தஹி ஹண்டி - உறியடி : மும்பையில் ஜன்மாஷ்டமி கொண்டாட்டம்
தஹி ஹண்டி என்பது கிருஷ்ணர் பிறந்த நாள் என்கின்ற கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழாவின் ஒரு பகுதி. இது கிருஷ்ணரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அன்று அவருக்குப் பிரியமான, பானையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தயிரையும் வெண்ணையும் எடுத்து தின்னும் வைபவத்தை பிரதிபலிக்கும் விதமாக பாரதம் முழுதும் தயிர் பானை உடைப்பை – தஹி அண்டி உடைப்பை காலம் காலமாக கொண்டாடி வருவது நமது நாட்டின் பரம்பரை.
அந்த வகையில் மும்பையில் இது மிகவும் பிரபலமான நிகழ்வாகும்.இந்த பிரபலம் வெளி நாடுகளிலிருந்தும் இளைஞர்களை சுண்டி இழுக்கிறதே. ஃப்ரான்ஸ், ஸ்பெய்ன் போன்ற நாடுகளின் குழுக்கள் கூட இந்த போட்டிகளில் பங்கு பெற வந்து விடுகிறார்கள்.
மனித பிரமிடுகள் அமைப்பதில் நமது மும்பை இளைஞர்களிடம் தான் உலக கின்னஸ் சாதன இருக்கிறது.
இந்த உறியடியில் பங்கு பெரும் இளைஞர்களை கோவிந்தாக்கள் என்று இங்கு அழைப்பார்கள். அவர்கள் சிறுவர்கள் முதல் நாற்பது நாற்பத்தைந்து வயதினரும் அடங்குவர். பெரும்பாலும் பல கம்பெனிகளில் நல்ல வேலை செய்பவர்களே இவர்கள். சில முதலாளிகளும் பங்கு கொள்வர். எப்போதும் போல இந்த தஹி அண்டிகளை ஸ்பான்சர் செய்வதும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவதிலும் கூடவே அதில் பங்கு பெறுவதில் சின்னத்திரை முதல் சினிமா நடிகர்களும் உண்டு.
இந்த தஹி ஹண்டிகளின் பரிசு உயரத்திற்கற்ப அதிகரிக்கும். 10,000 முதல் 25,00,000 ரூபாய் வரை அறிவிக்கப்படும். இதில் மதம் பார்க்காமல் எல்லா முக்கிய கட்சிகளுமே ஆதரவளிப்பதில் பெருமை கொள்வார்கள். சில பிரபல இடங்களில் அமைச்சர்கள் முதல் கட்சியின் பெரிய தலைகள் வெள்ளை வெளேர் என்று காந்தி தொப்பி சஹிதம் பைஜாமா ஜிப்பாவில் ஆஜராகிவிடுவார்கள்.
திருவிழாவின் போது, எதிரும் புதிருமாய் அண்ணாந்து நிற்கும் தீப்பெட்டி கட்டடங்களில் வலுவான தாம்பு கயிரால் கட்டப்பட்டு நடுவானில் அந்தரங்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் மலர்களாலும் வண்ணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மோர் நிறைக்கப்பட்டிருக்கும் மண் பானையை, 'கோவிந்தாக்கள்' அல்லது தஹி ஹண்டி பங்கேற்பாளர்கள், வண்ணமயமான ஆடைகளை அணிந்து, பல அடுக்கு மனித பிரமிடுகள் போன்ற கட்டமைப்பை உண்டாக்கி, உடைப்பது தான் நிகழ்வு.
குட்டி பய்யன் உறியடி பாருங்களேன். எவ்வளவு ஆனந்தம்?
ஒரு குழு எப்படி தனது திட்டத்தை ஆரம்பித்து வெற்றி பெறிகிறது என்ற முறையான வீடியோ இது கீழே.
இங்கு இது ஒரு பெரிய விழாவானதால் இந்த தஹி ஹண்டியை ஒரு சாகச விளையாட்டு அந்தஸ்து பெற்றதாய் போன வருஷமே மாநில அரசு அறிவித்திருந்தது. மேலும், அது வேலை வாய்ப்பில் முக்கிய புள்ளிகளையும் பெறும் என்பது சிரப்பிற்குரிய அம்சமாகும்.
மனித பிரமிடுகளை உருவாக்கும் போது பங்கேற்பாளர் துரதிர்ஷ்டவசமாக இறந்தால், அவரது/அவள் உறவினர்கள் மாநில அரசிடமிருந்து இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் பெறுவார்கள். பலத்த காயம் அடைந்த வீரருக்கு ரூ.7 லட்சமும், எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்றும் மாநில முதல்வர் ஏக்னாத் ஷிண்டே அறிவித்திருந்தார்.
'கோவிந்தாக்கள்' (பங்கேற்பாளர்கள்) காயம் அடைந்தால் அவர்களின் மருத்துவ சிகிச்சை செலவையும் மாநில அரசு ஏற்கும் என்பதும் கவனிக்கவும்.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தஹி ஹண்டிகள் நகரம் முழுவதும் பல வீட்டு சங்கங்கள், சாலைகள், சந்திப்புகள் மற்றும் பொது மைதானங்களில் தரையில் இருந்து பல அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருப்பதப் பார்க்கலாம்.
குறிப்பாக பரேல், லால்பாக், வொர்லி, தாதர், பாண்டூப், முலுண்ட், கோரேகான் மற்றும் அந்தேரி போன்ற மராத்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இந்த பண்டிகையின் உற்சாகம் அதிகமாக இருக்கும்.
வண்ண வண்ண உடைகள் அணிந்து, லாரி, டெம்போ, பஸ், இரு சக்கர வாகனங்களில் கோவிந்தாஸ் இப்பகுதிகளுக்கு சென்று தஹி ஹண்டிகளை உடைப்பதில் பங்கு கொள்கின்றனர்.
இந்த நிகழ்வு நடக்கும் இடங்கள் திரு விழாக் கோலமே பூண்டிருக்கும். ஒரு பக்கம் அலரும் சினிமா பாடல்கள், மற்றொரு பக்கம் சில கலை நிகழ்ச்சியும் நடந்த வண்ணமிருக்கும். பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) வெளியிட்ட அறிவிப்பின்படி, மனித பிரமிடுகளை உருவாக்கும் போது கோவிந்தர்கள் விழுந்து காயம் அடைந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 125 படுக்கைகளை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
பார்வையற்ற குழந்தைகளும் இந்த தஹி ஹண்டி நிகழ்வில் பங்கேற்ற சில புகைப்படங்கள் இதோ:
இந்த கொண்டாட்டங்களில் இளம் பெண்கள் சளைக்காமல் பங்கு கொள்கின்றனர்.
கொஞ்சம் ஆண்களையும் கவனிப்போம்....
எட்டடுக்கு மனித பிரமிடு பாருங்க.
ஏழடுக்கு பிரமிடு
ஐந்தடுக்கு பிரமிடு
சிமெண்ட் கட்டடம் உயரமா மனித பிரமிட் உயரமா?!
தயிர் சட்டியை பதம் பார்க்கிறான் சிறுவன்.
வெற்றி மழையில் ஆன்ந்தம் கொள்கிறான்
வெற்றி பெற்றபின் மனித பிரமிடுகள் சரியும் சில போட்டோக்கள் கீழே:
கோவிந்தா !! கோவிந்தா !!
Leave a comment
Upload