தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா-லைட் பாய்

நோ சான்ஸ்

20230621185555748.jpg

இரண்டாவது திருமணமா வாய்ப்பே இல்லை வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்

20230621185724365.jpg

ஆர்யாவுக்கு ஏகப்பட்ட கேர்ள் ஃபிரண்ட்ஸ் அவரைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது என்கிறார் விஜய் ஆண்டனி.

டாப்ஸி

2023062118585642.jpg

நடிகை டாப்ஸி இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். ஒரு ரசிகர் நீங்கள் இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு நான் இன்னும் கர்ப்பிணி ஆகவில்லையே என்று கூறிவிட்டு கலகலவென சிரிச்சி இருக்கிறார் இதில் ஏதோ உள்குத்து இருப்பது போல் தெரிகிறது.

தயாரிப்பாளர் அட்லி

இயக்குனர் அட்லி இந்தி படம் தயாரிக்கப் போகிறாராம் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் மற்ற விவரங்கள் விரைவில்

ஸ்ரீ லீலா

20230621190330960.jpg

கிஸ் என்ற படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீ லீலா இப்போது தெலுங்கு பட உலகின் வேண்டப்பட்ட நாயகி இப்போது இவர்தான் அதாவது ராஷ்மிகா உள்பட எல்லோரையும் ஓரம் கட்டி விட்டார் .இப்போது அவர் கைவசம் ஏழு படங்கள் 2024 வரை அவர் கால்ஷீட் டைரி நிரம்பிவிட்டது.

சஞ்சிதா ஷெட்டி

சூது கவ்வும் படத்தில் நடித்த சஞ்சிதா ஷெட்டிக்குவெற்றிப்படங்களில் நடிக்க ஆசை ஆனால் வெற்றி படங்கள் என்றால் எது என்று அவருக்கு தெரியவில்லையாம் யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்

அதிதி சங்கர்

20230621190754537.jpg

மாவீரன் படத்தில் அதிதி சங்கர் அதிக காட்சிகளில் இல்லை என்றாலும் பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு தவறாமல் கலந்து கொள்கிறாராம் இதை கதாநாயகன் சிவகார்த்திகேயன் பெருமையாக சொல்கிறார்