தொடர்கள்
ஆன்மீகம்
அயோத்தி செல்லும் ராம பக்தர்கள் ! விகடகவி பிரத்யேக பேட்டி - ஸ்வேதா அப்புதாஸ் .

நாட்டின் உள்ள எத்தனையோ கோயில்களின் கும்பாபிஷேகத்தை விட அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் உலகமே வியக்கவைக்கும் ஒன்றாக அமைந்துள்ளது .

20240019181332991.jpeg

ஒரு சிறிய ஊரான அயோத்தியில் இது சாத்தியமா என்று நினைக்கும் தருணத்தில் அயோத்தியா ராமர் கோயில் ஒரு அற்புதம் தான் .

கோவையை சேர்ந்த முகுந்தன் அயோத்தி செல்ல ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார் . அவரை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20240018234234914.jpg

"இவ்வளவு பெரிய ராமர் கோயில் அயோத்தி என்ற குட்டி ஊரில் கட்ட சாத்தியமா என்று தான் எனக்கு தோன்றியது .

1995 ஆம் வருடம் அயோத்திக்கு சென்று வந்தவன் நான் .

நம்ம குன்னூர் நகரில் உள்ள கிருஷ்ணாபுரம் போல ஒரு சிறிய ஊர் .

இப்பொழுது கம்பிரமான ராமர் கோயில் கட்டப்பட்டு ஒரு பெரிய சாதனை நம் நாடு நிகழ்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும் .

கும்பாபிஷேகம் முடிந்தவுடன் கோவை சென்னை பெங்களூரில் இருந்து இலவச ரயில் அயோத்தி செல்வது சூப்பர் அதே சமயம் லாட் போட்டு செலக்ட் செய்த பின் தான் இடம் கிடைக்குமாம் .லக் தான் அதிலும் 55 வயதுக்கு மேல் முன்னுரிமை வழங்குகிறதாம் ரயில்வே துறை என்று ஆதங்கத்துடன் காத்துக்கொண்டிருக்கும் முகுந்தன் மேலும் கூறும்போது .

நான் அப்பொழுது அயோத்தி சென்ற போது பெரிய அளவில் எந்த கோயிலும் இல்லை ஒரு சிறிய பீடம் அதில் ராம் லாலா வீற்றிருந்தார் அது தான் குழந்தை ராமர் .அதன் மேல் ஒரு வெல்வெட் துணி மட்டும் கட்டப்பட்டு இருந்தது .ஒரு வயதான பூசாரி மட்டும் பூஜை விஷயங்களை கவனித்து கொண்டிருந்தார் .

அயோத்தி மிக மோசமான நகரமாக தான் இருந்தது . மிக குறுகிய சாலைகள் .கடைகள் எதுவுமே இல்லை .ஹோட்டல் என்பது சரியாக இல்லை .உணவுக்கு மிக கஷ்டப்பட்டோம் .

தமிழ் பேசுபவர்கள் நிறைய பேர் பார்க்கமுடிந்தது .

பசிக்கு காசி அல்வா மற்றும் கன்னடர்களின் உப்பிட்டு போல பட் பட் என்ற உணவு தான் கிடைத்து .அதை உண்டுவிட்டு ஜமாளித்த நினைவுகள் இன்னும் கண் முன் என்கிறார் .

அயோத்தி நகர் மிக மோசமான ஒன்றாக இருந்தது என்பது உண்மை .குறுகிய குண்டும் குழியும் ஆன சாலைகள் ஒரு நல்ல ஹோட்டல் தங்கும் விடுதி இல்லாத ஊர் .

அங்கு வாழும் மக்களுக்கு வருமானமே சரியாக இல்லை .

ராமர் கோயில் கட்டுமானம் ஆரம்பிக்க நகரே புதிய பொலிவு ஏற்பட்டது தான் ஆச்சிரியம் .

20240018234803651.jpg

ஒரு சிட்டி லெவலுக்கு உயர்ந்துள்ளது அயோத்தி .

அப்பொழுது ஒரு சென்ட் நிலம் ஏழாயிரம் என இருந்தது இப்பொழுது ஆறு லட்சம் .இப்படி நகரே புது பொலிவு ஏற்பட்டுள்ளது .சாலைகள் எல்லாம் பளிச் என்று காட்சியளிக்கிறது .

புதிய ஹோட்டல்கள் விடுதிகள் .நவின ஏர்போர்ட் ரயில் நிலையம் என்று களை கட்டியுள்ளது .

அப்பொழுது நாம் சென்ற போது மிக மோசமாக இருந்த அயோத்தி தற்போது புத்துயிர் பெற்று ஒரு ஆன்மிக சுற்றுலா தலமாக திகழ்வதற்கு முழுக்க முழுக்க காரணம் புதிய பிரமாண்ட ராமர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது .

விரைவில் அயோத்தி சென்று ராமர் கோயிலில் தரிசனம் பெற்று புது நகரை கண்டு வரவேண்டும் என்ற ஆர்வத்தில் துடித்து கொண்டிருக்கிறார் முகுந்தன் .

பி ஜே பி அமைப்பு சாரா தொழிலாளர் மாநில செயலாளர் மைல்சாமி நம்மிடம் கூறும் போது ,

20240018234347500.jpg

" அயோத்தி கரசேவைக்கு சென்று வந்தேன் .அப்பொழுது ஒரு சிறிய கூடாரம் தான் ராமர் கோவில் .இன்று பிரமாண்ட கோயிலாக உயர்ந்திருப்பது இறைவன் செயல் .

20240018234420157.jpg

பதினேழு வருடத்திற்கு முன் என் குடும்பத்துடன் சென்று அங்கு தங்கி வழிபட்டு வந்தது இன்னும் என் நினைவில் உள்ளது .

சிறிய ஊரான அயோத்தியாவில் ராமர் கோயில் எழுந்து உலகத்தின் புராதன சரித்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் .

இராமாயணம் செயல்படுத்தப்பட்டு உயர்ந்து நிற்கிறது .

பிரமாண்ட ராமர்கோயில் சட்டப்படி எழுப்பப்பட்டு அயோத்தியா ஒரு மாடர்ன் நகரமாக மாறியுள்ளது .

20240018234643499.jpg

நினைத்துப்பார்க்காத ஏர் போர்ட் ரயில்நிலையம் ஆச்சிர்யத்திற்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்லவேண்டும் .

20240018234617517.jpg

அயோத்தி சொர்கபூமியாக மாறிவருகிறது .

அமைதியான ராமர் கோயில் இந்திய இதிகாசங்களை காத்து மிக பெரிய சாதனை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவை உயர்த்திய சர்தார் வல்லபபாய் பட்டேல் இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்துகோல் .

ராமர் கோயில் எழுந்துநிற்க லால் கிருஷ்ணா அத்வானி தான் மிக முக்கிய காரணம் பெருமையும் கூட .

ராமர் வனவாசம் முடிந்து 2024 ஆம் ஆண்டு ராமராஜ்யம் உருவான ஒரு மைல்கல் .

20240019181553538.jpeg

2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி உலகத்திற்கு சொர்க்கபூமி கிடைத்துள்ளது " என்று கூறினார் .

அடுத்த மாதம் குடும்பத்துடன் மைல்சாமி அயோத்தி சென்று சொர்கபூமியை கண்கூடாக காண துடித்து கொண்டிருக்கிறார் .!.

20240020093501806.png