தொடர்கள்
அரசியல்
துணை முதல்வரின் மனைவியின் 'மிருக' பாசம் - மாலா ஶ்ரீ

20230620235621780.jpeg

மகாராஷ்டிர மாநில அரசின் துணை முதல்வரும் அம்மாநில பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தேவேந்திர பட்னாவிஸ். இவரது மனைவி அம்ருதா, அவ்வப்போது உடல்நலம் குறித்து பல்வேறு பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது வழக்கம்.

சமீபத்தில், தனது வலைதள அபிமானிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், அவரது 2 கைகளிலும் பாம்புகள் சுற்றியுள்ளன. அவற்றை அவர் முத்தமிட்டு கொஞ்சுவது போல் ‘போஸ்’ கொடுத்துள்ளார். மற்றொரு படத்தில், தனது வலது கையின்மேல் ராட்சத பல்லி ஊர்ந்து செல்வதை அம்ருதா ஆச்சரியமாக பார்ப்பது போலிருந்தது. அதன்கீழே ‘மிகவும் ஆபத்தான, விஷத்தன்மை கொண்ட விலங்குகள்’ என கேப்ஷனாகப் பதிவிட்டுள்ளார்.

தற்போது இப்பதிவுகள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, அம்ருதாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக, ‘மகாராஷ்டிர மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவும்போது, இத்தகைய விபரீத விளையாட்டு அவசியம்தானா?’, ‘விஷத்தன்மை கொண்ட உயிரினம் என்பதை அறிந்தும், அவற்றுடன் ஏன் விபரீத போஸ் கொடுக்கிறீர்கள்?’ என அம்ருதாவை வலைதளவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஒரு அரசியல்வாதியின் மனைவி எத்தனை கொடிய மிருகங்களைப் பார்த்திருப்பார் ?? அவருக்கு தெரியாததா என்ன ????