தொடர்கள்
ஆன்மீகம்
நவீன உலகின் புனித நகரம்  அயோத்தி – ஆர்.ராஜேஷ் கன்னா

ஸ்ரீராமர் பிறந்த பூமி அயோத்தி… இராமபிரான் பட்டாபிஷேகத்தின் போது அயோத்தி விழா கோலம் பூண்டது போல் தற்போது அயோத்தி மாநகரே விழா கோலம் பூண்டுள்ளது.

புதிய கோயிலில் குழந்தை ராம் சிலை அமைக்க போர்க்கால அடிப்படையில் பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகிறது.

கோயிலில் வடிவமைக்கப்பட்டுள்ள தூண்கள் அனைத்தும் பாலிஷ் ஏற்றும் பணிகள் இரவு பகலாக நடைப்பெறுகிறது. எங்கும் மிஷின்கள் இயங்கும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது.

20240019182723234.jpeg

1992 முதல் அயோத்தி நகர் பாதுகாப்பு பகுதியாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு இருந்ததால் இங்கு குடியிருப்பவர்கள் பலவித இடர்களை அனுபவித்து வந்தனர். தற்போது அயோத்தியில் புதிய கோயில் திறக்கப்பட்ட பின் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முறைப்படுத்தப்பட்டு நிம்மதியாக சாலைகளில் சென்று வரலாம் என்று இங்கிருப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சரயூ நதிக்கரையில் ராமாயணம் காலத்து நிகழ்வுகளை விளக்குகளால் அமைக்கப்பட்டு மாலை வேலைகளில் மங்கள ஆரத்தியை பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியா கோவிலுக்கு செல்லும் குறுகிய சாலைகள் அனைத்தும் விசாலமான சாலைகளாக ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு முதல் தர சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

அயோத்தியா நகரை ஒட்டி கிட்டதட்ட 1200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு பின்னர் 2200 ஏக்கராக உலக தரம் வாய்ந்த சூப்பர் சிட்டி உருவாக்கப்படுகிறது. இதில் சுற்றுலா வருபவர்கள் தங்க ஸ்டார் ஓட்டல்கள் முதல் அனைத்து வசதிகளும் இங்கு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தியில் அமிதாப்பச்சன் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை தங்கள் பண்ணை இல்லங்களை அமைக்க ரெடி ஆகிவிட்டனர்.

மும்பை டெல்லி போன்ற மாநகரில் இல்லாத வசதிகள் கூட அயோத்தியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாடர்ன் ரயில் நிலையம் , உலக தரம் வாய்ந்த ஏர்ப்போர்ட் என்று அயோத்தி நகரம் பொலிவு அடைந்துள்ளது.

சாலையோர கடைகள் எல்லாம் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது , இவர்களுக்கான வாழ்வாதரத்திற்கு உத்திரபிரதேச அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கோரிக்கையும் உள்ளது,.

அயோத்தி மாஸ்டர் ப்ளான் 2031 , விஷன் அயோத்தியா 2047 என 250 திட்டங்கள் தீட்டப்பட்டு இதற்கு ரூ80 ஆயிரம் கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு உத்திரபிரதேச அரசு செய்ய முன்வந்துள்ளது. இந்த திட்டத்தினை நிறைவேற்ற 34 ஏஜென்சிகள் உத்திரப்பிரதேச அரசு தேர்ந்தெடுத்துள்ளது.

20240019183130582.jpg

அயோத்தியில் மியூசியம்,ஆன்மீக தீம் பார்க் , ராமாயண காலத்து காடுகள் என புதியதாக நிர்மாணிக்கப்பட்டு அச்சு அசலாக ராம் ராஜ்ஜியத்தில் பக்தர்களும் , வெளிநாட்டு சுற்றுலாக்களும் ஆனந்த பரவசம் அடையும் விதமாக தத்ருபமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லியில் இருக்கும் புகை மாசு அயோத்தி பகுதியில் இல்லை என்பதால் வரும் காலத்தில் நமது நாட்டின் தலைநகர் அயோத்தியாவாக கூட இருக்கலாம் என்பதால் அனைத்து வசதிகளும் இப்போதே பார்த்து அரசு செய்து கொண்டிருக்கிறது.

2019 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தினமும் 20 ஆயிரம் பேர் அயோத்திக்கு பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இனி நாள் தோறும் 1.50 லட்சம் பேர் அயோத்தி தினமும் வருவார்கள் என்று காவல்துறை கணிப்பாக உள்ளது.

அயோத்தி சகிப்புத்தன்மை கொண்ட நகரம் என ராம் ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் முக்கிய தரப்பினராக இருந்த இக்பால் அன்சாரி தெரிவிக்கிறார்.

உலகம் முழுவதும் இருக்கும் இந்துக்களின் புதிய தலைநகராக அயோத்தி மாறும் என்று இப்போதே பேச தொடங்கி விட்டனர்.

ஆனால் ராமபிரான் பிறந்தபுண்ணிய பூமியான அயோத்தி உலகளாவிய புனித நகரமாக ஜொலிக்க வேண்டும் என்று அதற்கான பணிகள் நடைப்பெற்று வருவது தான் ஹைலைட் .

வரும் காலத்தில் இந்திய சுற்றுலாவிற்கு அயோத்தி நகருக்கு அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

அத்துடன் நம் நாட்டு பொருளாதாரம் பெருமளவில் முன்னேறும் என்பது நிதர்சனம்.

20240020093357521.png