங்கு மேலே கொண்டு சென்று விட்டார். தன் வாழ்நாள் முழுக்கமுழுக்க ராமனையே துதித்து, பாடி மகிழிந்தார். சுமார் 24000 பாடல்கள் இயற்றிய அவர், அதில் பெரும்பாலான பாடல்கள் ஸ்ரீ ராமரை பற்றியே எழுதி இருக்கிறார். ஒவ்வொன்றும் ஒருமுத்து. ஒரு வைரம். அவருடைய அலாதியான பக்தி அவர் குறித்த ஒவ்வொரு வார்த்தையிலும்காணலாம்.

2024 ஒரு மிகவும் மகத்துவம் பெற்ற வருடம் என சொல்லலாம். ஏனென்றால் இன்னும் சிலநாட்களில் ராமர் அயோத்தியாவுக்கு திரும்பி வர விருக்கிறார். இந்த ஒரு நல்நாளில் ராமரைதுதிக்க, பூஜிக்க, ஸ்ரீ தியாகராஜஸ்வாமியின் பாட்டுகள் மட்டுமே போறாமோ? எந்த ஒருகச்சேரியும் முழுக்க முழுக்க அவர் இயற்றிய ராமர் பாட்டுகளை வைத்தே பாடலாம் - மங்களம் வரையில். முழு ராமாயணத்தையே அவர் பாட்டு வடிவில் எழுதி நமக்கு ஒருபொக்கிஷமாக தந்திருக்கிறார். உதாரணங்கள் சில :

ராம பக்தி ஸாம்ராஜ்யம்

(மதுரை மணி ஐயர் குரலில்)

(இதில் ராம பக்தி எல்லாவற்றையும் விட பெரிய சொத்து என்று சொல்கிறார் தியாகராஜர்)

ராமா நீ சமானம் எவரு - உனக்கு யார் நிகர் என்று ராமரை புகழ்கிறார் இந்த பாட்டில்

(மகாராஜபுரம் சந்தானம் பாடியது )

நகுமோமு கனலெனி என்ற மிகவும் பிரபலமான பாட்டை திரு பாலமுரளி கிருஷ்ணாவின்குரலில் இங்கு கேட்கலாம் https://www.youtube.com/watch?v=ZY0GQfLXkfE

தியாகராஜர் மட்டுமா ராமரை பாட்டால் துதிப்பது? கர்நாடக சங்கீதத்தில் ராமரை பற்றிபாடாத வாக்கேயக்காரர்களே கிடையாது.

முத்துஸ்வாமி தீக்ஷிதர் சொல்கிறார் :

ரங்கபுர விஹார https://www.youtube.com/watch?v=2rAr9JM-teM (M.S. சுப்புலக்ஷ்மி மனதை தழுவும்விதத்தில் பாடியது )

ராமச்சந்திரம் பாவயாமி ரகுகுல திலகம் - வசந்தா ராகத்தில் அமைந்த இந்த பாட்டைரஞ்சனி காயத்ரி சகோதரிகள் மிக அழகாக பாடி இருக்கிறார்கள்(https://www.youtube.com/watch?v=௫க்ஸிஸ்க்ட்டுப்௬ஞ்)

ஸ்வாதி திருநாள் மகாராஜா முழு ராமாயணத்தையே பாட்டு வடிவில் விவரித்திருக்கிறார் - ஏழு ராகங்களில் இதை மிகவும் அழகாக செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் வரிசைப்படுத்த, MS அம்மா வருகின்ற தலைமுறைக்காக அன்பளிப்பாக தந்திருக்கிறார் https://www.youtube.com/watch?v=ITB8RvvbUrA கேட்டு மகிழலாம்

இன்னும் மிகப்பல பக்தர்கள் ராமனை பாட்டு வடிவத்தில் நமக்கு அறிமுகம்செய்ந்திருக்கிறார்கள் - சங்கீத பிதாமகா புரந்தர தாசர், பாபநாசம் சிவன், பதராசலராமதாஸ், என்று ராமனை பாடவர்களே இல்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்என்றாலும் சமீப காலத்தில் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் எழுதிய மிக அழகான ஒருபாடலை குறித்து விட்டு இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன்

ராமம் பஜே ஷ்யாமம் மனஸா ( மகாராஜபுரம் சந்தானம்) - https://www.youtube.com/watch?v=VVcVFefhos0

கர்நாடக சங்கீதத்தில் மட்டுமில்லாமல் ஹிந்துஸ்தானி, சீக்கியர்களின் குர்பானி, நம்பாரதத்தின் எல்லா பிரதேசங்களின் நாட்டுப்புற பாடல்களிலும் ராம நாமம் ரீங்காரிக்கிறது. அது ஒரு அழியா பொக்கிஷம் என்பதில் சந்தேகம் உண்டா?

ஜெய் ஸ்ரீ ராம்

20240020085210572.jpeg

(credits: kazhiyurvaradanblog.in)

ராமர், தியாகராஜருக்கு சீதை, தன் சகோதரர்கள், மற்றும் ஹநுமானுடன் காட்சி அளிக்கும் சித்திரம்