கருப்பழகி
நான் சமூக வலைதளங்களில் மேக்கப் இல்லாமல் என் புகைப்படங்களை பகிர்ந்ததை சிலர் என்னை நான்கருப்பாக இருக்கிறேன் என்று கேலி செய்தனர் என்று அறிந்தேன்.எனக்கு இப்போது 38 வயதாகிறது ஆனாலும் கட்டுக்கோப்பான தோற்றத்தில் இருக்கிறேன் என்கிறார் தேசிய விருது பெற்ற நடிகை ப்ரியா மணி.
குடும்ப கதையாம்
ராஜேஷ். எம் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு பிரதர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் ஜெயம் ரவிக்கு ஜோடி பிரியங்கா மோகன் இது ஒரு குடும்ப கதையாம்.
நிவேதா பெத்துராஜ்
தெலுங்கு இந்தி என்று போய்க்கொண்டிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜிடம் தமிழ் பக்கம் வரவே மாட்டீங்களா என்று கேட்டபோது தெலுங்கு சினிமாவில் ஹீரோயினிக்கு முக்கியத்துவம் தருகிறார்கள், தமிழில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்.
கௌரவ நயன்தாரா
லவ் டுடே நடிகர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு கௌரவ வேடம்.
கமல்
இந்தியன் 2 படத்தில் கமலுடன் சித்தார்த் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது தவிர சித்தா படத்தில் பத்து வயது பெண் குழந்தைக்கு சித்தப்பா வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் இந்தப் படத்தில் தி கிரேட் இந்தியன் கிச்சன் பட பிரபலம் நிமிஷா சஜயன் தூய்மை பணியாளராக நடிக்கிறார்.
பாரதிராஜா இளையராஜா
பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கும் முதல் படம் மார்கழி திங்கள் இந்தப் படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரதிராஜா இளையராஜா இணைந்திருக்கிறார்கள். ஷியாம் செல்வன் கதாநாயகன், கதாநாயகிகளாக ரக்க்ஷனா, நக்க்ஷா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
துல்கர் சல்மான்
வாத்திப்பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் லக்கி பாஸ்கர். இவருக்கு ஜோடி தமிழில் கொலை படத்தில் நடித்த மீனாட்சி சவுத்ரி. இது ஒரு பான் இந்தியா படம்.
தமன்னாவின் காதலர்
சூர்யாவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் விஜய் வர்மா. இவர் நடிகை தமன்னாவின் காதலர்.
சாக்க்ஷிஅகர்வால்
சாக்க்ஷி அகர்வால் நாயகியாக நடிக்கும் படம் சாரா. இந்தப் படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. இதில் இவருக்கு ஆக்ஷன் நாயகி வேடம் இதில் விஜய் விஸ்வா நாயகன். இது தவிர யோகி பாபு ரோபோ சங்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
நித்தியா மேனன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று எல்லா மொழிகளிலும் நடிக்கும் நடிகை நித்யா மேனன் கடைசியாக தமிழில் நடித்தது தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில். இப்போது மர்டர் மிஸ்ட்ரி என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். விவேக் ஓபராய், ஆஷித் வித்யார்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
டாப்ஸி
ஆடுகளம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை டாப்ஸி .சமீபத்தில் இந்தியில் பிசி நடிகை. 3.5 கோடியில் சொகுசு கார் வாங்கி இருக்கிறார் நடிகை டாப்ஸி.
விடாமுயற்சி
விடாமுயற்சி படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்கிறார்கள். அஜித்துக்கு இந்த படத்தில் இரண்டு நாயகிகள் திரிஷா மற்றும் ஹூமா குரேஷி வில்லனாக சஞ்சய் தத் என்கிறார்கள்.
Leave a comment
Upload