தொடர்கள்
சோகம்
கேரளா அச்சன் உம்மன் சாண்டி - ஸ்வேதா அப்புதாஸ் .

20230621191614162.jpeg

முகநூலில் ' என் அச்சன் உம்மன் சாண்டி மரிச்சி ' என்று அவரின் மகன் சாண்டி உம்மன் தகவல் கொடுக்க .இந்த செய்தியை பலர் பகிர 18 ஆம் அதிகாலை கேரளா மாநிலமே சோகத்தில் மூழ்கியது .

பெரும்பாலான வீடுகளில் காலை பிரேக் பாஸ்ட் கூட தயாரிக்கவில்லை .

வழக்கமாக ஆலயங்களுக்கு வழிபாட்டுக்கு செல்லும் அம்மச்சிகள் செல்லாமல் அழுகையுடன் தெருக்களில் குவிய ஆரம்பித்து விட்டனர் .

20230621002317758.jpg

ஏஷியா நெட் , மலையாள மனோரமா செய்திகளை பார்க்க முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறப்பு செய்தி கேரளாவை உறைய வைத்து விட்டது .

மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்களின் அழுகுரல்கள் தொடர்ந்தன .

உம்மன் சாண்டி 53 வருடமாக எம் .எல் .ஏ பதவியை தக்கவைத்தவர் .

2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைய ஏ .கே .அந்தோணி பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து உம்மன் சாண்டி கேரளா முதல்வரானார்.

20230621191751749.jpg

மீண்டும் 2011 ஆம் தேர்தலில் இரண்டாவது முறையாக கேரள முதல்வரானார் .

2016 மற்றும் 2021 தேர்தல்களில் மிக பெரிய வெற்றி பெற்று தொடர்ந்து 12 தேர்தல்களில் வெற்றி பெற்ற சாதனையாளர் இப்படி ஒரு அபார சாதனையை இந்தியாவில் வேறு யாரும் படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

உம்மன் சாண்டி கடந்த சில வருடங்களாகவே தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் .மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி சென்று வந்து பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற 18 ஆம் தேதி காலை அவரின் உயிர் பிரிந்தது .

தான் இறப்பதற்கு முன் தன் ஆலய குருக்களை அழைத்து வர சொல்லி பிராத்திக்க கேட்டுக்கொள்ள அவர்களும் வந்து சிறப்பு பிராத்தனை செய்துள்ளனர் .

உம்மன் சாண்டியின் மறைவு செய்தி சோனியா காந்திக்கு தெரிய பெங்களூர் இந்திரா நகரில் முன்னாள் அமைச்சர் ஜான் வீட்டில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு சோனியா காந்தி .

20230621192025716.jpg

20230621002928911.jpg

ராகுல் , முதல்வர் ஸ்டாலின் , கர்நாடக முதல்வர் சித்தராமையா நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள் .

மதியம் விமான மூலம் திருவனந்தபுரம் கொண்டுவரப்பட்டு அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டு பின் தலைமை செயலக தர்பார் ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்பட முதல்வர் பினராய் விஜயன் ,அந்தோணி , சென்னிதாலா மற்றும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர் .

உம்மன் சாண்டி முதல்வராக இருந்த போது தினமும் வழிபாட்டுக்கு செல்லும் செயின்ட் .ஜார்ஜ் சர்ச்சில் வைக்கப்பட்டு சிறப்பு பிராத்தனை நடத்த பட்டது .

19 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து அவரின் உடல் கோட்டையும் நோக்கி நீண்ட பயணத்தை தொடர வழிநெடுகிலும் மக்களின் கூட்டம் திக்குமுக்காட செய்து விட்டது .

எங்க அச்சன் போய்விட்டார் .எங்களுக்கு ஒரு காட் பாதர் மறைந்து விட்டார் .

வழிநெடுகிலும் அழுகுரல்கள் கேட்டவண்ணம் இருந்தது .

ஒரு பெரிய கே .எஸ் .ஆர் .டி .சி . ஏ .சி .பஸ்சில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு .மக்கள் கண்ணீர் கடலில் மிதந்து வந்தார் உம்மன் சாண்டி .

ஒரு அரசியல் தலைவர் முதல்வர் மேல் இப்படி ஒரு பாசம் மரியாதை இருப்பதை ஆச்சிரியதுடன் பார்க்கிறார்கள் இந்திய அரசியல் பிரமுகர்கள் .

உம்மன் சாண்டி ஒரு சாதாரண உடன் பிறப்பாக தான் வலம் வந்துள்ளார் .

கேரள மூத்த வழக்குரைஞர் சந்தியாவை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20230621003606739.jpg

"எனக்கே மிக ஆச்சிரியம் அவரின் உடல் திருவனந்தபுரம் வரும் போதும் சரி வந்தவுடனும் சரி மக்கள் கதறி அழுவதை பார்த்து இப்படி ஒரு தலைவருக்கு கண்ணீர் கடல் கொதித்து எழுந்துள்ளது .தங்கள் குடும்பத்தில் ஒரு அச்சன் மரித்தது போல இருந்தது .

அவர் செய்த பல உதவிகளை சொல்லி அழுகிறார்கள் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அழுவதை பார்க்க முடிந்தது

அவரை நான் நேரில் சந்தித்து பேசியதுண்டு ஒரு முதல்வர் போல இல்லாமல் சாதாரண மனுஷன் போல பேசுவார் .

எல்லா மக்களுக்கும் ஏராளமான உதவிகள் செய்துள்ளார் .

நிரப்பா என்ற திட்டத்தை முதலில் அறிமுகம் செய்தவர் உம்மன் சாண்டி . பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டம் பெண்களுக்கு மிக பெரிய பாதுகாப்பை வழங்கியது .

