தொடர்கள்
கவர் ஸ்டோரி
வவ்வ்வ்வ் டுடே.. ! ஆர்.ராஜேஷ் கன்னா

20240826083405888.jpg
விடியற்காலை நேரத்தில் சாலை ஓரங்களில் வாக்கிங் போகும் நபர்கள் அடிக்கடி பார்ப்பது, ஒரு பெண் நாயை சுற்றி 15 ஆண் நாய்கள் லவ் பண்ணிக்கொண்டிருக்கும் காட்சி. யார் தன் காதலி நாயை அடைவது என்று நடுரோட்டில் பயங்கர சண்டை வேறு நடக்கும் .
சண்டையிடும் நாய்கள் சாலையின் நடுவே புகுந்து விடும் போது பைக் ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சாமார்த்தியமாக விபத்து ஏற்படாமல் தப்பி செல்லவேண்டும். வாகன ஓட்டிகள் மட்டுமின்றி வாக்கிங் செல்பவர்களும் இந்த சண்டை போட்டுக்கொள்ளும் நாய்கள் கூட்டம் தங்களுக்கிடையே புகுந்து கடிக்காமல் இருக்க உஷாராக பார்த்து நடக்க வேண்டியிருக்கிறது.
வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை விட தெருநாய்கள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கிறது.

20240826083500465.jpeg
இந்தியா முழுவதும் ஆண்டு தோறும் தெரு நாய்கள் கடியால் 20 ஆயிரம் பேர் ரேபிஸ் நோயால் இறக்கிறார்கள். இது உலகம் முழுவதும் நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய் மரணங்களில் 36 சதவீதம் இந்தியாவில் மட்டுமே ஏற்படுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவிக்கிறது.
நாடு முழுவதும் கரோனா காலத்தில் தெரு நாய்கள் உல்லாசமாக இருந்ததினால் இனப்பெருக்கம் அதிகமாகி ஏறக்குறைய 1 கோடிக்கு மேல் நாய்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. பெண்நாய்கள் ஒவ்வொரு பிரசவத்தில் அதிகபட்சமாக 12 குட்டிகள் வரை ஈனும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! இதனால் தெரு நாய் இனப்பெருக்கம் அதிகரித்து தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் தற்போது 3.50 கோடி நாய்கள் இந்திய தெருக்களில் சுற்றி வருகிறது என்ற புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

20240828075409775.jpeg

தெருநாய்களை கொல்லக்கூடாது என்றும், அவற்றைப் பிடித்து குடும்பக்கட்டுபாடு செய்ய வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு அப்போதைய அமைச்சர் மேனகா காந்தி போட்ட உத்திரவு இன்று வரை பின்பற்றப்படுகிறது. இதனால் நாய்பிடித்து செல்வது நிறுத்தப்பட்டதால் தெருநாய்கள் இனப்பெருக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது.
சென்னை மற்றும் அதன் சுற்றுபுறத்தில் தெருநாய்கள் எங்கும் பெருகிவிட்டது.
சிங்கார சென்னையில் மட்டும் தற்போது 1.8 லட்சம் தெருநாய்கள் சுற்றி வருகிறது .அம்பத்தூர்,பொன்னேரி , கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிக அளவு தெருநாய் தொல்லை ஏற்படுகிறது என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.
சென்னையில் சுற்றி திரியும் தெருநாய்களுக்கு குடும்பக்கட்டுபாடு இதுவரை 27 சதவீதம் செய்து இருப்பதாகவும் மீதம் உள்ள நாய்களுக்கு வரும் காலத்தில் குடும்பக்கட்டுபாடு செய்யப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் தற்போது 35 சதவீத பெண் நாய்களும், ஆண் நாய்கள் 65 சதவீதம் உள்ளதால் பெண்நாய்களை கவர ஆண் நாய்கள் இடையே கடும் போட்டா போட்டி கடி -ஃபைட் நடக்கிறது.

20240826083641772.jpg
வருடந்தோறும் சென்னையில் 50 ஆயிரம் நாய்களுக்கு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
பேருராட்சி, நகராட்சி போன்ற பகுதிகளில் நாய்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருக்க ஒரு வித ஊசியும் போடப்படுகிறது. இதன் மூலம் பெண்நாய்களுக்கு குடும்பக்கட்டுபாடு செய்யப்படுகிறது. இதனால் தெரு நாய்களின் இனப்பெருக்க வேகம் குறைந்துவிடுகிறது என்பது மாநகராட்சி ஊழியர்களின் கருத்தாக உள்ளது.

20240826083708470.jpeg
நாய்கள் ஆடி மாதத்தில் ஜாலியாக இருந்து குட்டிகளை போட்டு விடும். அடுத்து பருவமழை காலம் மற்றும் மார்கழி மாதம் வந்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுபுறங்களில் நாய்களின் லவ்-டுடே இனபெருக்க காட்சிகள் சாலைகளில் நிகழும்.
தமிழகம் முழுவதும் தெருவில் நடந்து போகும் சிறுவர் சிறுமிகளை கூட விடாமல் தெருநாய்கள் கடித்து குதறும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது அச்சத்தினை ஏற்படுத்துகிறது.

2024082608374121.jpg
அதற்குள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களின் இனப்பெருக்கத்தினை போர் கால அடிப்படையில் கட்டுபடுத்த தாலுக்காவிற்கு ஒரு நாய் கருத்தடை நிலையம், மொபைல் நாய் வண்டி கருத்தடை மையம் அமைக்க வேண்டும் என்பதே மிஸ்டர் பொதுஜனத்தின் கோரிக்கையாக உள்ளது.

வவ்வ்வ்வ் டுடே..

20240827210409371.jpg