2024ல யாரு வருவாரு?
2023 டிசம்பர்ல செமி ஃபைனல் மூணுக்கு ஒண்ணு ங்கற ரேட்ல பாஜக மூன்று மாநிலங்கள்ள தனிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற இந்திரா காங்கிரஸ் தெலுங்கானாவில் வெற்றி பெற்றது.
பாஜக ராஜஸ்தான். மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கரில் தனக்காக்கிக்கொண்டது.
இத்தனைக்கும் கருத்துக் கணிப்புகள் பாஜாகவிற்கு மத்திய பிரதேசத்தில் வரும், ராஜஸ்தானும் சத்திஸ்கட்டிலும் தெலிங்கானாவிலும் காங்கிரஸுக்கு கை தூக்கினர் அனைத்து செய்தி சான்ல்களும்.
இந்த ககக்கள் செய்த நிறுவனங்கள் எல்லோருக்குமே பாஜாக தான் மூன்றில் வெற்றி பெறுகிறது என்று தெரிந்தும் ஏனோ கிடைத்த கணிப்புகளை தாறு மாறாகத் தந்தனர் என்றே தெரியவில்லை என்ற பூடகம் உடைந்தது.
கக சொல்றது ஒண்ணு, நாமா இத ஒரு மாசமாக திரித்தது இன்னொண்ணு. கத கந்தலாகும் போல இருக்கேன்னு ஒரு கக கம்பேனி தனது ரிப்போர்ட்டையே மாற்றிக் கொண்டனராம். அதனாலத்தான் ஒரு ஆங்கில சானலைத் தவிர வேறு எவரும் தேர்தல் முடிவுக்ளுக்கு அருகில் கூட வரவில்லை.
இண்டி கூட்டணியில் ரெண்டு மாசத்துக்கு முன்ன புதுசா ஜாதி வாரி ஜனத்தொகை கணக்கெடுப்பு எடுக்கக் குரல் ஓங்கி கொடுத்தனர். அதுதான் நாட்டுக்கு நல்லது, எத்தனை ஜாதி வாரியன கணக்கெடுப்போ அப்படியே அனைத்து இட ஒதுக்கீடுகளும் அமைய வேண்டும் என்று குரல் நாடு முழுதும் ஏற்றுக்கொண்டது போன்ற பிரமையை ஃபூ ஃபூ என ஊதி அதை விட்டால் நாட்டில் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு வேறு எந்த உபாயமும் இல்லை என்ற ஒரு மாயையில் நாடு மூழ்கியது. ந்யுஸ் சானல் பார்க்கிரவர்களுக்கும், பேப்பர் படிப்பவர்களுக்கும் அது தான் நிஜமோ என்று மூக்கின் மேல் கை வைத்தனர். உள்ளே சில தலைவர்கள் இதற்கு இணங்கினாலும், பாஜாகவோ நாடு இந்த ஜாதி அரசியலைத் தாண்டி டெவலப்மென்ட் அஜெண்டாவில் போய்க்கொண்டிருக்கிறது என்ற தனது கொள்கையில் அறுதியிட்டு இறுதியான முடிவென அதில் உறுதியாக இருந்தது.
ஆக ரிசல்ட் அன்றைக்கு சானல்களின் அலசலில் முதலில் ஒலித்தது
அடுத்து அலசப்பட்ட காரணி இண்டி கூட்டணி எங்கே?
இது நாள் வரையில் கடந்த ஒன்பதரையாண்டுகளில் பாஜாகவின் ஜும்லா, ஆதாவது பொய் வாக்குறுதிகள் என்று எதிர்கட்சியினர் எடுத்ததெற்கெல்லாம் குறை கூறிக்கொண்டிருந்தனர். பாஜாகவினரோ, இது நீங்கள் கூறுவது போலே ஜும்லா அல்ல, மோடியின் கேரண்டி. மோடி கேரண்டி வேலை செய்கிறது. மோடி இருந்தால் முடியாதது இல்லை என்று கடந்த ஐந்தாண்டுகளாக வேகமாக ஓங்கி ஒலிக்கப்பட்டு வரும் முழக்கம் தான். மோடி ஹை தோ மும்கின் ஹை என்ற வாசகம் தான் அது.
ஜும்லா Vs மோடி கேரண்டி என்ற பட்டி மன்றத்தில் பாஜாகவுக்கும் இண்டி கூட்டணிக்கும் காரசார போட்டி வாசகங்களாகும்.