கொச்சி மெட்ரோ மற்றும் விழிச்சம் போர்ட் இவர் கொடுத்த பரிசு .

அடிப்படை மக்களுக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம் .அவர் இந்த மக்களின் முதல்வர் என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது .

என்னை அறியாமலே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததை உணரமுடிந்தது அவரின் ஆன்மா மக்களுடன் கலந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும் " என்று கூறினார் .

உம்மன் சாண்டி ஒரு மாநிலத்தின் முதல்வர் போல இல்லை ஒரு கிறிஸ்துமஸ் இரவு ஆலயத்திற்கு குடும்பத்துடன் செல்ல ஆலயத்தில் ஏகப்பட்ட கூட்டம் இடமில்லை முதல்வர் ஆலயத்தின் முகப்பு படிக்கட்டில் அமர்ந்து திருப்பலியில் கலந்து கொண்டதை இன்னும் மறக்கவில்லை .

கொட்டாரக்கரையில் ஒருவர் கூறும் போது , ' எங்க அச்சன் எங்களை விட்டு போகவில்லை எங்களோடு தான் இருக்கிறார் " .

ஒருமுறை கேரள முதல்வரை ஒரு பொது கூட்டத்தில் ஷிவானி என்ற சிறுவன் உம்மன் சாண்டி ஒரு நிமிடம் எனக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்க அதிகாரிகள் அதிர்ச்சி அடைய முதல்வரோ படு கூலாக அருகில் சென்று என்ன வேண்டும் உனக்கு என்று கேட்க ,என் நண்பன் அமல கிருஷ்ணனுக்கு வீடு இல்லை ஒரு வீடு வேண்டும் நீங்க கட்டி தருவீர்களா ? என்று கேட்க உடனே அதற்கான உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பிக்க மூன்று லட்சத்திற்க்கு வீடு கட்டி கொடுத்து முதலவர் உம்மன் சாண்டியே நேரில் வந்து வீட்டை திறந்து வைத்ததை இது வரை மறக்கவில்லை கேரள மக்கள் .

தான் வசித்த வீட்டின் அருகில் யாராவது இறந்த விட்டால் முதல் ஆளாக சென்று உதவி செய்வது இவர் தான் .

அதிலும் முதல்வராக இருந்த போதும் சாதாரண ஆளாக இறப்பு திருமண வைபவங்களில் யாராக இருந்தாலும் கலந்து கொள்வது இந்த தலைவர் தான் என்கிறார்கள் கேரள வாசிகள் .

இப்படி ஏராளமான உதவிகளை முதல்வர் உம்மன் சாண்டி செய்துள்ளார் .

லட்ச கணக்கில் மக்கள் வெள்ளமாக விடிய விடிய கண்ணீருடன் உம்மன் சாண்டியை வழியனுப்பி வைத்தனர் .

20230621004235698.jpg

வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு தான் அவரின் உடல் தாங்கிய கே எஸ் ஆர் டி.சி பஸ் கோட்டயம் வந்து சேர்ந்தது .

தான் வசித்த புதுப்பள்ளி வீட்டிற்கு உடல் வைக்கப்பட்டு பின் புதுப்பள்ளி திருநக்கரை மைதானத்தில் லட்ச கணக்கில் மக்கள் அஞ்சலி செலுத்த பகல் 2.30 மணிக்கு நடக்கவிருந்த அடக்கம் நிகழ்வு இரவு எட்டு மணிக்கு தள்ளி போனது .

கோட்டயம் புதுப்பள்ளி செயின்ட் ஜார்ஜ் ஆர்தடாக்ஸ் சர்ச்சில் உடல் எடுத்து வரப்பட்டு சிறப்பு அடக்க ஆராதனை உயர் பிஷப் தலைமையில் நடைபெற்ற பின் முக்கிய பிரமுகர்களின் நன்றி அஞ்சலி உறை நிகழ்ந்தது .

நாற்பது எட்டு மணிநேரத்தை கடந்தும் அடக்கம் நடக்கவில்லை .வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கடைசியாக உம்மன் சாண்டியை கண்டு கண்கலங்கி நன்றி தெரிவித்தார்கள் .

20230621004345609.jpg

உம்மன் சாண்டியின் இறுதி உடலுக்கு அஞ்சலி செலுத்த டெல்லியில் இருந்து ராகுல் காந்தி வந்து சேர தாமதமானது .இரவு பத்து மணிக்கு அவர் வந்து சேர இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு முன்னாள் முதல்வரின் மனைவி மரியம்மாவை ராகுல் அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறி தேற்றினார் .மகன் சாண்டி உம்மன், மகள்கள் மரிய உம்மன் மற்றும் அச்சு உம்மனுக்கு ஆறுதல் கூறிவிட்டு முன்னாள் ராணுவ அமைச்சர் அந்தோணி அருகில் சென்று அமர்ந்தார் .

ராகுல் காந்திக்காக தான் உம்மன் சாண்டி காத்திருந்தார் .

20230621005204730.jpg

பின்னர் செயின்ட் ஜார்ஜ் ஆலய கமிட்டி குழுவினர் உடலை சவப்பெட்டியில் வைத்து உள் ஆலயத்திற்கு எடுத்து சென்று சிறப்பு இறுதி ஆராதனை நடைபெற்று குருக்கள் கல்லறையில் உம்மன் சாண்டி உடல் அடக்கம் செய்யப்பட்டது .

20230621005241703.jpg

கோவையில் இருந்து விஷ்ணு என்ற இளைஞர் தனியாக ஜெட்விமானத்தில் திருவனந்தபுரம் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் .

கேரளாவின் நல்ல தலைவரை இழுந்து விட்டோம் என்று கேரளா மக்கள் வருத்ததுடன் உள்ளனர்.