தொடர்கள்
தொடர்கள்
இசைக்கவியின் இதயம் - வாழ்க்கைத் தொடர் - 5 - வேங்கடகிருஷ்ணன்

20231108222600961.jpg

இசை கவியின் இதயம் தொடரில், இந்த வாரத்தில் அவருடைய ஆதர்ச நாயகன் பாரதியாரை பற்றி அவருடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி, பாரதியாராக நடித்ததை பற்றி என பலவற்றையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
பாரதி தன்னை ஆட்கொண்டது எப்படி? அவருடைய கவிதைகளை படிக்கத் துவங்கியது. அதை ரசித்து அனுபவித்து உணர்வுபூர்வமாக அவற்றை மனதில் ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் அவற்றை விளக்கி சொல்லத் துவங்கியது. இது பற்றியும் சுவாரசியமாக விளக்குகிறார்.

20231108222910568.jpg

பல நேரங்களில் அவருடைய கவிதைகளை இசைக்கவி சொல்லும்போது நம்மையும் அறியாமல் அந்த இடத்தில் அந்த முண்டாசுக் கவியை பொருத்திப் பார்க்கிறோம். பாரதி பற்றி பேசத் துவங்கி பாரதி பற்றி படிக்கத் துவங்கி பாரதிலேயே திளைத்து பாரதியிலே ஊறி பாரதியாகவே மாறி இன்று இசைக்கவி முழுக்க பாரதியாராகவே மாறி நிற்கும் காட்சியைத் தான் அவருடைய பாரதியார் நாடகத்தில் நாம் காண்கிறோம்.

20231108223010563.jpg
இந்த நாடகத்தை கண்டு பாராட்டாதவர்களே இல்லை என்று கூறலாம். இந்த மாதம் மேடை ஏற்றப்பட வேண்டி இருந்தது. புயல் மற்றும் மழையினால் ஒத்தி வைக்கப்பட்டு ஜனவரி மேடையேருகிறது. வாய்ப்பு கிடைப்பவர்கள் தவறாமல் சென்று பாரதியை கண்முன்னே கண்டு, ரசித்து, தொழுது, அவரோடு பழகி தங்கள் மனக்குறைகளை தீர்த்துக் கொள்ளலாம்.

20231108223113626.jpg
பாரதியின் படைப்புக்களை முழுவதுமாய் படித்து தீர தன்னால் இயலவில்லை என்று அவர் ஒப்புக்கொள்ளும் போது நம்மையும் அறியாமல் ஆச்சரியம் மேலிடுகிறது ஏனென்றால் தனது ஒவ்வொரு பேச்சு நிலையையும் அவர் பாரதி குறித்து அவருடைய கவிதைகளை மேற்கோள் காட்டி பேசத் தவறுவதே இல்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு புதிய கருத்து வந்து விழுந்து கொண்டே இருக்கும்.

20231108223319282.jpg

சென்னை மயிலாப்பூர் ஆர் கே கன்வென்ஷன் சென்டரில் மாதந்தோறும் அவர் நடத்தும் நிகழ்ச்சியான மாதந்தோறும் மகாகவி மிக அற்புதமான ஒரு நிகழ்வாகும் பாரதியை அவருக்குப் பிடித்த அவர் ரசித்த கோணங்களில் இருந்து நமக்கு அறிமுகப்படுத்தி நம்மையும் பாரதியோடு கைகோர்க்க வைத்து விடுவார். இந்த மாதம் அடுத்த வாரம் நிகழவிருக்கும் இந்த நிகழ்வில் பாஞ்சாலி சபதத்தின் பல்வேறு கதாபாத்திரங்கள் குறித்து பேசவிருக்கிறார் என்பதை நாம் தெரிந்து கொண்டபோது நம்மையும் அறியாமல் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணம் நம் மனதில் மேலோங்கியது.

20231108223448860.jpg

தனக்குப் பிடித்த கவிதை என்று பாரதி குறித்து இசைக்கவி சொல்லும்போது அந்தக் கவிதைகள் பிரவாகமாய் அவருள் ஊற்றெடுத்து நம் முன்னே அருமையாய் கொட்டுவதை அவருடைய இந்த காணொளியில் காணலாம்.

தொடருவோம்..