சனாதன ஒழிப்பு என்று தெற்கே விடப்பட்ட கூக்குரலில் இண்டி கூட்டணி ஆழமாக குழம்பி பிரிந்து, அதன்பின் அந்த கூட்டின் கூட்டம் இன்னும் நடந்த பாடில்லை என்பது ஒரு புறமானலும், இந்த சமீபத்திய மாநிலத் தேர்தலில் இண்டி கூட்டணி கட்சியினரின் பலம் இதில் அதிகம் இழக்கப்பட்டது என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
சனாதன ஒழிப்பால் ஒழிந்தது இண்டி கட்சியினர் தான்.
சநாதன தர்ம ஒழிப்பில் தானும் பங்கெடுப்பதாய் நினைத்து திமுக எம்பியின் குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் வட மாநிலங்களை (டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த நிலையில்) கோமூத்திரம் குடிக்கும் பிரதேசங்கள் என்று ஏளனித்துவிட்டு, நாடு தழுவிய இண்டி கூட்டணி முதலாய் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஏற்கெனவே சநாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அரசின் இரு அமைச்சர்கள் பங்கு கொண்டு அறிக்கை விட்டதே இண்டி கூட்டணியில் விரிசல் விட்டிருந்தது. தற்போது, இன்னும் மேட்டர் சீரியஸாகியிருக்கிறது.
AAPக்கு ஆப்பு
இதுவும் ஒரு ஸ்பெஷல் விவகாரம் தான்.
நடந்து முடிந்த ராஜஸ்தான், மபி மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் முறையே 85, 66, 54 சீட்டுகளில் போட்டியிட்டு 205 அவுட் ஆஃப் 205, செண்டம் வாங்கியது.
சிலருக்கு, ஏன் பல பல பலருக்கே தெரியாது ஆப்பு இந்த தேர்தல்களில் போட்டியிட்டதா என்றே!!!
அனைத்திலும் நோட்டாவுக்குக்கீழே டெபாஸிட் இழந்து..
இத்தனைக்கும் ஆப்பு இண்டி கூட்டில் அங்கம் வகிக்கும் கட்சி.
இண்டி கூட்டணி(க்கு) என்னாச்சி?
தெலுங்கானாவில் அசைக்கமுடியாத கேசீஆர் நிலை குலைந்து போனாரே.
கடந்த ஒரு வருஷமா அவரு தனக்கு கிடைத்த ஹேஷ்யங்களில் அடுத்த பிரதமாராவதற்குத் தனக்குத் தான் தகுதி இருக்குன்னு அகில இந்திய அளவில் இரண்டாவது அணியா(யோ), மூன்றாவது அணியா(யோ) ஆரம்பிக்க தனது டீஆர்எஸ் (தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி) என்ற கட்சி பேரைக் கூட மாற்றிவிட்டார் பீஅர்எஸ் (பாரத ராஷ்ட்ரீய சமிதி)என்று. இங்கு மும்பையில் கூட ஏகப்பட்ட விளம்பரப் பலகைகளில் கேசீ அர், பீஅர்எஸ்சுக்குகாக சிரித்துக்கொண்டிருந்தார் தொப்பியுடன்.
டில்லியிலும் ஹைதராபாதிலும் இந்தியாவிலுள்ள கட்சிகளை இந்த நாடு தழுவிய கூட்டணியில் சேரச் சொல்லி அறை கூவலிட்டு சேர்த்துக்கொண்டு ராட்சஸ பேனர்கள் வைத்து மாநாடுகள் நடத்தினார். இதில் என்ன காமேடி என்றால் இண்டி கூட்டணியில் இருப்பவர்கள் தான் அங்கும் இருந்தனர். கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, விடுதலை சிறுத்தை என்ற கட்சிகளின் தலைவர்களின் கட் அவுட்டுக்கள் மேடையிலிருக்கும் படங்கள் என நிறைய எல்லோரும் பார்த்திருக்கின்றார்கள்.
ஒரு குடும்ப அரசியலுக்கு சங்கு ஊதியாச்சி என்ற தொனியில் டீவீக்களில் அரசியல் விமர்சகர்கள் விமரிசனம் வைத்தனர்.
ஆம்..இந்த தேர்தலில் மோடியின் ஸ்டெப்புக்குத்தான் மாநிலங்கள் பின் ஸ்டெப்புக்கள் போட்டன.
நாட்டு நாட்டு நாட்டு நாட்டு…….
செமி ஃபைனலில் ஐந்தில் மூன்று பாஜாக. எனில் 2024ல் ????
தீயா வேல பாக்கணும் குமாரு – இது நம்ம அரசியல்வாதிகள் அனைவருக்கும் தான்.
Leave a comment
Upload