இந்தியாவிலேயே முதன்முறையாக - மேற்குவங்க மாநிலத் தலைநகரான கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் பணி கொல்கத்தா மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மூலம் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதற்காக கொல்கத்தாவில் இருந்து ஹவுரா மேம்பாலம் பகுதி வரை ஹூப்ளி ஆற்றின் நீருக்கு அடியே சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைக்குள் கடந்த ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகள், லண்டன் மற்றும் பாரிஸ் இடையேயான யூரோஸ்டார் ரயில்கள் போலவே கட்டமைக்கப்பட்டு உள்ளன. கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு நகரப் பகுதியை இணைக்கும் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் மொத்தம் 16 கிமீ தூரம் கொண்டது.
ஆற்றுத் தண்ணீருக்கு அடியில் மட்டும் சுமார் 4.8 கிமீ தூரத்தில் உள்ள எஸ்பிளனேடு பகுதியை, ஹவுரா மைதானத்தோடு இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயங்க துவங்கும்போது, ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
'வரும் அக்டோபர் மாத இறுதியில் எஸ்பிளனேடு-ஹவுரா மைதான் சந்திப்பு இடையேயான வழித்தடத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தரப் பரிசோதனை செய்த பிறகு, இவ்வழித்தடத்தில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் மெட்ரோ ரயில் போக்குவரத்து துவங்கும்' எனக் கூறப்படுகிறது.
இதுக்காகவே கொல்கத்தா போகணும் போலிருக்கிறதே.....
அப்படியே நம்ம கூவம் ஆத்துக்கடியிலயும் ஒரு ரயிலு உடுங்கப்பா......
Leave a comment
Upload