அந்தக் காலத்தில் ராஜாக்கள் தான் அடிக்கடி தலைநகரை மாற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
பிரச்சாரத்தின்போது, தனது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், 'ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததும் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும்' என ஜெகன்மோகன் ரெட்டி உறுதியளித்து இருந்தார். பின்னர் ஆட்சியில் அமர்ந்ததும் அமராவதி, கர்னூல், விசாகப்பட்டினம் (வைசாக்) ஆகிய 3 தலைநகரங்கள் அமைக்கப்படும்' என்றும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
'முதல் தலைநகரான அமராவதியில் சட்டசபை கூட்டங்கள் நடக்கும். கர்னூலில் உயர்நீதிமன்றம் செயல்படும். விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகம் அமைக்கப்படும்' என குறிப்பிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசுகையில், "ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் மாற்றப்படும்…" என்று அறிவித்தார்.
தற்போது சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், 'இனி ஆந்திர மாநிலத்தின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றப்படுகிறது' என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார். அதன்படி, தற்போது 'ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் மாற்றப்படுகிறது' என அரசு தரப்பில் முறையாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 'தசரா தினமான வரும் அக்டோபர் 24-ம் தேதி முதல் ஆந்திராவின் புதிய தலைநகராக வைசாக் எனும் விசாகப்பட்டினம் செயல்பாட்டுக்கு வரும். அங்குதான் ஆந்திர அரசின் தலைமை செயலகம் செயல்படும். இதனால் அடுத்த மாதத்துக்குள் அனைத்து அரசு துறை அலுவலகங்களையும் விசாகப்பட்டினத்துக்கு மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தலைநகர் மாற்ற அறிவிப்புக்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பும், எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, ஆந்திர மாநிலத் தலைநகர் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்ற நிலுவையில் உள்ளது என்பதால், புதிய தலைநகர் மாற்ற விவகாரம், தற்போது ஆந்திராவில் அரசியல் விமர்சகர்களின் விவாதப் பொருளாக மாறியுள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.
எத்தனை அரசு ஊழியர்களின் பிள்ளைகள் பள்ளிகள் மாற்ற வேண்டி வரும், இடம் மாற்ற வேண்டு வரும்...
அது சரி... மாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது. !!
Leave a comment
Upload