தொடர்கள்
மருத்துவம்
துண்டித்த தலை ஒட்டியது - இஸ்ரேல் டாக்டர்கள் சாதனை !!

20230620235450837.jpeg

பாலஸ்தீன நாட்டில் வசிக்கும் 12 வயது சிறுவன் சுலைமான் ஹசன் , கடந்த சில மாதங்களுக்கு முன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவனது சைக்கிள்மீது ஒரு கார் வேகமாக மோதியதில் சுலைமான் ஹசனின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. எப்படியெனில், அவரது தலையில் உள்ள மண்டையோட்டின் அடிப்பகுதி மற்றும் முதுகுத்தண்டுக்கு இடையிலான பகுதி துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் சிறுவன் சுலைமான் ஹசனின் தலை, வெறும் தோலினால் மட்டுமே ஒட்டிக்கொண்டிருந்தது!

இந்நிலையை மருத்துவ அறிவியல் ரீதியாக ‘அட்லாண்டோ-ஆக்ஸிபிடல்’ எனும் மூட்டு இடப்பெயர்வு எனக் கூறுகின்றனர். இதையடுத்து, கடந்த மாதம் ஆபத்தான நிலையில் பாலஸ்தீனிய சிறுவன் சுலைமான் ஹசன் ஏர்-ஆம்புலன்ஸ் விமானம் மூலமாக இஸ்ரேல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

இஸ்ரேல் நாட்டின் பிரபல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஓஹாட் ஈனாவ் கூறுகையில், ‘‘பாலஸ்தீனிய சிறுவன் உயிரை காப்பாற்ற பலமணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த சிறுவன் உயிர் பிழைப்பதற்கு 50 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்தது. எனினும், அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்தது. தற்போது அவர் குணமாகி தலைநிமிர்ந்து உயிருடன் நடமாடிக் கொண்டிருப்பதை பார்த்து நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

அச்சிறுவனுக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றாலும், அவருக்கு நோய்தொற்று ஏற்படுவதை தடுக்க, இச்செய்தியை வெளியிடவில்லை. தற்போதுதான் அவரை பற்றி பொதுவெளியில் தெரிவித்துள்ளோம்!’’ என்று டாக்டர் ஓஹாட் ஈனாவ் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிறுவனின் தலையை அறுவைசிகிச்சை நேராக்கி, உயிரை காப்பாற்றிய இஸ்ரேல் டாக்டர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உண்மையிலேயே மறு ஜென்மம் என்பது இது தான். !!!