தொடர்கள்
பொது
"கணபதி பப்பா மோரியா" – மும்பையில் கணபதி வராரு கொண்டாட்டம் தாராரு - பால்கி

20230822211456422.jpg

மும்பை கண்பதி கொண்டாட்டங்கள் – கணபதி வாராரு கொண்டாட்டம் தாராரு

கண்பதி – வினாயக சதுர்த்தி திருவிழா மும்பைய்க்கு ஒரு பெருவிழா. பத்து நாள் நடக்கும். மும்பை மட்டுமில்லை, இந்த விழாவை அந்த பத்து நாளும் மஹராஷ்ட்ரா முழுவதுமே கொண்டாடும்.

ஐபிஎல் விழாவை விட பெரிய பண புழக்கமும், வருமானம் ஈட்டித்தரும் விழா இது.

அலங்காரம், டூரிசம், உணவு தயாரிப்பு, போக்குவரத்து, விளக்குகள் போன்ற பெரிய தொழில்கள் முதற்கொண்டு, சிலை தயாரிப்பு, பூ, பழம் விற்பனை, மேள தாளங்கள் இசை விழா நடத்தும் வாசிப்பு வல்லுனர்களின் பங்களிப்பு போன்றவை என சுமார் 20,000 முதல் 25,000 கோடி ரூபாய் வரையிலான வியாபார பெருக்கம் இந்த சமயத்தில் இதனூடே நடக்கும்.

விநாயகருக்கு பிடிக்கப்படும் மோதகம் எனும் இனிப்பு பண்டம் தயாரிப்பு இந்த சமயத்தில் மிக அதிகமாக தயாரிக்கப்படும்.

லால் பாக்ச்சா ராஜா அமரும் பந்தல் சுமார் 15 லட்சம் பேர் வந்து கண்டு செல்வார்கள். இந்த சிலை வடிவமைப்பு காப்புரிமை பெறப்பட்ட ஒன்று.

செல்வ செழிப்பிற்கு GSB சேவா மண்டல் வடாலா பகுதி கணபதி. 22 கோடி பெருமானமுள்ள நகைகளை போட்டிருப்பார் இவர்.

இந்த விழா பந்தல்கள் காப்பீடும் செய்யப்பட்டிருக்கும்.

அந்தேரிச்சா ராஜா 5 கோடி ரூபாய்க்கும்

லால்பாக்ச்சா ராஜா 50 கோடி ரூபாய்க்கும்

GSB சேவா மண்டல் வடாலா பகுதி கணபதி 270 கோடி ரூபாய்க்கும் காப்பீடு செய்யப்பட்டிருக்கிறதாம்.

மும்பையில் மட்டும் சுமார் 15,000 - 16000 விழா பந்தல்களில் இந்த கணபதி சிலைகளை வைப்பார்கள். இவைகளனைத்தையும் ஒருவரால் எப்படி இந்த பத்து நாளில் பார்த்துவிட முடியும் என்று நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்.

பெரியதும் சிறியதுமாக சுமார் ஏழு லட்சம் வினாயகர் சிலைகள். இந்த விழாவில் கோடானு கோடி மக்கள் பங்கேற்பது ஹைலைட்.

வினாயக சதுர்த்திக்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னமே இந்த தயாரிப்பில் கை தேர்ந்த கலைஞர்கள் நகரின் தாற்காலிகமான பந்தலமைப்பில் ஆரம்பித்து விடுவார்கள்.

ஆக கண்பதி எங்க ஊருக்கு வந்தாச்சு. ஊரே கொண்டாட்டத்தில் இருக்கு.

இல்லம் தோறும் மராட்டிய மக்கள் மட்டுமில்லாமல் நகரை தன் வாழ்விடமாகக் கொண்டுவிட்டவர் அனைவரும் முதல் நாள் முதல் ஒற்றை படை நாட்கள் என தங்களில்லத்தில் வினாயகர் சிலையை வரவேற்று விழா நடத்துவார்கள். காலை மாலை பூஜை, பஜனைகள், பிரசாதம் விநியோகிப்பு சாப்பாடு விருந்து நடக்கும். குடியிருப்பு சொசைட்டிகள் தரப்பிலும் வினாயகர் சிலையை வரவேற்று விழா நடக்கும்.

இதோ வினாயகர்கள் தத்தம் இருப்பிடத்திற்கு எப்படி வரவேற்கப்படுகிறார்கள் பார்க்கலாம்.....

கொண்டாட்டங்களை உங்கள் கைபேசியில் கொண்டு வரும் ஆவலில் அடுத்த வாரமும்...