தொடர்கள்
தொடர்கள்
கருத்து கதிர்வேலன்

20231109002807128.jpeg

இன்னும் பல தோல்விகளை சந்திப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருக்க வேண்டும் பிரதமர் மோடி.

பாராளுமன்றத் தேர்தல சொல்றாராம் அதுதான் ஏற்கனவே தெரியுமே ? !!

சினிமா டயலாக் பேசி கைதட்டல் வாங்குற விஷயம் இல்லை இது நடிகர் விஷாலுக்கு மேயர் பிரியா கண்டனம்.

மேயர் பிரியா மேடத்துக்கு மீம்ஸ்க்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்ற விஷயம் இந்த நடிகருக்கு தெரியாது.

கல்குவாரிகள் நடத்தக்கூடாது பெருமுனை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.

அப்புறம் அமலாக்கத்துறை கிராமத்தில் வந்து சோதனை நடத்தும் நமக்கு தான் அசிங்கம்.

நான்கு மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் 33 சதவீதத்திற்கும் குறைவான அளவுக்கு பெண் சட்டமன்ற உறுப்பினர்கள்.

அப்ப பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது சும்மா தானா ?

பாஜக அதிமுக கட்சிகள் எங்கள் மீது அன்பைப் பொழியும் கட்சிகள். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

அன்பெல்லாம் சரி தலைவரே தொகுதி எத்தனை தருவாங்க அதை கேளுங்க ?

லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வளமான ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.

தலைவரே எதிர்காலம் அப்புறம் முதல்ல கூட்டணி இருக்குதா பாருங்க.

இந்தியாவில் கரும்புக்கு அதிக விலை தரும் மாநிலம் என்ற பெயரை பஞ்சாப் பெற்றுவிட்டது..குறைந்த விலைத் தரும் மாநிலம் என்று அவப்பெயரை தமிழக அரசு பெற்றுவிட்டது டாக்டர் ராமதாஸ்.

என்னது அவப்பெயரா ? இது திராவிட மாடல் அரசு டாக்டர் ? !

யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி தரப்படும் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

இதைத்தான் அமலாக்கத்துறை சொல்கிறது.

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் எங்கள் செயல்பாடு திருப்தியாக இல்லை. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ்.

நீங்க இப்படி உண்மைய சொன்னா ராகுல் காந்தி கோச்சிக்க போறாரு !

இந்தியா கூட்டணி கட்சிகளை காங்கிரஸ் கட்சி ஒதுக்கி வைத்தது தோல்விக்கு காரணம் நிதீஷ் குமார் கருத்து.

உங்களை பிரதமர் வேட்பாளர் சொன்னா எல்லாம் சரியா போயிடும் அப்படித்தானே முதல்வரே ?

அதிகார பசி பேராசை காங்கிரஸ் தோல்விக்கு காரணம் கேரள முதல்வர்.

உங்கள் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்பியிடம் இந்த விஷயத்தை சொல்லிடாதீங்க காம்ரேட்.

மழை நின்றவுடன் உடனே மீட்பு பணி உதயநிதி ஸ்டாலின் உறுதி.

அது இருக்கட்டும் அமைச்சரே அந்த 4000 கோடி என்ன ஆச்சு ?

அதிமுக அலுவலகத்தில் புகுந்தது மழை வெள்ளம்.

எல்லாம் ஓபிஎஸ் சதி வேலை தான் காரணம்.

முதலமைச்சருக்கு அமித்ஷா உறுதி.

என்ன உறுதி அமலாக்கத்துறை இனிமே வராதுன்னு சொல்லிட்டாரா ?

மீட்பு நிவாரணப் பணிகளில் 14 ஆயிரத்து 887 பேர்கள் களப்பணியார்களாக முதல்வர் தகவல்.

கணக்கு கரெக்ட்டா இருக்கனுமாம்.

தேர்தல் தோல்வி விரக்தியை நாடாளுமன்றத்தில் காட்டாதீர்கள் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்.

முயற்சி பண்ணிப் பார்க்கிறோம் பிரதமரே ?

ஜெயலலிதா ஆட்சி அமைக்க உறுதியேற்போம் டிடிவி தினகரன்.

சசிகலா நீக்கம் செல்லும் உயர்நீதிமன்றம்.

தெலுங்கானாவில் ஆளுங்கட்சி ஏன் தோற்றது என்பது அனைவருக்கும் தெரியும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன்.

பாரதிய ஜனதாவுக்கு தெரியுமா அதை சொல்லுங்க ?

எழுபது ஆண்டு பழக்கம் மாறவே மாறாது காங்கிரஸ் கட்சியை விளாசிய பிரதமர் மோடி.

அவங்களும் உங்கள மாதிரி தான் விடுங்க !

தேர்தல் தோல்வி எதிரொலி கட்சிப் பதவியை உதறிய மிசோரம் முதல்வர்.

ரொம்ப அப்பாவி அரசியல் தலைவர் போல இருக்கு.

மத்திய பிரதேச மக்களின் மனநிலை காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தது. அப்படி இருந்தும் எப்படி பாஜக வென்றது என்று மக்களிடம் கேட்க வேண்டும். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல் நாத்

அதான் ஓட்டு போட்டு பதில் சொல்லிட்டாங்க மறுபடியும் போய் என்னத்த கேட்க போறிங்க ?