தொடர்கள்
அரசியல்
கருத்து கதிர்வேலன்

20230822165406553.jpeg

தெலுங்கு தேசகட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தவறு செய்திருக்க மாட்டார் ரஜினிகாந்த்.

இப்போ இந்த வாய்ஸ் தேவையா ?

அதிமுக பாஜக கூட்டணி கணவன் மனைவி உறவு போன்றது எச். ராஜா

நீங்க இப்படி சொல்றீங்க அண்ணாமலை விவாகரத்து வரை விஷயத்தைக் கொண்டு போயிட்டாரே !!

காவேரி விஷயத்தில் உரிமையை பெற்றுத்தருவோம் துரைமுருகன்.

எப்போ பயிர் எல்லாம் காஞ்சி கருகின பிறகா ?

இந்தியா கூட்டணி கட்சிகள் சனாதனத்தை எதிர்க்கவில்லை ஏன் சீமான் கேள்வி.

நாங்க ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒருத்தரை வச்சிருக்கோம். சனாதனம் உதயநிதி டிபார்ட்மெண்ட் அவர் தான் பேசுறாரே.

துரை வைகோ தேர்தலில் போட்டியிடமாட்டார் வைகோ அறிவிப்பு.

ஆமா ஸ்ட்ரைட்டா முதல்வர் பதவி ட்ரை பண்றார் !!

33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்.

தேர்தல் வரும் போது தான் எங்களுக்கு மக்கள் பற்றிய ஞாபகமே வரும்.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி நேர்முக உதவியாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

இப்ப எல்லாம் நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளை ஜெயிலுக்கு அனுப்புவதில் பிஸியா இருக்காங்க போல.

இட ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின்.

இந்த விஷயத்தை எப்பவாவது எதிர்க்கட்சிகள் கூட்டணியில் பேசி இருக்கிறீர்களா ?

சாலைகள் மோசமாக உள்ளதால் உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்.

இந்த அறிவுறுத்தல் தான் ரொம்ப நாளா நடக்குது ஆனா சாலை இப்பவும் மோசமா தான் இருக்கு.

அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்.

அமலாக்கத்துறை வந்து சொன்னா கூடவா.

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதம் 2500 ரூபாய் வழங்கப்படும்.

இப்ப எல்லா கட்சிகளும் மகளிர் மேல ரொம்ப பாசமா தான் இருக்காங்க எல்லாம் தேர்தல் தான் காரணம்.

ஓ பி சி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் சோனியா காந்தி அறிவுறுத்தல்.

இதோ ஆரம்பிச்சிட்டாங்களே !

சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமையை ஒழித்து விடலாம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அண்ணனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை சனாதனம்.

அடுத்த ஆண்டு நீட் தேர்வு தேதி அறிவிப்பு.

அப்போ நீட் விலக்கு சும்மா பேச்சுக்கு தானா !

அதிமுக பாஜக போஸ்டர் யுத்தம் தொடங்கியது.

ச்சும்மா தமாஷ்